லெட்ஸ்இன்டர்ன்.காம் மை கையகப்படுத்திய ஆஸ்பைரிங் மைன்ட்ஸ்!

0

வேலைத் திறன்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அதன் பொருத்தமான தளமான 'ஆஸ்பைரிங் மைன்ட்ஸ்' (Aspiring Minds), ஆன்லைன் மற்றும் மொபைல் இன்டர்ன்ஷிப் தளமான 'லெட்ஸ்இன்டர்ன்.காம்' (LetsIntern.com) நிறுவனத்தை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்தியுள்ளது. இன்டர்ன்ஷிப் வட்டாரத்தில், ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் முதலீடு திட்டத்தின் ஒரு பகுதியே இந்த கையகப்படுத்தலாகும்.

இந்நிறுவனமானது, 2008 ஆம் ஆண்டு ஹிமான்ஷு மற்றும் வருண் அகர்வால் சகோதரர்களால் நிறுவப்பட்டது. 500 பேர்களை கொண்டு அமெரிக்கா, சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்ரிக்காவின் சஹாரா சார்ந்த நாடுகளில் இயங்கி வருகிறது. ஆஸ்பைரிங் மைன்ட்ஸ், வேலை தேடுபவர்கள் தங்களின் வேலைத் திறனை மதிப்பீடு செய்யவும், துறை அங்கீகார சான்று தகுதி பெறவும் மற்றும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற உதவி செய்கிறது. நிறுவனங்களின் தரம் மற்றும் பணியமர்த்தல் திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் 3,500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கிறது.

ஹிமான்ஷு மற்றும் வருண் அகர்வால்
ஹிமான்ஷு மற்றும் வருண் அகர்வால்

நிறுவனத்தின் செய்தி வெளியீட்டின் படி, தகுதியின் அடிப்படையில் திறமை சூழலை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாகும். இதன் மூலம் திறமையான வேலை திறன் கொண்ட தகுதியானவர்களை நம்பகத்தன்மையோடு அறிவுத்திறம் வாய்ந்த மதிப்பீடு கொண்டு ஒருங்கிணைக்கிறது. நிறுவனத்தின் முதன்மை தேர்வான, ஆம்கேட் (AMCAT), உலகின் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படும் வேலைவாய்ப்பு தேர்வாகும். இது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு மேல் தேர்வு எழுதுபவர்களை, சரியான வேலையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது என செய்தி வெளியீடு கூறுகிறது.

கையகப்படுத்தல் குறித்து செய்தி வெளியீடு கூறுகையில், "இந்த திட்டமிட்ட கையகப்படுத்தல் மூலமாக ஆஸ்பைரிங் மைன்ட்ஸ், வேகமாக வளர்ந்து வரும் இந்த முக்கியமான இடத்தை உடனடியாக அடைய முடிகிறது. நிறுவனத்தின் முதன்மை தேர்வான ஆம்கேட்டுடன் லெட்ஸ்இன்டர்ன்.காம் இணை திறன் கொண்டுள்ளதால், முதன்முறை வேலை தேடுவோருக்கு பயனுள்ளதாக அமையும்.

கையகப்படுத்தல் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹிமான்ஷு, "எங்களுக்கு, இன்டர்ன்ஷிப் வட்டாரத்தில் நம்பகத்தக்க நிலையை லெட்ஸ்இன்டர்ன்.காம் அளிப்பதுடன், மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவன அமைப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும் எங்களின் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளது. ஆம்கேட் மற்றும் லெட்ஸ்இன்டர்ன்.காம் தளத்தின் தாக்கமானதை ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க இணைதிறம் அடைய வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்".

மாணவர்களை இன்டர்ன்ஷிப்புக்காக நிறுவனங்களோடு இணைக்கும் லெட்ஸ்இன்டர்ன்.காம், ரிஷப் குப்தா, மாயன்க் பதீஜா மற்றும் பிரணாய் ஸ்வரூப் ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரிஷப் கூறுகையில்,

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சூழலில் புரட்சி செய்வதெனும் ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் ன் நோக்கத்தோடு எங்களால் உடனடியாக அவர்களோடு இணைந்து விட முடிந்தது. இன்டர்ன்ஷிப் வட்டாரத்தில் லெட்ஸ்இன்டர்ன்.காமின் அனுபவம் மற்றும் அதன் நிலையான மாணவர் கட்டமைப்பு மற்றும் 22,000 நிறுவனங்கள் அனைத்தும் ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் க்கு மதிப்பு கூட்டப்பட்ட தொழிலாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

லெட்ஸ்இன்டர்ன்.காம் ன் முதன்மை செயல் அலுவலர், பிரணய் கூறுகையில், "மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பினை சிறப்பான முறையில் உறுதி செய்யும் நோக்கத்தோடு தான் லெட்ஸ்இன்டர்ன் உருவாக்கப்பட்டது . மேலும் அடுத்த கட்டமாக, அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதுடன், அடுத்து முன்னேறுவதற்கான வழிகளை பரிந்துரை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது.

மேலும், லெட்ஸ்இன்டர்ன்.காம் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஆஸ்பைரிங் மைன்ட்ஸ், தனது தளத்தின் வளர்ச்சிக்காக, இந்தியா மற்றும் வெளிநாட்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களிடையே ஈடுபடும். இந்த ஒப்பந்தத்தின் படி, லெட்ஸ்இன்டர்ன்.காம் அமைப்பினர் தொடர்ந்து லெட்ஸ்இன்டர்ன் தள வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள். இது ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் கையகப்படுத்தல் ஆகும். இந்த ஆண்டிலேயே, இந்நிறுவனம், மிஜ்காயின் (Mizcoin) என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

துறை மேற்பார்வை மற்றும் யுவர்ஸ்டோரி பதிவு

இந்தியாவின் மக்கள் தொகை படிப்படியாக வளர்ந்து வரும் சூழலில், தொழில் முனைவோருக்கும் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களுக்கும் பல திறன்கள் கொண்ட தகுதி வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது சவாலாக உள்ளது. பல நிறுவனங்கள் நுழைவு நடைமுறைகள் கொண்டுள்ளதோடு புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட தளத்தின் மூலம் முன்னதாகவே தேவையான திறன்களில் பயிற்சி பெற்றிருப்பது நிறுவனங்களுக்கு வசதியாக அமையும்.

ஆற்றல் மிக்க பணியாளர்களை உருவாக்க பல தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பயிற்சியளித்து வருகின்றனர். சமீபத்தில், நானோடிகிரி (Nanodegree) யை தொடங்கிய உடாசிட்டி (Udacity), திறமையான பயிர்ச்சியாளர்களை கொண்டு குறிப்பிட்ட திறன்களை கற்றுக் கொடுத்து வருகின்றது. அதன் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் லிங்க்ட்இன் (LinkedIn) கையகப்படுத்திய லிண்டா.காம் (Lynda.com) மை குறிப்பிடவேண்டும். இந்தியாவில், டிசையர் (DeZyre) நிறுவனம், தொழில் சம்பந்தப்பட்ட திறன் மேம்பாட்டிற்காக நேரடி ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்தியாவில், வேலை தேடுதல் மற்றும் பொருத்தமான வேலை போன்ற பிரிவுகளில் மான்ஸ்டர்.காம் (Monster.com) மற்றும் நவுக்கிரி.காம் (Naukri.com) போன்றவை முன்னணி வகிக்கின்றன.

வேலைத் திறன் பயிற்சி மற்றும் பொருத்தமான வேலை போன்றவற்றில் முழு சேவைகளை அளிப்பதை ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் குறிக்கோளாக கொண்டுள்ளது. லெட்ஸ்இன்டர்ன்.காம் கையகப்படுத்தியதன் மூலமாக ஆற்றல் மிகுந்த இளைஞர்களை தங்கள் சந்தைக்கு ஈர்க்க முடியும்.

இணையதள முகவரி : AspiringMinds