இந்தியாவின் பெரிய தொழில்நுட்ப மாநாடு ‘டெக்ஸ்பார்க்ஸ் 2016’ பெங்களுருவில் இன்று தொடங்கியது !

4


யுவர்ஸ்டோரி’யின் ஏழாவது பதிப்பு ‘டெக்ஸ்பார்க்ஸ் 2016’ நிகழ்ச்சியை கர்நாடகா ஐடி அமைச்சர் திரு.ப்ரியங்க் கார்கே பெங்களுருவில் இன்று துவக்கிவைத்தார். நிகழ்ச்சியின் தொடக்க உரையை ஆற்றிய யுவர்ஸ்டோரி’யின் நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா, ஏழாம் ஆண்டு டெக்ஸ்பார்க்ஸில் அடிஎடுத்து வைத்துள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பழைய நினைவுகளை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.  

ஆறு ஆண்டுகளுக்கு முன் பெங்களுரு வந்தபோது தனக்கு தொழில்நுட்பத்தை பற்றிய போதிய அறிவு இல்லையென்றாலும், அதற்கான ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான தீப்பொறி இருந்தது என கூறினார். தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்படும் யுவர்ஸ்டோரியின் ஆண்டு நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் பலருக்கு மேடையாக விளங்கியுள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த உதவிய ஸ்பான்சர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார் ஷ்ரத்தா ஷர்மா.

ஸ்டார்ட் அப்’ களின் வளர்ச்சியை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் ஷ்ரத்தா,

“கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, முதலீடுகள் பற்றியே ஸ்டார்ட் அப்’ கள் பேசி வருகின்றனர். குறிப்பாக முதலீடு பெற்ற நிறுவனங்கள் வெற்றிப்பெற்றதாகவும், பெறாதவை தோல்வியடைந்ததை போல் பலர் பேசுவது சரியா என்று சிந்திக்கவேண்டும்,” என்றார். 

தொழில்முனைவராகிய எனது பயணத்தில் நான் எப்போதும் மன உளைச்சளுடன் இருந்துள்ளேன், ஆனால் அது நல்லதல்ல எல்லா தொழில்முனைவோரும் உற்சாகத்துடன் இருக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார் ஷ்ரத்தா ஷ்ரமா. 

“முதலீடு பெறுவது அவசியம் இருப்பினும் அதன் அடிப்படையில் மட்டுமே ஒரு நிறுவனத்தை அளவிடக்கூடாது என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்.” 

தொடக்க உரையை முடித்த ஷ்ரத்தா, டெக்ஸ்பார்க்ஸ் விழாவை தொடங்கிவைக்க வந்துள்ள கர்நாடகா ஐடி அமைச்சர் திரு.பிரியங்க் கார்கேவை சிறப்புரை ஆற்ற மேடைக்கு அழைத்தார். 

யுவர்ஸ்டோரியின் ஏழாவது பதிப்பான ‘டெக்ஸ்பார்க்ஸ்’ விழாவை துவக்கிவைத்து பேசிய அமைச்சர், 

பிரியங்க் கார்கே, கர்நாடக அமைச்சர்டெக்
பிரியங்க் கார்கே, கர்நாடக அமைச்சர்டெக்
“இந்தியாவிலேயே பெங்களுரு வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரம் ஆகும். தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து இந்தியாவில் வரலாற்றை படைத்துவரும் நகரும் ஆகும்,” என்றார். 

பெங்களுருவில் சுமார் 4000 ஸ்டார்ட் அப்’ கள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், 

”எங்களின் ஸ்டார்ட் அப்’ பூஸ்டர் கிட், தொடக்க நிறுவனங்கள் எளிதாக தங்கள் நிறுவனத்தை தொடங்க வழிவகை செய்கிறது. கர்நாடகா முழுதும் பல அடைக்காக்கும் மையங்களை அமைத்து, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து, பல ஆராய்ச்சிகளை சந்தைப்படுத்த உதவுவோம்,” என்றார். 

3000 கலந்துகொண்டுள்ள இவ்விழா, ‘உருவாக்கம்’, ‘வளர்ச்சி’ மற்றும் ’லாபம் ஈட்டல்’ என்ற முக்கிய குறிக்கோளுடன் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. மதிப்பீடல் மற்றும் ஸ்டார்ட் அப்’ இன் அடித்தளம் அல்ல, தொழிலின் உண்மையான செயல்பாடு, வாடிக்கையாளர்கள் மற்றும் நிலையான வருமான இதுவே முக்கியம் என டெக்ஸ்பார்க்ஸ் மூலம் இந்த ஆண்டு வலியுறுத்தப்படுகிறது. 

இன்று மற்றும் நாளை நடைபெறும் ‘டெக்ஸ்பார்க்ஸ்’ விழாவில், பல முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற உள்ளனர். தொழில்முனைவோர்களின் முன்னோடிகளான கிஷோர் பியானி, ஃப்யூச்சர் குழுமத்தில் நிறுவனர், Dr.முகுந்த் ராஜன், டாடா சன்ஸ் லிமிட்டன் ப்ராண்ட் கஸ்டோடியன் மற்றும் உறுப்பினர், ஷைலேந்திர சிங், நிர்வாக இயக்குனர் செகோயா கேப்பிடல், மார்டென் ப்ரிமதால், ஜென்டெஸ்க் இணை நிறுவனர், விஜய் சேகர் ஷர்மா, பேடிஎம் நிறுவனர், ஆஷிஷ் ஹேம்ரஜானி, புக்மைஷோ இணை நிறுவனர் மற்றும் பாவின் துராக்கியா, டைரெக்டி நிறுவனர், இவர்களது அனுபவ பகிரலகளும் சிறப்பு கருத்தரங்குகளும் நடைப்பெற உள்ளது. 

டெக்ஸ்பார்க்ஸ் விழாவிற்கு ஸ்பான்சர் செய்துள்ள ஜெண்டெஸ்க், ஆகிசிஸ் பேங்க், செக்கோயா கேப்பிடல், டிஜிட்டல ஓஷன், மைக்ரோசாப்ட், அமேசான் வெப் சர்வீசஸ், டார்கெட், அக்காமை, கேரளா ஸ்டார்ர்ட் அப் மிஷன் ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறது யுவர்ஸ்டோரி. 70க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் டெக்ஸ்பார்க்சில் கலந்துகொள்ள உள்ளனர்.

'டெக்ஸ்பார்க்ஸ் 2016'-ல் தொழில்முனைவோர் பங்கேற்பதால் கிட்டும் 16 முக்கிய பயன்கள்!