வெறுங்காலோடு பயிற்சி செய்து, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அசாத்திய பெண்மணி!

1

அவருக்கு அப்போது வயது 12. அவரின் பி.டி. ஆசிரியர் அவரிடம் இருந்த அற்புதமான திறமையைக் கண்டு வியந்தார். ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு இருந்த ஆர்வமும், வேகமும் அவருக்கு விளையாட்டுத் துறையில் ஓர் நல்ல எதிர்காலம் இருப்பதை அந்த பி.டி. மாஸ்டர் அறிந்தார். போதிய வசதிகள் இல்லாத அந்த கிராமத்தில் அந்த பெண்ணுக்கு பயிற்சி கொடுக்கவும் முடிவெடுத்தார். ஒரு ஷூ வாங்கக்கூட அவர்களிடம் பணம் இல்லாததால், வெறுங்காலில் ஓடினாள் அந்த பெண்.

இவர் தான் பி.யூ.சித்ரா. ‘ஆசிய மைல்களின் ராணி’. 22-வது ஆசிய தடகள போட்டி 2017’-ல் நடைப்பெற்ற 1500 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றவர். இந்த நீண்ட தூரம் ஓட்டப்பந்தயங்களில் இது மிகவும் கடினமானது ஆகும்.

அவர் இந்தியாவிற்காக 4.17.92 நிமிடங்களில் ஓடி, பல ரெக்கார்டுகளை முறியடித்து, தங்கம் வென்றுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறிய அவர்,

“ஓட்டப்பந்தய ட்ராக்குக்குள் நுழைவதற்கு முன் ஒரு மெடல் வெல்ல தான் நான் ஆசைப்பட்டேன். இறுதிச்சுற்றில், கடைசி 250 மீட்டரை கடக்கும் போது என் மனதில் தீடிரென உத்வேகம் பிறந்தது. அதிவேகமாக ஓடி முதல் இடத்தைப் பிடித்தேன். அப்போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை,” என்றார்.

கேரள அரசு, இந்த வெற்றியை தொடர்ந்து சித்ராவுக்கு இரண்டு கார்களை பரிசாக வழங்கியுள்ளது. ஆனால் அவருக்கு வேறு தேவைகள் இருந்தது.

“எனக்கு வேலை வேண்டும். என் பெற்றோர்களுக்கு உதவவேண்டும். அவர்கள் விவசாயம் செய்வதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.”

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முன்ராடு என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் சித்ரா. அவர் நான்கு குழந்தைகளில் ஒருவராக கூலி வேலை செய்பவர்களுக்கு மகளாக வளர்ந்தார். 

பெரும்பாலும் விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும்போது பாராட்டுகளும், வாழ்த்துக்களும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அதுவே ஒருசில நாட்களில் மறைந்தும் விடுகிறது. வெற்றிக்கு பின்னரும் அவர்களின் தேவை, அன்றாட வாழ்விற்கான வழி மற்றும் வருமானம் ஆகியவற்றை பெற அரசுகள் உதவிட முன்வந்தால் மட்டுமே சிறு கிராமங்களில் இருந்து பெரிய கனவோடு இத்துறைக்கு வரும் சித்ரா போன்றவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் கிடைக்கும். 

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL