இந்தியாவின் 'டெக்30' இல் இடம்பெற்று, ரூ.10 லட்சம் வெற்றி பெற உடனே விண்ணப்பியுங்கள்!

0

'லிட்டில் ஐ லேப்ஸ்', ஃபேஸ்புக் கையகப்படுத்திய முதல் இந்திய நிறுவனம்.'மூன்ஃப்ராக் லேப்ஸ்', கேப்பிலரி டெக்னாலஜீஸ் மற்றும் ஐடியா டிவைஸ் இவையெல்லம் செக்கோயா கேப்பிடல் இடமிருந்து முதலீடு பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். லாஜினெக்ஸ்ட், ஃபோரஸ் ஹெல்த், ஹெக்கில் டெக்னாலஜீஸ் மற்றும் ஃப்ரெஷ்டெஸ்க் போன்ற ஸ்டார்ட் அப் களும் விசி முதலீட்டை ஈர்த்த நிறுவனங்கள். ஆனால் மேற்கூறிய எல்லா நிறுவனங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது... அது என்ன தெரியுமா?? அவையெல்லாம் யுவர்ஸ்டோரி இன் 'டெக்30' (Tech30) பட்டியலில் கடந்த 6 வருடங்களாக இடம் பெற்ற ஸ்டார்ட் அப் கள் ஆகும். 

'டெக்ஸ்பார்க்ஸ் 2016' 'TechSparks 2016' நிகழ்ச்சிக்கான விண்ணப்பம் வரவேற்கப் படுகின்றன. வாருங்கள் எங்களுடன் கலந்து கொண்டு டெக்30 நிறுவனங்களில் ஒன்றாகும் வாய்ப்பை பெறுங்கள்! 

ஆரம்ப கட்டத்தில் உள்ள 30 தொடக்க தொழில்நுட்ப முயற்சிகளை தேர்ந்தெடுத்து, யுவர்ஸ்டோரி உலகிற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வருகிறது. புதுமையான, உலகளவில் வெற்றியடையக் கூடிய இந்திய நாட்டை பெருமைப்படவைக்கக் கூடிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அவை.  

வாருங்கள்! இந்த டெக்30 இல் ஒன்றாக நீங்கள் இன்றே விண்ணப்பியுங்கள்! 10 லட்சம் ரூபாய் வெல்லக்கூடிய அரிய வாய்ப்பை தவர விடாதீர்கள்! உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். (டெக்30 இல் விண்ணப்பித்து நுழைவுக் கட்டணத்தில் 60% தள்ளுபடி பெறுங்கள். 'Apply for TECH30’ எனும் கோடை உபயோகித்து 60% தள்ளுபடி பெருங்கள்).

TECH30 தேர்வு அம்சங்கள்:

* தயரிப்பின் புத்தாக்கம் (தொழில்நுட்பத்தின் பங்கு)

* சந்தை வாய்ப்புகள் (யார் வாடிக்கையாளர்கள்?, போட்டி, வளர்ச்சி வாய்ப்புகள், லாபத்திற்கான வழிகள்)

* குழுவினர் பலம்  (நிறுவனர் பின்னணி, குழுவின் பலம் மற்றும் எண்ணிக்கை)

* வருவாய் மாதிரி (வருவாய் உற்பத்தி, நிலைத்தன்மை, லாபம்)

* தயாரிப்பு/நிறுவனத்தின் காலச்சக்கரம் ( வாடிக்கையாளர்கள், தயாரிப்பின் பதிப்பு, வளர்ச்சியின் அட்டவணை, விரிவாக்கத் திட்டங்கள்) 

யுவர்ஸ்டோரி வருடாந்தர டெக்30 ரிப்போர்ட் ஒன்றை டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியிட்டு வருகிறது. தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து வெளியிடப்படும் இந்தியாவின் முதல் கையேடு இது. 2000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் களை பற்றி ஆவணப்படுத்தியுள்ளது யுவர்ஸ்டோரி. இது மேலும் புதிதாக வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிக்காட்டியாக அமைகிறது. 

டெக்30 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் 9600 விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. 180 ஸ்டார்ட் அப் கள் தேர்வு செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டனர். டெக்30 இல் கலந்துகொண்ட 50% தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விசி முதலீடு கிடைத்துள்ளது. டெக்30 நிறுவனங்களின் மதிப்பு சுமார் 60மில்லியன் டாலர்களாக உள்ளது.

விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்:  Apply to be a TECH30 

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14, 2016.

மேலும் சந்தேகங்களுக்கு techsparks@yourstory.com மெயில் செய்யலாம்.