யுவர்ஸ்டோரி பார்வை-  இந்திய யூனிகார்ன் நிறுவனங்கள் 2016 இல் எவ்வாறு செயல்பட்டனர்? 

0

டிசம்பர் மாதம் 25ம் தேதி சூரிய உதயத்தின் போது சாண்டா கிளாஸ் 12 மான்களுடன் கூடிய அவரது வாகனத்தில் நன்னடத்தையுடன் விளங்கும் குழந்தைகளின் வீட்டில் பரிசுப்பொருட்களை வழங்குவார். மாறாக தீய நடத்தையுடைய குழந்தைகளுக்கு வெறும் கரித்துகள்களே கிடைக்கும்.

யுவர் ஸ்டோரியின் கருத்துப்படி ட்ரோன் தொழில்நுட்பம், முகத்தை அடையாளம் காட்டுதல், பிக் டேட்டா தகவல்கள் பகுப்பாய்வு, திறமையாக பொருட்களை வாங்குதல், வலுவான சரக்கு மேலாண்மை போன்றவற்றிலுள்ள சமீபத்திய முன்னேற்றத்தினால்தான் சாத்தியப்படும்.

ஒவ்வொரு வருடமும் சாண்டா அவரது சிறு தெய்வக்குழுவுடன் உலகெங்குமுள்ள குழந்தைகளை சூரிய சக்தியில் செயல்படும் ட்ரோன்கள் மூலமாக கண்காணிப்பார். இந்த ட்ரோன்கள் முகத்தை அடையாளம் காட்டும் மேம்படுத்தப்பட்ட மென்பொருளின் உதவியுடனும் தகவல்களை பகுப்பாய்வு செய்தும் நன்னடத்தையுடைய குழந்தைக்கான சரியான பரிசுப்பொருள் தேர்வு செய்யப்படும். அந்நாட்களில் இந்தப் பரிசுப் பொருட்கள் சாண்டாவின் பொருட்கிடங்கிற்கு வருவதற்கு முன் நார்த்போலில் தயாரிக்கப்படும் அல்லது சீனாவிலுள்ள விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும். தர கட்டுப்பாட்டு மதிப்பீடுகளைக் கடந்தபின் அவை பேக் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் மான்கள் மற்றும் சறுக்குவண்டி குதிரை மூலமாக அனைவருக்கும் வழங்கப்படும்.

சாண்டாவைப் போல ஊடகங்களும் வெவ்வேறு நிறுவனங்களை வருடம் முழுவதும் கண்காணித்து வருகிறது. தொடர்ந்து வெளியிடும் அறிக்கை மூலமும் ஆதாரங்கள் மூலமும் நிறுவனங்களின் ’தீய நடத்தை’ அல்லது ‘நன்னடத்தை’ எவை என்று ஊடகங்கள் நன்கு அறிந்திருக்கும். 

தற்போது 10 இந்திய யூனிகார்ன் ஸ்டார்ட்-அப்களை 2016-ல் ’நன்னடத்தை’ அல்லது ‘தீய நடத்தை’ ஆகியவற்றை சாண்டாவைப் போலவே மதிப்பிட முடிவுசெய்தோம்.

1. ஃப்ளிப்கார்ட்

இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க ஸ்டார்ட் அப்பான இந்நிறுவனம் ஆன்லைன் சந்தையில் நுழைந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்துவிட்டது. சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரால் உருவாக்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், டைகர் க்ளோபல் மேனேஜ்மெண்ட் மற்றும் T.Rowe Price ஆகிய இரு வலிமையான நிறுவனங்களிடமிருந்து மூன்று பில்லியன் டாலர்களுக்கும்மேல் நிதியுதவி பெற்றது. அமேசான் இந்தியாவினுடனான போட்டி அவர்களை அதிக அளவில் பாதித்தது. இருந்தும் ’ஜபாங்’(Jabong) நிறுவனத்தை வாங்கியதும் ‘ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை’ என்கிற ப்ரைவேட் லேபிளை அறிமுகப்படுத்துயதும் வருகிற ஆண்டு மேலும் சிறப்பாக திகழ்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சஞ்சய் பன்சல் (இ) பின்னி பன்சல் (வ)
சஞ்சய் பன்சல் (இ) பின்னி பன்சல் (வ)

நன்னடத்தைகள் :

’ஃப்ளிப்கார்ட் அஷ்ஷூர்ட்’ முயற்சிக்காக பொருட்கள் ஆறு அடுக்கு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பிக் பில்லியன் டே விற்பனை நாளில் GMV 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு PhonePe நிறுவனத்தை வாங்கியது ஒரு வரமாகவே கருதப்படுகிறது.

தவறான செயல்கள் :

முதலீட்டாளர்களிடமிருந்து மிகக்குறைவான மதிப்பீட்டையே பெற்றது. ஒரு வருடத்தில் ஐந்து முறை அவ்வாறு நிகழ்ந்தது. நண்பர்களுடன் முரண்பாடு : முதன்மை பதவி வகித்தவர்கள் சிலர் விலகினர். ஃப்ரெஷ்ஷர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. ஃப்ளிப்கார்ட்டின் விளம்பரத்தில் கூர்க்கா சமூகத்தினரை வெளிப்படுத்திய விதம் குறித்து அந்த சமூகத்தினர் மனம் வருந்தினர். இதற்காக நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

ஒன்ப்ளஸுடன் அமேசான் பிரத்யேகமாக இணைந்திருந்தபோதும் ’பிக் ஷாப்பிங் டே’ விற்பனை நாளில் ஃப்ளிப்கார்ட் ஒன்ப்ளஸ் 3 விற்பனை செய்தது. பொருட்களின் படங்களை பதிவேற்றி அது தொடர்பான வேறு பொருட்களை தேடுதல் முறையை அகற்றியது. ஒருவரோடுவர் தனிப்பட்ட வகையில் உரையாடும் (P2P) செயலியை அகற்றியது.

2. பேடிஎம்

இந்த வருடம் ஃபின்டெக் (நிதி தொழில்நுட்பம்) என்பதுதான் ஸ்டார்ட் அப்களுக்கான மிக முக்கியமான துறையாகும். அலிபாபா, SAIF பார்ட்னர்ஸ், ரத்தன் டாடா போன்றோரின் ஆதரவுடன் பேடிஎம் சந்தையில் நுழைந்து குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் முதலிடம் வகித்தது. இந்த நடவடிக்கையினால் பேடிஎம் அதிக பயனடைந்தாலும், ஏர்டெல் நிறுவனம் கட்டண வங்கி முறையை அறிமுகப்படுத்தும் பரிசோதனையில் இறங்கியுள்ளது. இதனால் பேடிஎம் கூடிய விரைவில் தனது வேலட் சேவையை கட்டண வங்கி முறைக்கு மாற்ற முனைந்துள்ளது.

நன்னடத்தைகள் :

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின் ஒரே நாளில் 435 சதவீதம் ட்ராஃபிக் உயர்ந்தது. பரிவர்த்தனைகளில் 250 சதவீத திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது. 5 பில்லியன் மதிப்பீட்டுடன் மீடியாடெக் முதலீட்டு நிதி மூலம் 400 கோடி ரூபாய் நிதியை உயர்த்தியது. நான்கு நாட்களில் 220 கோடி ரூபாய் விற்பனையை அடைந்ததன் மூலம் மதிப்பீடு மேலும் 4.7 சதவீதம் உயர்ந்தது.

தவறான செயல்கள் :

ட்ராஃபிக்கை அதிகரித்ததால் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு பரிவர்த்தைனைகளை பாதித்தது. ஆப்பிளின் செயலி ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலி தற்காலிகமாக மறைந்தது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் அதை நீக்கிவிட்டு புதிய ஒருங்கிணந்த செயலியை நிறுவ அறிவுறுத்தப்படனர். அறிமுகப்படுத்திய உடனே பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) வசதி ஊடகங்களில் நிலவிய பாதுகாப்பு பிரச்சனைகள் காரணங்களுக்காக நீக்கப்பட்டது. பின்னர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

3. ஸ்நாப்டீல்

ரோஹித் பன்சால், குனால் பால் ஆகியோரை இணை நிறுவனராகக் கொண்டது இந்த ஆன்லைன் சந்தை நிறுவனம். முன்னனி முதலீட்டாளரான அலிபாபா இந்நிறுவனத்தை வாங்கப் போவதாக 2016-ல் பல வதந்திகள் வெளிவந்தன. ஜப்பானிய VC நிறுவனம் ஸ்நாப்டீலுக்கு முதலீடு செய்வதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சாப்ட்பேங்கின் சிஓஓ நிகேஷ் அரோரா வெளியேறியதும் ஸ்னாப்டீல் நிதியை உயர்த்துவதில் இடையூறு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. Sequoia மற்றும் Kalaari Capital இந்நிறுவனத்தின் தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை விற்கப்போவதாகவும் செய்திகள் பரவின.

ஜாக்மா உடன் ஸ்னாப்டீல் நிறுவனர்கள்
ஜாக்மா உடன் ஸ்னாப்டீல் நிறுவனர்கள்

நன்னடத்தைகள் :

கனடாவைச் சார்ந்த ஓய்வூதிய நிதியான ஒண்டாரியோ ஆசிரியர்கள் ஓய்வூதீய திட்டத்தின் கீழ் முதல் சுற்று நிதியாக 200 மில்லியன் டாலரை உயர்த்திய்து. புதிய லோகோவுடன் மறுப்ராண்டிங் செய்து 200 கோடி மார்கெட்டிங்கில் முதலீடு செய்தது. ‘ஸ்னாப்டீல் கோல்ட்’ மூலம் முன்பணம் செலுத்தப்படும் ஆர்டர்களுக்கு மறுநாளே டெலிவரி செய்யப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. வேலட் ஆன் டெலிவரி மற்றும் கட்டணமில்லாத டெலிவரி ஆகியவை பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தவறான செயல்கள் :

ஜபாங்கை ஃப்ளிப்கார்டிடம் இழந்துவிட்டதால் ஆன்லைன் ஃபேஷன் பகுதியை இழந்துவிட்டது. எக்ஸ்க்ளூசிவ்லி.in வாங்கிய 18 மாதத்திலேயே மூடப்பட்டது. டிசம்பர் 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பல விதங்களில் செயல்படுத்தும் உத்தி பலனளிக்கத் தவறிவது.

4. ஷாப்க்ளூஸ்

சிங்கப்பூரைச் சேர்ந்த நிதி சீரிஸ் E சுற்றில் 100 மில்லியன் டாலர்களுக்கும் மேல் உயர்த்திய இந்த கூர்கானைச் சேர்ந்த ஆன்லைன் நிறுவனம் 1.1 மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டை அடைந்துள்ளது. சந்தீப் மற்றும் ராதிகா அகர்வால் ஆகியோரை இணை நிறுவனராகக் கொண்டு டைகர் க்ளோபல் மற்றும் ஹெலியான் வென்சர்ஸ் போன்றோரின் ஆதரவுடன் செயல்படுகிறது. அலிபாபா இந்நிறுவனத்தை வாங்கப்போவதாகவும் ஃப்ளிப்கார்ட்டுடன் இணைப்போவதாகவும் வதந்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த இரண்டையும் இவர்கள் குழுவினர் மறுத்துவிட்டனர்.

நன்னடத்தைகள் :

கட்டணம் செலுத்தும் வசதியை சொந்தமாக உருவாக்க மொபைல் கட்டண ஸ்டார்ட் அப்பான Momoe-வை வாங்கியது செயலி மற்றும் இ-வாலட் இல்லாத ஆஃப்லைன் வணிகர்களுக்காக எஸ்எம்எஸ் மூலமான பணமில்லா பரிவத்தனைகளுக்காக ’ரீச்’ சேவையை அறிமுகப்படுத்தியது. மற்ற இ-காமர்ஸ் யூனிகார்ன்ஸைப் போலல்லாமல் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மதிப்பீடு குறையவும் இல்லை. 

தவறான செயல்கள் :

2016-ல் எந்தவித தீய நடவடிக்கைகளும் கண்டறியப்படவில்லை. 

5.ஓலா

புதிய சேவைகள், பல நகரங்களில் விரிவாக்கம், ஊபருடனான போட்டி என 2016-ஐ செலவிட்டது ஓலா நிறுவனம். இணையதள இணைப்பு இல்லாதவர்களும் பயன்படுத்தும் விதத்தில் ஆஃப்லைன் புக்கிங் வசதி செய்யப்பட்டது. ஆப்பிள் மியூசிக் மற்றும் சோனியுடன் இணைந்து காருக்குள் பொழுதுபோக்கு அம்சமாக ஓலாப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது. அறிக்கையின்படி ஓலா முந்தைய சுற்றைவிட குறைவான நிதியாக 600 மில்லியன் டாலரை பெற்றது.

நன்னடத்தைகள் :

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த ஓலாசெலக்ட், ஓலாப்ளே போன்ற பல புதிய அம்சங்களையும் சேவையையும் அறிமுகப்படுத்தியது இந்தியாவில் ஓட்டுனரின் திறனை மேம்படுத்த 100 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக வாக்களித்துள்ளது ஓலா. மும்பையின் கருப்பு மஞ்சள் நிறத்திலான டாக்ஸிக்களை இவர்களுடைய தளத்தில் இணைத்துக்கொண்டது.

தவறான செயல்கள் :

ஓலா தனது தளத்தில் 400,000 போலி சவாரிகளை உருவாக்கியதாக ஊபர் குற்றம்சாட்டியது. ஜக்னூவும் அதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. ஓலா மைக்ரோவிற்கான கட்டணங்கள் குறைவு என்பதை விளக்கும்வண்ணம் வெளியான விளம்பரத்தில் பெண்கள் செலவு செய்யும் வழக்கத்தை வெளிப்படுத்திய விதம் முறையாக இல்லாததால் ஓலா அந்த விளம்பரத்தை தொடர்ந்து வெளியிடாமல் திரும்பப்பெற்றது. டேக்ஸிஃபார்ஷூர் சேவையை முடக்கி 90 சதவீத தொழிலாளர்களை குறைத்தது.

6. சொமேட்டோ

உணவகங்களை தேடி கணடறிவதற்காக உருவான தளமான சொமேட்டோ இரண்டு மாதங்களுக்கு முன்னால் டெலிவரி பாதையை மேம்படுத்த ’ஸ்பேர்ஸ் லேப்ஸ்’ எனும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப்பை வாங்கியதை அறிவித்தது. ஒரு விரிவான அறிக்கையில் மே மாதம் 2016-ல் 750,000 ஆர்டர்களுடன் நிறுவனத்தின் யூனிட் எகனாமிக்ஸ் குறித்து பகிர்ந்துள்ளது. மே மாதம் HSBC சொமேட்டோவின் மதிப்பீட்டை சரிபாதியாக (500 மில்லியன் டாலர்) குறைத்தது. சொமேட்டோ இதை மறுத்தது. சொமேட்டோவின் தற்போதைய முதலீட்டாளர்கள் இவர்கள் மேல் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்து மதிப்பீட்டை நியாயப்படுத்தியது. சமீபத்திய நிதி சுற்றில் மோர்கன் ஸ்டேன்லியுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உணவு டெலிவரிகளிலும் க்ளௌட் கிச்சனிலும் முதலீடு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது சொமேட்டோ.

நன்னடத்தைகள் :

பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடிப்படையில் சொமேட்டோ இயங்கிக்கொண்டிருக்கும் 23 நாடுகளில், 18 நாடுகளில் உணவு தொழில்நுட்பப் பகுதியில் முன்னணியில் உள்ளது. ஆப்பிள்’ஸ் மேப்ஸ் தளத்துடன் இணைந்து தடையற்ற டேபிள் புக்கிங் செய்ய்யப்படுகிறது.

தீபிந்திர கோயல்
தீபிந்திர கோயல்

தவறான செயல்கள்:

ஆபாச தளங்கள் குறித்த விளம்பரங்கள் இரவு 11 மணி முதல் பகல் 4 மணிவரை பதிவானது. ஜனவரி மாதம் 2016-ல் லக்னோ, கொச்சி, இண்டோர், கோயமுத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.

7. இன்மொபி

விளம்பரம் மற்றும் கணடறிதலுக்கான தளமான இன்மொபி நவீன் தெவாரி, மோஹித் சக்சேனா, அமித் குப்தா ஆகியோரால் 2007-ல் நிறுவப்பட்டது. உலகெங்கும் ஒவ்வொரு மாதமும் 1.5 பில்லியன் தனிப்பட்ட மொபைல் கருவிகளை சென்றடைந்ததாக தெரிவிக்கிறது இன்மொபி. ஆடியன்ஸ் வெரிஃபிகேஷன் தீர்விற்காக நீல்சன் டிஜிட்டல் விளம்பர ரேட்டிங்குடன் இணைந்தது. சிஎஃப்ஓ மனீஷ் துகா தலைமையில் இரண்டு உயர் அதிகாரிகள் இன்மொபியிலிருந்து வெளியேறினர். அதே நேரத்தில் 100 ஊழியர்களை இன்மொபி வெளியேற்றியது.

நன்னடத்தைகள்:

ஃபாஸ்ட் கம்பெனியால் 2016-ல் உலகின் மிகப்பெரிய புதுமையான நிறுவனங்கள் பட்டியலில் ஒன்றாக அங்கீகரித்தது. மொபைலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட ரீமார்கெட்டிங் தளத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

தவறான செயல்கள் :

நுகர்வோரின் இருப்பிடத்தை கண்காணித்ததற்காக US-ன் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் (FTC) 950,000 டாலர்களை இன்மொபிக்கு அபராதமாக விதித்தது. இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக விளக்கமளித்த இன்மொபி அதை 2015-ல் சரிசெய்தது.

8. ம்யூ சிக்மா

ம்யூ சிக்மாவிற்கு 2016 சிறந்த வருடமாக அமையவில்லை. US-ல் தலைமையகமாகக் கொண்டு 12 வருடங்களாக இயங்கி வரும் இந்த டேட்டா அனாலிடிக் நிறுவனத்தின் முந்தைய மதிப்பீடு 1.5 பில்லியன் டாலர்கள். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் தீரஜ் ராஜாராமும் அப்போது சிஇஓவாக இருந்த அவரது மனைவி அம்பிகா சுப்ரமனியன் பிரிந்தது மே மாதம் முக்கிய செய்தியாக இருந்தது.

நன்னடத்தைகள் :

கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களான ஓண்டாரியோ டீச்சர்ஸ் பென்ஷன் ப்ளான் மற்றும் கனடா பென்ஷன் ப்ளான் இன்வெஸ்ட்மண்ட் போர்ட் ஆகியவை ம்யூசிக்மாவில் பங்குகள் வாங்க முனைப்புடன் உள்ளது. 

தவறான செயல்கள் :

முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை குறைவான விலையில் திரும்பப் பெற தவறாக வழிநடத்தப்பட்டதாக நிறுவனர் தீரஜ் ராஜாராம் மீது வழக்கு தொடரப்பட்டது.

9. க்விக்கர்

சிஇஓவான ப்ரனாய் சுலட்டால் 2008 நிறுவப்பட்ட க்விக்கர் நிறுவனம்தான் 2016 மதிப்பீட்டில் உயர்ந்த ஒரே யூனிகார்னாகும். ஸ்வீடிஷ் முதலீட்டு நிறுவனமான கின்னவிக் AB (Kinnevik AB) க்விக்கரின் பங்குகளில் 18 சதவீதத்தின் மதிப்பை 265 மில்லியன் டாலராக மதிப்பிட்டபோது க்விக்கர் நிறுவனத்தின் மதிப்பீடு 1 பில்லியன் டாலரிலிருந்து 1.47 பில்லியன் டாலராக உயர்ந்தது. 2015 இறுதியில் காமன்ஃப்ளோரை 200 மில்லியன் டாலருக்கு வாங்கியபின் இந்நிறுவனம் சலுசா மற்றும் சப்ளக் ஆகியவற்றை க்விக்கரின் சேவை பிரிவு மூலமாக 2016 மத்தியில் வாங்கியது.

நன்னடத்தைகள்:

பலவற்றை கையப்படுத்தியது அருகிலுள்ள ATM-களை கண்டறியும் செயலியான கேஷ்நோகேஷ் எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. 

தவறான செயல்கள் :

150 ஊழியர்களை வெளியேற்றியது. வாங்கிய சில மாதங்களிலேயே ப்ளாட்சாட் செயலியை முடக்கிவிட்டது. 

10. ஹைக்

யூனிகார்ன் க்ளப்பில் சமீபத்தில் நுழைந்த நிறுவனம் ஹைக். 2012-ல் கவின் பாரதி மிட்டல் அவர்களால் நிறுவப்பட்டது. தகவல்தொடர்பு செயலியான ஹைக் டெக்ஸ்ட், வாய்ஸ் கால் போன்றவற்றின் மூலம் பயனிகள் தொடர்புகொள்ள உதவுகிறது. 2015 இறுதியில் செய்திகளில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு அதன்பின் எட்டு இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. டென்செண்ட் மற்றும் ஃபாக்ஸ்கான் தலைமையிலான சீரிஸ் D சுற்றில் ஹைக் 175 மில்லியன் டாலரை உயர்த்தியதாக ஆகஸ்ட் 2016-ல் அறிவித்து 1.4 பில்லியன் டாலர் மதிப்புடன் யூனிகார்ன் க்ளப்பில் நுழைந்தது. ஸ்டிக்கர்ஸ் மற்றும் செயலியினுள் அமைக்கப்பட்ட கேம்ஸ் ஆகியவற்றிற்கு பிரபலமானது ஹைக். ஏற்கெனவே இருந்த 10 விளையாட்டுகளுடன் ‘Teen Patti nights’ என்கிற விளையாட்டை தீபாவளி சமயத்தில் அறிமுகப்படுத்தினர். வீடியோ அழைப்புகளை அறிமுகப்படுத்தியதும் ஸ்நாப்சேட் போன்று ‘ஹைக் ஸ்டோரி’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதும் 2016 அவர்களது சிறப்பான நடவடிக்கைகளாகும்.

நன்னடத்தைகள் :

அனைத்து தளங்களிலும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட நிறுவல்களை ஏற்படுத்திய இந்தியர்களுக்கான ‘மேட் இன் இந்தியா’ செயலி. ஹைக் ஸ்டோரிசில் நரேந்திர மோடி, சார்லி சாப்ளின், தி ஜோக்கர் மற்றும் கதகளி கலைஞர் போன்றோரின் நகைச்சுவையான பதிவுகளும் காணப்படும். ஸ்டோரிகள் அனைத்தும் 48 மணி நேரம் வரை நீடிக்கும். மாதா மாதம் நிலையான வளர்ச்சி. அக்டோபர் 2016-ல் மாதந்தோறும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட தீவிரமாக செயல்படும் பயனர்களை அடைந்தது. 

தவறான செயல்கள் :

ஸ்நாப்பை போலவே ஹைக்கும் ஹைக் ஸ்டோரிஸை அறிமுகப்படுத்தியது. எந்த வருவாய் மாதிரியும் இதுவரை இல்லை. கட்டணங்களை நேரடியாக செலுத்தும் வசதியை ஹைக் இணைத்தது.

ஆங்கில கட்டுரையாளர்கள்: ஹர்ஷித் மல்லயா | ஆதிரா நாயர்