தடகள வீரர் 'புளுமென் ராஜன்' புற்று நோயை வெல்ல உதவிக்கரம் நீட்டுங்கள்! 

0

தடகள வீரர் மற்றும் மாநில சாதனையாளரான புளுமென் ராஜன் தற்போது குரோனிக் மைலாய்ட் லுகேமியா (Chronic Myeloid Leukemia) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது எலும்பு மஜ்ஜை சம்பந்தப்பட்ட புற்றுநோயாகும்.

இவர் மெட்ராஸ் கிறிஸ்து கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். விளையாட்டிலும் இசையிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் 400 மீட்டர் தடகள போட்டியில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தற்பொது வேதாலயம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். டிசம்பர் 2014-ல் திடீரென அவருக்கு ரத்த அணுக்கள் குறைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னே குரோனிக் மைலாய்ட் லுகேமியா நோயால் பாதிக்க பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரோனிக் மைலாய்ட் லுகேமியா என்பது குணப்படுத்தக்கூடிய நோயே. இதன் முதல் கட்ட சிகிச்சை வாய்வழி கீமோதெரபி ஆகும். இருப்பினம் பூரண குணமடைய தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். புளுமென், தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளார். அதற்கு அவர் DNA வுடன் ஒத்து போக கூடிய சரியாக பொருந்தும் ஸ்டெம் செல் வேண்டும்.

"புளுமெனுக்கு இன்னும் கொடையாளர் கிடைக்கவில்லை. சிகிச்சைக்காகவும் உலகளவில் டோனரை தேடவும் புளுமென் நாளை கொல்கத்தா செல்லவுள்ளார்," என்கிறார் புளுமெனின் சகோதரி.

ஒரு லட்சத்தில் ஒருவற்கே ஸ்டெம் செல் பொருத்தம் இருக்கும், அது மட்டும் இன்றி இந்த சிகிச்சைக்கு 40 லட்சம் வரை செலவாகும். புளுமென் குடும்பத்தாரால் அவ்வளவு பணம் ஈட்ட முடியவில்லை எனினும் அவர்கள் மனம் தளர வில்லை. புளுமெனுக்கு ஏற்ற ஸ்டெம் செல் டோனரை தேடி வருகின்றனர். பணத்திற்காக milaap.org (https://milaap.org/fundraisers/help-blumen) மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.

நம்முடன் பேசிய அவரது சகோதரி பின்கி,

"டோனர் கிடைக்காவிட்டாலும் சிகிச்சையை துவங்க, முதலில் நிதி தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இணையதளம் மூலம் நிதி திரட்டுகிறோம் என்று காட்டிய பிறகு கொல்கத்தாவிற்கு வரச் சொல்லியுள்ளனர் என்றார். எங்கள் கையில் குறைவான நேரமே உள்ளது அதிக நேரம் காத்திருக்க முடியாது..."

பத்துக்கு பத்து பொருந்தும் ஸ்டெம் செல் கிடைக்காவிட்டாலும் ஓரளவு பொருந்திய செல்லுடன் சிகிச்சையை தொடர உள்ளனர். புளுமென் ராஜன் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டுவோம், முடிந்தவரை உதவிக்கரம் நீட்டுவோம்.