தில்லியில் நீண்ட தூர பயணத்திற்கு டாக்சிகளை புக் செய்வதில் புதுமை படைக்கும் 'ரூட்டோகோ '

0

வார இறுதிக்கான பயணத்தை திட்டமிட முயலும் போது சிறந்த டாக்சி (கேப்) சேவையை தேர்வு செய்வது சிக்கலாக இருக்கிறதா? ரூட்டோகோ(Rutogo) உங்கள் பகுதியில் உள்ள டாக்சி சேவைகளை ஒப்பிட்டுப்பார்த்து தேர்வு செய்யும் வசதியை அளிக்கிறது. செலவு குறைந்த டாக்சி சேவையை தேர்வு செய்வதில் மக்களிடம் குழப்பம் இருப்பதுடன் பலவேறு டாக்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு விசாரிக்கும் தேவையும் இருக்கிறது” என்கிறார் ரூட்டோகோ இணை நிறுவனரான வீனஸ் துரியா (Venus Dhuria).

இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையக்கூடிய தகவல் தொடர்பு இல்லை என்பதால் ரூட்டோகோ உருவானதாக வீனஸ் சொல்கிறார். "உள்ளூர் பயண மற்றும் சுற்றுலா டாக்சி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இடம் பெற்றிருக்கும் சந்தையாகவும், இவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் கட்டணம், மதிப்பீடு மற்றும் கிடைக்க கூடிய தன்மை அடிப்படையில் பொருத்தமான சேவையை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் செயல்படுகிறது” என்கிறார் அவர் மேலும்.

ரூட்டோகோ சேவைக்கான எண்ணம் இணை நிறுவனரான அனீஷ் ரயன்சா(Aneesh Rayancha ) ஜெர்மனியில் பயிற்சியாளராக இருந்த போது உண்டானது. இந்த காலத்தில் அனீஷ் mitfahrgelegenheit.de போன்ற நகரங்களுக்கு இடையிலான பல ரைட் ஷேரிங் சேவையை பயன்படுத்தினார். இதே போன்ற சேவையை இந்தியாவில் துவக்க நினைத்தவர், இந்த எண்ணத்தை இணைந்து செயல்படுத்தக்கூடிய ஒத்த கருத்துள்ளவர்கள் கிடைக்காததால் விட்டுவிட்டார்.

பின்னர் அவர் ரெக்கிட் பென்கைசர் (Reckitt Benckiser) நிறுவனத்தில் சேர்ந்த போது வீனசை சந்தித்தார். இருவருக்குமே ஒரே விதமான சிந்தனை இருப்பதை அப்போது தெரிந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் இந்த ஐடியாவை இந்தியாவுக்கு ஏற்ப மாற்ற தீர்மானித்தனர். ரைட் ஷேரிங்கிற்கு டாக்சி சேவையில் கவனம் செலுத்த தீர்மானித்தனர். இந்தியாவில் நகரங்களுக்கு இடையிலான பயணத்திற்கு டாக்சியை புக் செய்வது சிக்கலாக இருப்பதை உணர்ந்தனர்.

”நகரங்களுக்கு இடையிலான டாக்சி சேவையை புக் செய்ய இன்னமும் பழைய வழக்கப்படி பல நிறுவனங்களை அழைத்து, கட்டணத்தை ஒப்பிட்டு தேர்வு செய்யும் நிலையே இருக்கிறது. எனவே தொழில்நுட்பம் மூலம் அனைத்து உள்ளூர் பயண மற்றும் சுற்றுலா டாக்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்கள் கட்டணம் மற்றும் மதிப்பீடு அடிப்படையில் தேர்வு செய்ய உதவும் சேவையை உருவாக்குவதில் ஈடுபடத்துவங்கினர்.

தங்கள் சேமிப்பை எல்லாம் திரட்டி அவர்கள் ஆரம்பகட்ட தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டனர். அடிப்படை சேவையை உருவாக்கியதும் தங்கள் மூத்த சகாக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து மேலும் மூலதனத்தை திரட்டினர். "இப்போது நாங்கள் செயல்பாடுகள், தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் எட்டு பயிற்சி ஊழியர்கள் உட்பட 13 பேர் இருக்கிறோம்” என்கிறார் வீனஸ். டிஜிட்டல் மார்க்கெட்டிங் தவிர இந்தக்குழு வர்த்தக மற்றும் பயண ஏஜெண்ட்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

சவால்கள்

ஆரம்ப ஐடியாவை செயல்படுத்துவது தான் இப்போது சவாலாக இருந்தது. இந்த சேவைக்கான தொழில்நுட்ப அம்சங்களை தயார் செய்வதே முக்கிய பணியாக இருந்தது. முதலில் ஜெய்பூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்திடம் இந்த பணியை ஒப்படைத்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

பல மாத தாமதத்திற்கு பிறகு நிறுவனம் மூடப்பட்டு மீண்டும் ஆய்வு நிலைக்கே சென்றனர். விரைவில் தில்லியில் வேறு ஒரு நிறுவனத்தை கண்டுபிடித்து நான்கு மாதங்களில் தங்களுக்கான சேவையை பெற்றனர். அடுத்த சவால் இந்த சேவையை உள்ளூர் டாக்சி நிறுவனங்கள் ஏற்கச்செய்வதாக இருந்தது. "இந்த நிறுவனங்கள் நேரடியாக புக் செய்ய பழகியிருந்ததால் அவர்களை ஆன் -லைன் பதிவிற்கு ஒப்புக்கொள்ள வைப்பது கடினமாக இருந்தது ” என்கிறார் வீனஸ்.

செயல்பாடுகள்

இருவரும், மே மாதத்தில் போன் மூலம் பதிவு செய்யும் வசதியுடன் தங்களை சேவையை துவக்கினர். கடந்த வாரம் ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்தனர். அதன் பிறகு 2500 முறை டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 300 பதிவுகள் நிகழ்ந்துள்ளன. சராசரி கட்டணம் ரூ.5,000. "ஒரு சில நாட்களில் 12 பதிவுகள் வரை நிகழும். பொதுவாக 8 முதல் 10 வரை இருக்கும். எங்கள் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் 250 சதவீத வளர்ச்சி இருக்கிறது” என்கிறார் வீனஸ். ரூட்டோகோ மொத்த கட்டணத்தில் கமிஷன் எடுத்துக்கொள்கிறது.

சந்தை மாதிரியில் செயல்படுவதால் டாக்சிகள் இருப்புக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். பயனாளிகள் கட்டணம் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர். "அதன் பிறகு குறிப்பிட்ட கட்டத்தில், கார்களின் இருப்பிற்கு ஏற்ப அந்த நேரத்தில் உள்ள குறைந்த கட்டணத்தை தேர்வு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் ரூ.2,000 வரை சேமிக்கும் வாய்ப்பு உண்டு. நிலையான கட்டணத்தில் கார்களை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து இது மாறுபட்டது. அந்த நிறுவனங்கள் அதே கார் நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் செய்து அதன் மேல் ஒரு தொகை வைத்து வழங்குவதால் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக இருக்கும்” என்கிறார் வீனஸ்.

இந்த சேவை கார்களின் இருப்பை சிறந்த முறையில் கையாள்வதால் ஒரு வழி பயணத்திற்கு வழக்கமான கட்டணத்தில் பாதியில் சேவையை பெறும் வாய்ப்பு இருக்கிறது. தில்லி பகுதியில் 32 பாதைகளில் ஒரு வழி சேவையை நிறுவனம் வழங்குகிறது. இதைத்தவிர உள்ளூர் சுற்றுலாவுக்கான நேர அடிப்படையிலான சேவை மற்றும் ஓலா, டாக்சொ பார் சுயர் மற்றும் உபெர் போற கால் டாக்சிகளுக்கான மெட்டா தேடியந்திரமாகவும் செயல்படுகிறது.

ருட்டோகோ தற்போது தில்லி-என்சிஆர் மற்றும் சண்டிகரில் செயல்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது. நகரங்களுக்கு இடையிலான ரைட் ஷேரிங் பற்றியும் யோசித்து வருகின்றனர்.

சந்தை எப்படி?

இந்திய ரேடியோ டாக்சி சந்தை 6 முதல் 9 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக பல்வேறு விதமாக கருதப்படுகிறது. 17-20 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த சந்தையில் 4-6 சதவீதம் தான் ஒருங்கிணைந்த துறையில் உள்ளது. மற்றவர்கள் 2 முதல் 50 கார்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர், ஒரு நகரில் மட்டுமே செயல்படுகின்றனர்.

இந்த சந்தை வளர்ச்சி வாய்ப்புகளை கண்டு வந்தாலும் விரையில் அமேசான் –ஃபிளிப்கார்ட் பாணி விலைப்போட்டியை காண வாய்ப்புள்ளது. அடுத்த 18 -24 மாதங்களில் 10,000-15,000 கார்கள் வரை கொண்ட 8 முதல் 10 நிறுவனங்கள் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள உள்ளன. இன்று டாக்சிகளுகான திரட்டிகளும் (Scoot.) கூட உள்ளன.

இணையதள முகவரி: Rutogo