6 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஐஐடி நுழைவுத்தேர்வில் ரேன்க் எடுக்க வைத்த ஐஏஎஸ் அதிகாரி!

1

நேரமின்மை என்று சொல்லி பிறரைப் பற்றி யோசிக்காமல் சுயநலமாக வாழ்பவர்கள் மத்தியில் ஜார்கண்டில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி தன் பணிச்சுமையுடன் ஆறு மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்களை ஐஐடி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற உதவியுள்ளார். 

ரான்ச்சியை சேர்ந்த அந்த மாணவர்கள், ஐஐடி-ஜேஈஈ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் 224, 570, 827, 2814, 3210 மற்றும் 3624 ஆகிய ரேன்க் எடுத்துள்ளனர். 

கேகே கந்தெல்வால் என்ற ஜார்கண்ட் அரசின் போக்குவரத்து செயலாளர் செய்துள்ள அரியச்செயல் இது. அவர் இந்த ஆறு மாணவர்களுக்கு இலவச கோச்சிங் கொடுத்து, நாட்டின் உயரிய கல்வி மையமான ஐஐடி-ல் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.

கந்தெல்வால் மிகவும் பிசியானவர். இருப்பினும் மாணவர்களை கணக்கு, பிசிக்ஸ் பாடங்களில் படிக்க துணையாக இருந்து ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு சிறப்பாக தகுதி பெற உதவியுள்ளார். அவர் கோச்சிங் செய்த 6 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

54 வயதாகும் கந்தேல்வால், 1988-ம் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளின் படி,

”எனக்கு பிறருக்கு சொல்லித்தருவது பிடித்தமான விஷயம். அதனால் தான் எனக்கு கிடைக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு கற்றுத்தர முடிந்தது. அவர்களுடன் நான் கழித்த நேரம் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்கள் வெற்றி பெற்றதை கேட்டு மேலும் அற்புதமாக உணர்கிறேன்,” என்றார் கந்தேல்வால்.

ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு மாணவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவரின் மகன்கள் அன்கூர் மற்றும் அனுப்பம் இருவரும் அகில இந்திய அளவில் 2011-ல் 570 மற்றும் 2013-ல் 9 ரேன்க் பெற்றவர்கள். அவரது இளைய மகன் அனுப்பம் பெற்றுள்ள ஒன்பதாவது ரேன்க் ஜார்கண்டில் இதுவரை பெற்றுள்ள அதிகப்பட்ச ரேன்க் ஆகும். 

”என் மகன்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் மற்ற மாணவர்களுக்கும் ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு உதவ முடிவெடுத்தேன். ஜேஈஈ தேர்வு எழுதும் அடுத்த பேட்ச் மாணவர்களை தயார் செய்ய ரெடியாக இருக்கிறேன்,” என்கிறார் கந்தேல்வால். 

கட்டுரை: Think Change India


Related Stories

Stories by YS TEAM TAMIL