வாட்ஸ் அப்’ல் உண்மையற்ற செய்திகளை கண்டறியும் புது வழி விரைவில் அறிமுகம்!

5 சேட்களுக்கு மட்டுமே செய்தியை ஃபார்வர்ட் செய்ய வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது...

0

சமீபகாலமாக வாட்ஸ் அப்பில் பரவி வரும் வதந்திகளால் பல கலவரங்கள் நடந்து வருகிறது. குழந்தை கடத்தலில் தொடங்கி பல விதமான ஃபேக் நியூஸ், எல்லா நாடுகளிலும் அதிகம் பகிரப்படுகிறது. இதனால் பலர் உயிர் இழக்கும் நிலைக்கூட ஏற்படுவதுண்டு; இதனையொட்டி வதந்தி செய்திகளை சரிபார்க்கும் அமைப்பை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. மெக்சிகன் பொது தேர்தல் போது பயன்படுத்தப்பட்ட அமைப்புதான் தற்பொழுது இந்தியாவிற்கு வரவுள்ளது.

மெக்சிகோ நாட்டின் பொதுத் தேர்தலின் போது வரும் செய்திகளின் உண்மையை அறிவதற்காக ‘Verificado model’ ஒன்றை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப் நிறுவனம். இதே அமைப்பைத்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தள்ளனர். எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கை படி,

இந்திய தேர்தல் ஆணையத்துடன் வாட்ஸ் அப் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி பொதுத் தேர்தலின் போது வதந்தி செய்திகள் பரவாமல் இருக்க வாட்ஸ்அப் நிறுவனம் உதவும் என்றும் அதே சமையும் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.

முக்கியமாக தேர்தல் நடக்கவிற்கும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரும் தேர்தல் செய்திகள் அனைத்தையும் வெரிபிகேசன் மாடல் மூலம் சரி பார்த்து பிறகு அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம்.

இந்திய அரசு பரவலாக பரவி வரும் வதந்திகளை வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்படுத்த வேண்டும் என அந்நிறுவனத்திற்கு விண்ணப்பம் விட்டிருந்தது. இதனையொட்டி குழந்தை கடத்தல், கொலை போன்று வரும் உணமையற்ற வதந்தி செய்திகளை தவிர்க்க 5 சேட்களுக்கு மட்டுமே செய்தியை ஃபார்வர்ட் செய்ய வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வதந்திகளை கண்டறிய இயந்திர கற்றல் நுட்பங்களை பயன்படுத்தவும் இந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. மேலும் வாட்ஸ் அப் மீடியாவில் இருக்கும் ஃபார்வர்ட் பட்டனையும் நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது

இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்; இந்த பெரிய சந்தை உள்ள பயனாளர்களில் உண்மையான மற்றும் ஃபேக்கான பயனாளர்களை கண்டறியும் வேலையிலும் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தகவல் உதவி: தி நியுஸ் மினிட், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் 

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்