கல்விமுறையில் வழக்கமான பள்ளிப் பாடங்களை தவிர்க்கும் உலகின் முதல் நாடாகிறது பின்லாந்து!

2

பின்லாந்து கல்வி முறை உலகத்தில் சிறந்தது என வல்லுனர்களால் ஏற்கப்பட்ட ஒன்று. ஏனெனில் பின்லாந்தில் இருந்து புத்திசாலித்தனமான பல சிறந்த மாணவர்கள் உருவாகியுள்ளனர். இதற்கு முக்கியக் காரணமே பின்லாந்து பின்பற்றி வரும் வித்தியாசமான கல்விமுறை ஆகும். 

பட உதவி:  Triangle Student Transportation
பட உதவி:  Triangle Student Transportation

பின்லாந்து பள்ளிகள் கட்டணம் பெறாமல் கல்வி அளித்து, குழந்தைகளுக்கு உணவும் அளிக்கின்றது. 16 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தேர்வுமுறை அங்கு இல்லை. வீட்டுப்பாட முறையையும் அவர்கள் தவிர்த்துள்ளனர். அதேபோல் அங்கே ஏழு வயதுக்கு முன் பள்ளிக்கு செல்வது சட்டப்படி குற்றமாகும். 

அண்மையில் அவர்கள் எடுத்துள்ள முடிவின்படி, இலக்கியம், இயற்பியல், வரலாறு, நிலவியல், கணக்கு உள்ளிட்ட பாரம்பரிய பாடங்களை கைவிட முடிவு செய்துள்ளனர். எல்லாரும் இந்த எல்லா பாடங்களையும் படிக்கத்தேவையில்லை என்பதே அதன் அர்த்தம். இதற்கு பதில் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளனர். பின்லாந்து மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்களை பல்துறைகளில் படிக்க வழி கிடைத்துள்ளது. 

பள்ளிகள் இனி புதிய பாடங்களை கற்றுத்தர நடப்புகள், நிகழ்வுகளை சொல்லித்தர வேண்டி இருக்கும். எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகப்போர் பற்றி படிக்கும்போது, அதை வரலாறு, பூகோளம் மற்றும் கணக்குகளின் அடிப்படைகளில் அனுகவேண்டி இருக்கும். மொழிகள் பற்றி படிக்கும் மாணவர்கள், ஆங்கிலம், பொருளாதாரம் பாடங்களை படித்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்று ப்ரைட் சைட் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த மாற்றங்களை 2020 ஆம் ஆண்டிற்கும் பின்லாந்து அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு திறனையும் வெளியில் கொண்டுவருவதே இவர்களின் நோக்கம். கற்றல் துறை அங்கே பெரிதும் மதிக்கப்படும் ஒரு துறையாகும், போட்டி மிகுந்த துறையும் அதுவே. ஆசிரியர்களுக்கு அங்கே நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்த கல்விப் பின்னணி மற்றும் முதுகலை பட்டம் பெற்றவராக இருந்தால் மட்டுமே பின்லாந்தில் ஆசிரியர் பணியில் சேரமுடியும். 

கட்டுரை: Think Change India