7 பெண்களால் 80 ரூபாயுடன் துவங்கப்பட்டு 800 கோடி வருவாய் ஈட்டும் 'லிஜ்ஜத் பப்பட்' 

2

பெண்களுக்கு ஆதரவான கூட்டுறவு தொழில் அமைப்பான 'லிஜ்ஜத் பப்படம்' இந்தியாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் பப்படம், மசாலாக்கள், கோதுமை மாவு, சப்பாத்தி, சோப்பு பவுடர், சோப்பு கட்டிகள், திரவ வடிவிலான சோப்பு போன்ற பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறது.

வெறும் ஏழு பெண் ஊழியர்களுடன் துவங்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் 81 கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் 43,000-க்கும் அதிகமான பெண் ஊழியர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் வருவாய் 800 கோடி ரூபாயாகும். இந்தியா முழுவதும் செயல்படும் இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. 

அதன் 81 கிளைகளும் 27 பிரிவுகளும் இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளது. ஒரே கட்டிடத்தில் ஏழு சகோதரிகளுடன் துவங்கப்பட்டு, இந்தியா முழுவதும் விரிவடைந்து 43,000 சகோதரிகள் இந்நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.

ஏழு பெண்கள் அடங்கிய குழுவாக இந்த முயற்சி துவங்கப்பட்டது. இவர்களுக்கு சகன்லால் கரம்சி பரேக் 80 ரூபாய் கடன் வழங்கினார். பப்படத்தின் தரம் சிறப்பாக இருந்ததால் அது எல்லோர் வீட்டிலும் பிரபலமாகி விட்டது. ஆரம்பகட்ட வெற்றிக்குப் பிறகு வணிகம் விரிவடைந்தது. அதிகம் பேரை பணியிலமர்த்தி இந்தப் பெண்கள் சிறு வணிகத்தை ஒரு கூட்டுறவு அமைப்பாக மாற்ற சகன்லால் வழிகாட்டினார். 

துவக்க நாட்களில் மழை காரணமாக இந்தப் பெண்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உற்பத்தியை நிறுத்திவிட வேண்டிய சூழல் நிலவியது. ஏனெனில் அவர்கள் ஃப்ரெஷ்ஷாக தயாரித்த பப்படங்களை வெயிலில் காய வைத்தனர். ஆனால் இறுதியாக மேம்படுத்தப்பட்ட சமையல் முறையை அறிமுகப்படுத்தி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.

இந்நிறுவனத்திற்கு பப்படம் தயாரிக்கும் மையம் மட்டுமல்லாமல் மாவு பிரிவும் மும்பையின் வாஷியில் மசாலா பிரிவும் பாந்திராவில் லிஜ்ஜத் பிரிவும் காஷி மிரா சாலையில் பாலிப்ரோப்பிலீன் அமைப்பும் பூனே சனஸ்வாடியில் சோப்பு பவுடர் மற்றும் கட்டிகள் உற்பத்திப் பிரிவும் உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா, இந்தியா போன்ற நாடுகள் பெண் தொழில்முனைவோர் அதிகம் உருவாக ஊக்குவித்துள்ளதாக 2015-ம் ஆண்டு பிஎன்பி பாரிபஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் உள்ள தொழில்முனைவோரில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் பேர் பெண்கள்.

கட்டுரை : THINK CHANGE INDIA