3 நண்பர்கள் உருவாக்கிய செய்தி சுருக்க சேவை "ஆசம்லி"

0

நிதின், அங்கித் மற்றும் தீபக் ஆகிய மூவரும் இலக்கில்லாமலும் வழிகாட்டுதல் இல்லாமலும் ஒவ்வொரு நிறுவனமாக முயற்சித்துக்கொண்டிருந்தனர். அப்போது தற்செயலாக இந்த மூன்று தொழில்முனைவோரும் சந்தித்துக்கொண்டனர். அதற்கு முன் மூவரும் பல ஸ்டார்ட் அப் ஐடியாக்களை வேறு வேறு குழுக்களுடன் முயற்சி செய்து, சாதகமான சூழல் இல்லாததால் மற்றும் குழுவினரின் ஊக்கமின்மையால் தோல்வி அடைந்திருந்தனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு சீரான வருமான வாய்ப்பு இல்லாமல், குடும்ப அழுத்தம் மற்றும் பொறுப்புகள் நெருக்கும் போது தொழில்முனைவை தொடர்வது சிக்கலானது தான்.

துவக்கம்

குர்கோனில் யூ-பிளாக்கில் ஒரு இரவில் மின்சாரம் சில மணி நேரம் தடைப்பட்ட போது ஒரு புதிய எண்ணம் உதயமானது. தீபக் காற்று வாங்குவதற்காக வெளியே வந்து பார்த்த போது நிதின் வெளியே அமர்ந்திருந்தார். அன்று இரவு அவர்கள் நான்கு மணிநேரம் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தங்களுக்குள் பொதுவாக பல விஷயங்கள் இருப்பதை தெரிந்துகொண்டனர். நிதின், தான் ஈடுபட்ட ஒவ்வொரு திட்டம் பற்றிய கதைகளையும் விளக்கி கூறினார். விரைவிலேயே இருவரும் நல்ல நண்பர்களாயினர். அவர்கள் இணைந்து செயல்பட, தேடல், என்.எல்பி, சமூக வலைப்பின்னல் என்று பல யோசனைகளை பகிர்ந்து கொண்டனர். விரைவிலேயே ஒரு பப் உரையாடலின் போது "ஆசம்லி" க்கான(Awesummly ) யோசனை உண்டானது.

செய்தி சுருக்கம்

பல்வேறு செய்தி தளங்களில் இருந்து தானாக செய்திகளை சேகரித்து அவற்றை 5 அல்லது 6 வரிகளில் சுருக்கி செய்தி பட்டியலாக அளிக்கும் சேவையாக ஆசம்லி இருந்தது.

ஆசம்லி செய்திகளை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு பட்டியலிலும் சுருக்கங்களை முதன்மையாக வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தது. செய்திகள், இ-காமர்ஸ் பொருட்கள் விவரம், புத்தக தகவல் மற்றும் கூகுல் தேடல் முடிவு என எல்லாவற்றையும் இப்படி வழங்கியது.

போட்டியாளர்கள் பலர் சுருக்கமாக செய்திகளை வழங்குகிறார்கள். ஆனால் அவர்கள் சுருக்கங்களை மனிதர்கள் கொண்டு உருவாக்குவதால் அந்த முறை மேம்படுத்தக்கூடியதாக, விரிவுபடுத்தக்கூடியதாக இல்லை. இந்த மொபைல் யுகத்தில் இணையத்தில் உலாவும் போது அளவில் பெரிய ஒன்றை பார்த்தால் நாம் படிக்காமல் விட்டுவிடுகிறோம். இந்த பழக்கம் பல நல்ல விஷயங்களை தவறவிடச்செய்திருக்கிறது. மொபைலில் அளவில் பெரிய எதையும் படிப்பதற்கு முன் அதை படிக்கலாமா எனத்தீர்மானிக்க நாம் சுருக்கங்களை பார்க்க விரும்புகிறோம்” என்கிறார் நிதின்.

இந்த வசதியை விளம்பரம் மற்றும் ஏபிஐ பகிர்வு மூலம் வருவாயாக மாற்றிக்கொள்ள ஆசம்லி திட்டமிட்டுள்ளது.

நிதின் யார்?

கம்ப்யூட்டர் சயன்சில் எம்.டெக் படித்த நிதின் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் டி.சி.எஸ் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். விரிவாக்க கூடிய அமைப்புகள், பொருள் வடிவமைப்பு, இயந்திர கற்றல் மற்றும் என்.எல்.பி நுட்பம் ஆகியவற்றில் அவர் பணியாற்றி ஆய்வுக்கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் பெரிதாக எதையோ செய்ய விரும்பினார்.

தொழில்முனைவோர்களால் தான் ஊக்கம் பெறுவதாக நிதின் கூறுகிறார். அவரிடம் பல யோசனைகள் இருந்தும் ஊக்கமுள்ள குழு கிடைக்காத்தால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. எனவே வேலை பார்த்தபடி ஒத்த கருத்துள்ளவர்களை தேடிக்கொண்டிருந்தார்.

தீபக் யார்?

தீபக், ரூர்கி என்.ஐ.டியில் சி.எஸ்.இ -ல் பி.டெக் படித்தவர். அடிக்கடி வேலை மாறிக்கொண்டிருந்தார். ஐந்தாவது ஆண்டில் ஐந்தாவது நிறுவனமான சிவெண்டில் சேர்ந்திருந்தார். அதற்கு முன்னர் மூன்று ஸ்டார்ட் அப்களில் பணியாற்றி இருந்தார். தொழில்முனைவோராக அவர் 10 ஐடியாக்களுக்கும் மேல் முயற்சித்துப்பார்த்து கைவிட்டிருந்தார்.

அவர் குழுக்கள் மீது நம்பிக்கை இழந்து, தனியாக முயன்று தோல்வி கண்டிருந்தார். வேலையை விட்டுவிட்டு கையில் முதலீடு இல்லாமல் புதிய நிறுவனம் துவக்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. தான் வேலை பார்த்த ஹூப்ஸ் நிறுவன சி.இ.ஓ விஜய் ஜுமானி போலவே பணியாளர்களுக்கு நட்பான நிறுவனம் ஒன்றை நடத்த விரும்பினார்.

ஆரம்ப தடைகள்

இந்த இருவருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் துவக்குவது எளிதாக இல்லை. நிதி டிரிப்டோவில் சேர்ந்தார். தீபக்கிற்கு அது உடன்பாடில்லை. இருவரும் தினசரி இரவு 10 நிமிடம் சந்தித்து தங்கள் யோசனைகள் பற்றி ஆலோசித்தனர்.

ஒரு முறை லீன் ஸ்டார்ட் அப் பயிலறங்கிற்கு சென்றனர். அங்கு நல்ல தொடர்புகள் கிடைத்தன. எல்லாம் சரியாக அமைந்ததாக தோன்றிய போது நிதின் நொய்டாவுக்கு சென்று நியூரான் எனும் நிறுவனத்தில் சேர்ந்தார்.

குடும்ப அழுத்தம் காரணமாக தீபக் மும்பை சென்று நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். ஒரு மாதத்தில் நிதின் நியூரான் சி.டி.ஓவாக ஆகி பிசியானார். அவர் தன் கிழ் பணியாற்ற துடிப்பான இளைஞர் அங்கித் என்பவரை வேலைக்கு சேர்த்துக்கொண்டார்.

நிதின் - அங்கித்

நிதின் முதல் முறையாக அங்கித்தை பார்த்ததுமே அவர் பொருத்தமானவர் என நினைத்தார். அங்கித் குர்கோன் சிஐடிஎம்மில் பிடெக் படித்திருந்தார். தொழில்முனைவில் அவருக்கும் ஆர்வம் இருந்தது.

சொந்த நிறுவனம் துவக்க தேவையான திறன்களை கற்றுக்கொள்ள அவர் மூன்று ஸ்டார்ட் அப்களில் பணியாற்றினார். ஒரு முழு குழு அமையாததால் அவரால் ஒரு நிறுவனத்தை துவக்க முடியவில்லை. டெவலப்பராக இருந்தது தவிர மார்க்கெட்டிங்கிலும் அவருக்கு அனுபவம் இருந்தது.ஐ.இ.இ.இ கழகத்திலும் அவர் இருந்தார்.

தீபக் தில்லி வந்து நிதினை சந்தித்து பேசிய போது ஆசம்லியை துவக்குவதற்கான எண்ணம் புத்துயிர் பெற்றது. ஐந்து நாட்கள் இடைவெளி இல்லாமல் வேலை செய்த பிறகு ஆசம்லி தயாரானது. இதை இப்போது எப்படி செய்ய முடிந்தது, முன்னர் என் செய்யமுடியவில்லை என தீபக்கிற்கு இன்னமும் புதிராக இருக்கிறது. எல்லா வித தடைகளையும் அவர்கள் வென்றிருக்கின்றனர்.

இணையதள முகவரி: Awesummly