பழங்குடியினர்/தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர்களுக்கான இலவச பணிவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு!

2

பழங்குடியினர்/தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்த வேலை தேடுபவர்களுக்கு பணிவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்று தேசிய பணிவாய்ப்பு சேவை மையம், சென்னை அறிவித்துள்ளது.

கல்வி படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பழங்குடியினர்/தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர்கள் இந்த மையம் மூலம் இலவச பணிவாய்ப்பு பயிற்சியை பெறலாம். ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, தட்டச்சு, சிறப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் சுருக்கெழுத்து (24 வது கட்டம்), ஒரு வருடம் ஓ நிலை கணிணி மென்பொருள் பயிற்சி (10 வது கட்டம்) ஆகிய பயிற்சிகள் பெற விரும்புவர்கள் விண்ணபிக்கலாம்.

பழங்குடியினர்/தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இலவச மற்றும் உதவிப்பணம் பெறுகிற சிறப்புப் பயிற்சி திட்டத்தின் கீழ் 11 மாத கால பயிற்சிக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு இந்த பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாக அளிக்கப்படும்.

ஓ நிலை கணிணி மென்பொருள் பயிற்சி ஒரு வருடம் நடத்தப்படும். இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு இந்த பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாக அளிக்கப்படும். இந்த ஒரு வருட ஓ நிலை கணிணி மென்பொருள் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே 2, 2017 முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 12, 2017.

தேசிய பணிவாய்ப்பு சேவை மையம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் படித்த பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்களுக்காக இலவச பணிவாய்ப்பு பயிற்சிகளை அளித்து வருகிறது.