இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ’சைபோர்க் கரப்பான்பூச்சி’ உருவாக்கிய இந்திய விஞ்ஞானி!

0

வருங்காலத்தில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் அடியில் இடிபாடுகளில் சிக்கியர்களை ஒரு கரப்பான்பூச்சி மீட்டதாக செய்தி வந்தால் நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்.

பயோரோபோடிக்ஸ் கான்செப்ட் அடிப்படையில் அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி அபிஷேக் தத்தா பல்கலைக்கழகத்தின் மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் கைகோர்த்து சைபோர்க்ஸ் என்றழைக்கப்படும் ரோபோட் இணைக்கப்பட்ட கரப்பான்பூச்சியை உருவாக்கியுள்ளார்.

அபிஷேக் எலக்ட்ரிகல் மற்றும் கணிணி பொறியியல் பேராசிரியர். இவர் கட்டுப்பாடு அமைப்பு மேம்பாடு மற்றும் சைபர்-பிசிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஈவன் ஃபாக்னர் என்கிற இளங்கலை மாணவருடன் இணைந்து அபிஷேக் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். இது ப்ளூடூத் வாயிலாக கட்டுப்படுத்தப்படும் சைபோர்க் கரப்பான்பூச்சி சார்ந்தது என ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

ஆராய்ச்சியின் முன்வடிவம் மடகாஸ்கர் கரப்பான்பூச்சி வகையைக் கொண்டதாகும். இக்குழுவினர் மைக்ரோசர்க்யூட் அடங்கிய அமைப்பை கரப்பான்பூச்சியின் மீது பொருத்தியுள்ளனர். ஆன்டெனா வாயிலாக பூச்சியை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த மைக்ரோசர்க்யூட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்சார சிக்னல்கள் செலுத்துவதன் மூலம் பூச்சியை இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ திருப்பமுடியும். இந்த சிக்னல் பூச்சியை அனைத்து திசைகளிலும் நகரச்செய்யும் என ’இண்டியாடுடே’ குறிப்பிடுகிறது.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த UConn Today-க்கு அபிஷேக் தெரிவிக்கையில்,

தேடல், மீட்பு, தேசிய பாதுகாப்பு என பூச்சியைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகைகளில் பயனுள்ளது.

அவரது உதவியாளரான ஈவன் ஃபாக்னர் கூறுகையில்,

எங்களது மைக்ரோசர்க்யூட் அதிநவீன நம்பகமான கட்டுப்பாடு அமைப்பை வழங்குகிறது. இது இந்த தொழில்நுட்பத்தை நிஜ உலகில் செயல்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய நகர்வாகும்.

பூச்சியின் முதுகின் பின்புறம் உள்ள ஒன்பது திசைகளின் நகர்வை அளவிடக்கூடிய அமைப்பானது (nine-axis inertial measurement unit) பூச்சியின் நேரான மற்றும் சுழற்சியான நகர்வை கண்காணித்து, திசைகாட்டி சுட்டிக்காட்டும் திசையைக் கண்டறிந்து, பூச்சியின் சுற்றுப்புற வெப்பநிலையைக் கண்டறியும்.

பூச்சியின் நகர்வைக் கொண்டு சேகரிக்கப்படும் தகவல்கள் அந்தக் கருவியில் உள்ள ஒரு சிறிய ப்ளூடூத் ஆன்டெனா வாயிலாக அதனை இயக்குபவருக்கு அனுப்பப்படும். சாதாரண செல்ஃபோன் வாயிலாகவும் சிக்னலைக் கண்டறியலாம்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL