அகில இந்திய அளவில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி!

0

ஜூலை மாதம் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ’மன் கீ பாத்’ வானொலி உரையின் 46-வது பகுதியில் குருகிராம் மாணவியான அனுஷ்கா பாண்டாவின் பெயரை உத்வேகம் அளிக்கும் வகையில் குறிப்பிட்டார். பரம்பரை நோயான முதுகெலும்பு தசைநார் பாதிப்பு தாக்கி உயிர் பிழைத்தவரான அனுஷ்கா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மோடி குறிப்பிடுகையில்,

“முதுகெலும்பு தசைநார் பாதிப்பு ஏற்பட்ட குருகிராமைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான அனுஷ்கா பாண்டா குறித்து கேள்விப்பட்டேன். அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு இவரது குறைபாடு ஒரு தடையாக இருக்கவில்லை. எண்ணற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் வெற்றியடைய இவர்களது பாதகமான சூழல் தடையாக இருக்கவில்லை,” என்றார்.

மனஉறுதியும் கடினமான உழைப்பும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்பதை இவர்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ’தி ஏசியன் ஏஜ்’ உடனான உரையாடலில் அனுஷ்கா தெரிவிக்கையில்,

“பொதுத்தேர்வில் நான் வெற்றி பெற்றதற்கு பிரதமர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ஊக்கமளித்ததற்கு நன்றி,” என்றார்.

குருகிராம் செக்டார் 54-ல் அமைந்துள்ள சன்சிட்டி பள்ளி மாணவியான அனுஷ்கா 97.8 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார். முதுகெலும்பு தசைநார் பாதிப்பு நோயானது முதுகுத் தண்டில் இருக்கும் இயக்க நரம்பணுக்களை தாக்கி நடக்கும் திறனை பாதிக்கும். செஸ் விளையாட்டில் விருப்பமுள்ள அனுஷ்கா மென்பொருள் பொறியாளர் ஆக விரும்புகிறார்.

”முதல் நாளில் இருந்தே முறையாக தயாராகி வந்தேன். எனக்கு ஆதரவளித்த என் பள்ளிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் சிறப்புக் குழந்தை என்பதால் தேர்வெழுதத் தேவையான சிறப்பு கட்டமைப்பை என் பள்ளி ஏற்பாடு செய்து கொடுத்தது,” 

என ’இண்டியா டுடே’ க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார் அனுஷ்கா.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL