முன்பு வகுப்பறை, இப்போது ரியல் எஸ்டேட் !

0

நிலம் தொடர்பான நிகழ்வு ஒன்று உண்மையை உணர்த்தும் வரை மோனிகா, நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வாழும் சூழலில் உள்ள இராணுவ அதிகாரியின் வாழ்க்கைத் துணையாக இருந்தார்.

மோனிகா கன்வார் கணவரோடு சேர்ந்து, டில்லியில் உள்ள தனது பூர்வீக நிலத்தை விற்க முயன்ற போது, வழக்கம் போல, பணம் கறக்கும் தரகர்களால் சூழப்பட்டார். ஒரு புரோக்கரிடம் இருந்து இன்னொருவர் என அவர்கள் ஒரு சங்கிலி போல விரிந்து கொண்டே சென்றார்கள். ஒரு புதிய பொருளை விற்பதில் முன் அனுபவம் இல்லாதவருக்கு அறிவுரைகளை தரகர்கள் அளித்தபடியே இருந்தார்கள். கடின உழைப்பிற்கு பிறகு, சொத்தை விற்றிருக்கிறார். குர்கவுனில் ஒரு புதிய நிலத்தில் முதலீடு செய்வதாய் முடிவு செய்ததும், அங்கும் அது போல தரகர்களின் தொல்லைச் சூழல்.

நிலத்தை விற்க முனைந்த போதும் புதிய நிலம் வாங்க முனைந்த போதும் கிடைத்த தரகர் தொல்லை அனுபவத்தை இப்படிச் சொல்கிறார். “அந்த அனுபவமும் இதைப் போலவே மோசமாகத் தான் இருந்தது, இல்லை...இல்லை.. அதை விட மோசமாக இருந்தது”

இறுதியில், சிலரின் உதவியோடு விபரங்களைச் சரிபார்த்து குர்கவுனில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது.

ஆனால் இணையத்தில் நிலம் வாங்குவது, விற்பது, அல்லது முதலீடு செய்வது போன்றவை தொடர்பான தகவல்கள் கொட்டிக் கிடந்தாலும் அவைகளை ஆராய்ந்து, ஒப்பிட்டு உரிய ஆலோசனை சொல்லும் ஒரு தளம் கூட இல்லை என்கிற குறையை உணர்ந்தேன். அன்று உருவானதுதான் ப்ராப்சில்.காம்-கான எண்ணம். நிலத்தில் முதலீடு செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகவல்களைத் தருவதோடு உரிய ஆலோசனைகளையும் வழங்குகிறோம் இணையம் வழியாக, என்கிறார் மோனிகா.

அக்டோபர் 2013 -ல் ஒரே ஒரு வேலைத் திட்டத்தோடு துவங்கிய பணி 2014 ஃபிப்ரவரியில் ஒரு அலுவலகம் திறக்கும் அளவுக்கு விரிவடைந்தது.

ரியல் எஸ்டேட் தொழிலில் பெண் தொழில் முனைவராய் இருப்பதில் உள்ள சவால்கள்

"முன் அனுபவம் எதுவும் இல்லாமல், நாற்பது வயதில் தொழில் முனையத் தொடங்கியதால், எல்லாமே கஷ்டமாகத் தான் இருந்து. ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் பெண்களை அலட்சியப்படுத்தினார்கள். அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. பெண்களுக்கு சரியான முடிவு எடுக்கத் தெரியது, அவர்கள் நிச்சயம் ரியல் எஸ்டேட் ஆலோசகர் பணிக்கு பொருந்திப் போக மாட்டார்கள் என்பது தான் பொதுவாக அனைவருக்கும் பழகிப் போன எண்ணம்”, என்கிறார், ப்ராப்சில்.காம்-ன்(Propchill.com) இயக்குநரான மோனிகா.

பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் கைதேர்ந்தவர்கள் ஒரு புதிய நிறுவனத்தில் பணி செய்வதை விட பிரபலமான நிறுவனங்களில் வேலை செய்வதையே விரும்புவார்கள். அதனால், புதிதாக ஒரு குழுவை அமைக்கவேண்டிய நிலை இருந்தது.

இதைச் சரி செய்தார்கள். அதிக நேரம் கடின உழைப்பும் இருக்கும்போது தான், ஒரு தொழில் முனைவை நடத்தும் திறன் பெண்களுக்கு இருப்பதாய் பொதுவில் நம்பப்படுகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில். ப்ராப்சில்-ல் மோனிகாவும், அவருடைய கணவரும், ரியல் எஸ்டேட் பணிகளில் விலையை ஒப்பிட்டுப் பார்த்து, நிலம் அல்லது வீட்டு மனையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். இருப்பிடம், விலை மற்றும் இடத்தின் அளவு என அனைத்து விபரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தான் ப்ராப்சில்-ன் பணி.

ப்ராப்சில்.காம்

நிலம் தொடர்பான தொழிலின் சாதக, பாதகங்கள், எங்கு, எப்படி முதலிடுவது போன்ற விஷயங்களை திவீரமாக ஆராய்ந்து மதிப்பீடுகள், அட்டவணைகளை வடிவமைப்பதிலும் முதல் வருடத்தை செலவழித்தார் மோனிகா. அடுத்த ஒரு வருடத்தில் தளத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தியவர், முதல் வடிவமைப்பை 2015 ஃபிப்ரவரியிலும், இரண்டாம் வடிவமைப்பை 2015 ஜூலையிலும் வெளியிட்டார். ப்ராப்ச்சில் குழு அதைப்போன்ற ஒப்பிடுதல்களை குர்காவ்ன், பெங்களூரு, நொய்டா,சென்னை, போபால், இந்தூர், பிவாடி, நீம்ரனா ஆகிய ஊர்களில் செய்து முடித்து விட்டனர். இன்னும் பல ஊர்களுக்கு தங்களின் சேவைகளை விரிவாக்க எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவப் பள்ளி ஆசிரியை மோனிகா

ஒரு சில கணினி மொழிகளை கற்றிருக்கும், ஒரு அறிவியல் பட்டதாரியான மோனிகா இதுவரை நிரந்தரமாய் எங்கும் பணியில் அமர்ந்ததில்லை, பதினைந்து வருடங்களில் பல்வேறு ராணுவ பள்ளிகளிலும் பொதுப் பள்ளிகளிலும் பாடம் நடத்தியிருக்கிறார். அதற்காக, ராணுவத்தில் கிடைத்த இடமாற்றங்களுக்கு நன்றி என்கிறார். எங்களுடைய இந்த பயணத்தில், தொழில் முனைவு என்பது மன நிலையைப் பொறுத்தது என்றும் வயதிற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தோம். வேலையில் முன் அனுபவம், முதிர்ச்சி, உணர்ச்சிகளை கட்டுபடுத்துதல் ஆகியவை இதில் முதற்படி. இவை அனைத்தும் காலத்தோடு ஒன்றி வந்துவிடும்.

மோனிகா உத்தரகாண்டில் உள்ள ரூர்கியை சேர்ந்தவர், அவருடைய குடும்பம் இன்றும் அங்குதான் இருக்கிறது. அவருடைய தந்தைக்குச் சொந்தமான மருந்துக்கடை இருந்தது. அதனை தினமும் கவனித்தபடியே வளர்ந்த மோனிகா தானும் ஒரு தொழில் முனைவோராக மாறுவோம் என கனவிலும் நினைத்ததில்லை. 

தன்னுடைய பங்கிற்கு ப்ராப்ச்சில்லின் இயக்குனராக, அவரும் அவருடைய கணவருமாய் சேர்ந்து பல ஊர்களுக்கு பயணம் செய்து அங்குள்ள முக்கிய இடங்களை தேர்வு செய்து அந்த இடத்தை பற்றிய தகவல்களை ஆராய்வார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த இடத்தில் ஒரு வாரம் தங்கி, தங்களது வேலையை செய்வார்கள். கூடுதலாக, ஒரு இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னரும், அந்த இடத்தைப் பற்றி ஆராய்கிறார்கள். இப்போது பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளை மட்டுமே பரிசீலனை செய்கிறார்.

ஆக்கம் : Saswati Mukherjee | தமிழில்: Sneha