எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு தினம்: ஐநா சிறப்பு தபால்தலை வெளியீடு! 

2

இந்தியாவின் பெருமைக்குரிய, உலகமே பாராட்டும் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு நினைவு சிறப்பு தபால்தலையை ஐக்கிய நாடு சபை வெளியிட்டு கவுரவித்துள்ளது. எம்எஸ், ஐநா’வில் 50 வருடங்களுக்கு முன் தனது சங்கீத கச்சேரியை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1.20 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தபால்தலையை வெளியிட்ட ஐநா தபால்தலை நிர்வாகம், எம் எஸ்’ இன் நினைவாக அவரது படத்துடன் நீல சின்னம் பதித்து வெளியிட்டுள்ளனர். இது அவரது 100ஆவது பிறந்தநாள் நினைவை சிறப்பிக்க செய்யப்பட்டுள்ளது. 

இந்த தபால்தலை ஐநா தலைமையகத்தில் வெளியிடப்பட்டது. அதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் அற்புதமான கச்சேரியுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. அவர் எம்.எஸ் அம்மாவின் ரம்மியமான பாடலும், காந்தியின் விருப்பப்பாடலான ‘ராம் தன்’ பாடலை பாடி அனைவரையும் நெகிழவைத்தார். 

சுதா ரகுநாதன் ஏழு மொழிகளில் எம்.எஸ்’இன் பாடல்களை பாடி பார்வையாளர்களின் மனதை கவர்ந்தார். ஐநா, எம்.எஸ் படம் அச்சிடப்பட்டுள்ள முதல் தபால்தலையை சுதா ரகுநாதனுக்கு வழங்கி சிறப்பு செய்தது என்று பிடிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இளம் வயதில், குஞ்சம்மா தனது முதல் பாடல் வகுப்பை அம்மாவிடன் கற்கத் தொடங்கினார். பின்னர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்’ இடம் முறையாக சங்கீதம் பயின்றார் குஞ்சம்மா என்கின்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி. பண்டிட் நாரயணராவ் வ்யாஸ் என்பரிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் கற்றார். மழாவராயாநேண்டல் சுப்புராம பாகவதரிடம், பல்லவி பாட கற்றார். இதைத் தொடர்ந்து, மேடைகளில் தனது அம்மா வீணை வாசிக்க கச்சேரிகள் செய்ய தொடங்கினார்  எம்.எஸ். அவருக்கு அப்போது 10 வயது மட்டுமே. ஆனால் அந்த வயதிலேயே மேல்ஸ்தாயியில் காம்போஜியை இயல்பாக பாடி அனைவர் நெஞ்சத்தையும் கவருவார். 

மதுரையை சேர்ந்த எம்.எஸ். 1930இல் சங்கீதத்தில் மேலும் பரிமளிக்க, தனது தாயுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். அப்போது, தியாகராஜன் சதாசிவம் என்ற சுதந்திர போராட்ட தியாகி மற்றும் பத்திரிகையாளரை சந்தித்து 1940இல் மணமுடிந்தார். சதாசிவம், எம்.எஸ்’ இன் தெய்வீக திறனை அடையாளம் கண்டு அவரின் திறமையை வெளியில் கொண்டுவர பல முயற்சிகள் எடுத்தார். தேசிய ஒற்றுமை மற்றும் சுதந்திர போராட்ட பாடல்களையும் பாடவைத்தார். 

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவம் தனது நண்பர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜகோபாலச்சாரி ஆகியோருக்கு சுப்புலட்சுமியை அறிமுகப்படுத்தினார். 1941 இல் மகாத்மா காந்தியின் முன்பு சில பஜன் பாடல்களை எம்எஸ் பாட ஏற்பாடு செய்தார் சதாசிவம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1944 இல், சுப்புலட்சுமி, கஸ்தூரிபாய் மெமோரியல் ட்ரஸ்ட்’க்காக நிதி திரட்ட ஐந்து இடங்களில் தனது கச்சேரியை நடத்தினார். இதில் திறண்ட நிதி, ஊரக இந்திய பெண்களின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டது. இதேபோல் பல இடங்களில் சமூக வளர்ச்சிகளுக்காக நிதி திரட்ட கச்சேரிகளை தொடர்ந்து நடத்தினார் எம் எஸ். 

1937 முதல் 1947 வரை, எம் எஸ் திரைப்படங்களில் நடித்தார். மீரா, சேவா சதன், சகுந்தலை உட்பட பல ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்தார். சாவித்ரி என்ற படத்தில் நாரதர் கதாப்பாத்திரத்தில் ஆண் வேடத்தில் நடித்து எம் எஸ், கல்கி தமிழ் வார இதழை தொடக்க நிதி திரட்டினார். அவர் நடித்த மீரா படத்தின் மூலம் நாடு முழுதும் ரசிகர்களை பெற்றார். 1950இல் எம்எஸ்.சுப்புலட்சுமியை தெரியாத இந்தியரே இருந்திருக்க முடியாது. 

பின்னர் சங்கீதத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு எடுத்த எம்எஸ், ஹிந்தி பஜன் பாடல்கள் மூலம் தெற்கை தாண்டி இந்திய அளவில் பிரபலமானார். இத்தனை உச்சத்தில் இருந்தும், எம்எஸ் ஒருமுறை கூட மீடியாவிற்கு பேட்டி அளித்ததில்லை. 

பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ள சுப்புலட்சுமி, பத்மபூஷன் (1954), தி ராமொன் மாக்சேசே விருது (1974), குடியரசுத்தலைவர் விருதான பத்மவிபூஷன் (1975), காலிதாஸ் சம்மன் (1988), கோனாரக் சம்மன், சங்கீத நாடக அகாடமி சிறப்பு, தி ஹபீஸ் அலி கான் விருது, தேசிய ஒற்றுமை மற்றும் தேசிகோட்டமா இந்திரா காந்தி விருது என்று அடுக்கிய அவர், இறுதியாக 1996 இல் நாட்டின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ பெற்றார். அவர் விருதுகள் மூலம் பெற்ற ஏராளமான செல்வத்தை, தேவையானோருக்கு தானமாக வழங்கியது அவரது நல்லுள்ளத்தை காட்டுகிறது. 

1996 ஆம் ஆண்டு ஐநா’வின் அப்போதைய பொது செயலாளர், யூ தண்ட், சுப்புலட்சுமியை, ஐநா அசெம்ப்ளியின் பாட அழைப்பு விடுத்தார். இந்த பெருமையை பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் 70’வது சுதந்திர தின நினைவு மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நூறாவது பிறந்தநாள் நினைவு தினச்சிறப்பை கெளரவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவுடன் ஐநா சபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

கட்டுரை: Think Change India