வீடியோ விளம்பரங்களை பார்ப்பதற்கு பயனர்களுக்கு பரிசு அளிக்கும் புதுமை செயலி 'ஆட்ஸ்டோர்'

1

இந்தியாவில், மொபைல் போன்களின் எண்ணிக்கை டெஸ்க்டாப் அல்லது கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு அதிக அளவிலான புதிய இணைய பயனாளிகளையும் கொண்டிருப்பதாக மேரி மீக்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஐ.ஏ.எம்.ஏ.ஐ மற்றும் கேபிஎம்ஜியின் மற்றொரு அறிக்கைபடி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இருக்கிறது. 2017 ல் மொபைல் இணைய பயனாளிகளின் எண்ணிக்கை 314 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்கள் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த பெரிய களம் மொபைல் விளம்பரமாக தான் இருக்கும். மற்ற விளம்பர வழிகளுடன் ஒப்பிடும் போது, ஸ்மார்ட்போன்கள், பிராண்டுகள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் பயனாளிகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் முன்னுரிமை தொடர்பான தகவல்களை திரட்டித்தர வல்லவை. இணைய விளம்பரத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருக்கிறது. இந்த பின்னணியில் பயனாளிகள் பிராண்ட்களின் விளம்பரத்தை கண்டறிந்து அதற்கான பலனையும் பெறுவதற்கான இணைய சந்தையாக ஆட்ஸ்டோர் (Adstore) அமைந்துள்ளது.

விளம்பர வீடியோ

ஆட்ஸ்டோர் மூலம் பயனாளிகள் திரைப்பட டிரைலர்களை, யூடியூப் சேனல் விளம்பரங்களை, இணைய வீடியோ விளம்பரங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த வீடியோக்கள் பொதுவாக 2-3 நிமிடங்கள் ஓடக்கூடியவை. ஒரு கதை அமைப்பை கொண்டிருக்கும். விளம்பரத்தை பார்த்து முடிந்தப்பிறகு பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதை தான் தங்களது யு.எஸ்.பி என்கிறது ஆட்ஸ்டோர். இந்த கேள்விகளுக்கான பதில்கள் ஆய்வு செய்யப்பட்டு விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. பயனாளிகளின் பார்வையில் இருந்து வருவதால் இவை மிகவும் மதிப்பு மிக்கவை. இது பிராண்ட்களுக்கு மார்க்கெட் ஆய்வு மற்றும் அலசலில் உதவுகிறது. இதற்கு பதிலாக பயனர்களுக்கு ஃபிளிப்கார்ட், ப்ரிசார்ஜ், மெக்டோனால்ட்ஸ் ஆகிய பிராண்ட்களிடம் இருந்து கிப்ட் வவுச்சர்கள் பரிசாக கிடைக்கின்றன.

துபாயில் பிறந்து வளர்ந்த பள்ளி பருவத்து நண்பர்களான நரேன் புத்வானி (Naren Budhwani ) (சி.இ.ஓ) மற்றும் பியூஷ் தக்கான் (Piyush Dhakan) (சிஓ.ஓ) ஆகிய இருவரும் இந்த ஸ்டார்ட் அப்பை நிறுவினர். நரேன் பட்ட படிப்பிற்காக மும்பைக்கு வந்துவிட்டார். பியூஷ் துபாயில் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். கல்லூரியில் நரேன் போதிய வருகை இல்லாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஒராண்டு சும்மா இருந்ததால் அவர் துபாய்க்கு சென்று ஐந்த நட்சத்திர ஹோட்டல்களுக்கு பேக்கரி பொருட்களை சப்ளை செய்த உணவு வர்த்தக நிறுவனத்தை துவக்கினார். ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக அவர் மும்பை திரும்பி பட்ட படிப்பை தொடர்ந்தார்.

பியூஷ் கல்லூரி இரண்டாம் ஆண்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரத்யேக மொபைல் கவர்களுக்கான இணையதளத்தை துவக்கினார். ஆனால் அது வரவேற்பை பெறாமல் போகவே துபாயில் இ-காமர்சுக்கு அதிக வாய்ப்பு இல்லை என தெரிந்து கொண்டார். பட்டப்படிப்பை முடித்ததும் அவர் மும்பைக்கு வந்து ஆட்ஸ்டோரை துவக்கினார். நரேன் கல்லூரியில் இருந்து விலகி அவருடன் சேர்ந்து கொண்டார். இந்தக்குழுவில் தற்போது ஆறு பேர் இருக்கின்றனர். நரேன் மற்றும் இதர உறுப்பினர்கள் தொழில்நுட்பத்தை கவனித்துக்கொள்கின்றனர். மற்ற உறுப்பினர்கள் வர்த்தக வளர்ச்சியை கவனிக்கின்றனர்.

வர்த்தக மாதிரி

ஆட்ஸ்டோரின் வருவாய் மாதிரி காட்சிக்கு ஏற்ற கட்டணம் முறையை கொண்டுள்ளது. "தனித்தன்மை கொண்ட பார்வைகளில் கவனம் செலுத்துகிறோம். விளம்பரதாரர் விரும்பும் பார்வைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு வீடியோ பதிவேற்றப்படுகிறது. அந்த எண்ணிக்கையை அடைந்ததும் வீடியோ செயலியில் இருந்து தானாக மறைந்து விடுகிறது” என்கிறார் நரேன்.

ஒரு பார்வைக்கு ரூ.1.5 முதல் ரூ.7 வரை அவர்கள் விளம்பர நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். விளம்பரத்தின் அளவு, பயனாளிகளிடம் கேட்கப்படும் கேள்விகள்( இப்போதைக்கு 3 கேள்விகள்) மற்றும் செயலியில் விளம்பரத்தின் இடம் ஆகியவை அடிப்படையில் கட்டணம் அமைகிறது.

இது வரை

ஆட்ஸ்டோர் சொந்த நிதியில் துவக்கப்பட்டு இப்போது ஏஞ்சல் இன்வெஸ்ட்மெண்ட் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுவரை 8500 பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் இருப்பதாகவும் இதில் 65 சதவீதம் பேர், வாரம் 3 முறை வருகை தரும் தீவிர பயனாளிகளாக இருக்கின்றனர்.

ஸ்டார்ட் அப்பாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்கிறோம். அவ்வப்போது வேறு வேறு சவால்கள் தோன்றுகின்றன. சரியான நபர்களை பணிக்கு அமர்த்துவது பெரும் சவாலாக இருக்கிறது. ஸ்டார்ட் அப்களுக்கு நல்ல நிதி கிடைப்பதாக ஊழியர்களுக்கான சம்பளம் உயர்ந்து விட்டது. இது அடிக்கடி எதிர்கொள்ளும் சிக்கலாக இருக்கிறது” என்கிறார் நரேன்.

ஆட்ஸ்டோரின் பயனாளிகள் 16 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மற்ற வயது பயனாளிகளையும் கவர திட்டமிட்டுள்ளனர். ஐபோனுக்கான செயலியையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

போட்டி நிறுவனங்கள்

இணைய விளம்பரத்தில் கூகுள் மற்றும் யாஹூ ஆதிக்கம் செலுத்துகின்றன. மொபைல் விளம்பரம் இன்னமும் பிள்ளை பருவத்தில் தான் இருக்கிறது. இருந்தாலும் கூகுள் முன்னிலையில் உள்ளது.

இந்த பிரிவில் இன்மொபி பெரிய நிறுவனமாக உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் எம்.ஐ.ஐபி -யை அறிமுகம் செய்தது. இது வழக்கமான மொபைல் விளம்பரத்தை மேலும் பொருத்தமான வடிவமாக மாற்றுகிறது. இந்த பிரிவில் உள்ள மற்றொரு நிறுவனம் ஏர்லாயல். இது மத அடிப்படையில் 240 சதவீத வளர்ச்சி காண்பதாக சொல்லப்படுகிறது. "ஜி.இ,ச்டி, டாடா மற்றும் மைக்ரோமேக்சின் மேட் ஆகியவை இந்த துறையில் உள்ள போட்டியாளர்கள். ஆனால் அவர்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சங்கள் இருக்கின்றன. பயனாளிகள் விளம்பரத்தை பார்ப்பதற்கு முன் பரிசு அளிக்கின்றனர். இது திணிப்பாக அமையலாம்” என்கிறார் நரேன்.

நமக்கு பிடித்தவை

இந்த செயலியின் இடைமுகம் சிறப்பாக உள்ளது. வீடியோக்கள் இ-காமர்ஸ், மின்னணு, ஆட்டோமொபைல் என பல பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முகப்பு பக்கத்தில் பயனாளிகள் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் அதிக கட்டண வீடியோக்களை பார்க்கலாம். வீடியோக்களை பின்னர் பார்த்துக்கொள்ள குறித்தும் வைக்கலாம். தொலைகாட்சி மற்றும் யூடியூப்பில் விளம்பரங்களை தவிர்க்கும் நுகர்வோர் என்ற முறையில், பிராண்ட்களை கண்டறிந்து, அதற்கான கூப்பன்களையும் பெற உதவும் ஆட்ஸ்டோர் இணையதளத்தை சுவாரஸ்யமாக உணர்கிறேன்.

எதில் மேம்பாடு வேண்டும்

விரும்பிய வகைகளை ஃபாலோ செய்யும் வசதி மற்றும் அப்டேட், வீடியோவுக்கான நோட்டிபிகேஷன் பெரும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். கூப்பன் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. ஓரு சில வவுச்சர்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. எனவே மேலும் ஈர்க்க கூடிய வவுச்சர்கள் தேவை.

பயனாளிகள் தாங்கள் பார்த்தவற்றை பகிர விரும்பலாம். எனவே பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக அமசம் மற்றும் கருத்து தெரிவிக்கும் அம்சம் இருப்பது நல்லது.

யுவர்ஸ்டோரி கருத்து

ஆட்ஸ்டோர் வீடியோ விளம்பரங்களை கண்டறிவதற்கான சுவாரஸ்யமான சேவை. டிவி அல்லது யூடியூப்பில் வெளியாகும் சிறிய விளம்பரங்களை பலரும் பார்ப்பதில்லை. ஆனால் கதையம்சம் கொண்ட விளம்பரங்களை மட்டும் ஆட்ஸ்டோர் வழங்குவது நல்ல விஷயம். எனினும் இந்த நிறுவனம் எப்படி வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறது என பார்க்க வேண்டும்.

இணையதள முகவரி: Adstore