நீட் தேர்வை இனி தமிழில் எழுதலாம்- மக்களவையில் தகவல்!

0

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வான நீட் தேர்வை இனி எட்டு இந்திய மொழிகளில் மாணவர்கள் எழுதலாம் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மக்களவையில் நேற்று கூறினார். அவர் இதுகுறித்து பேசியபோது,  

“இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 பிரிவு 10(டி)ன் படி பொது நுழைவுத்தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் நடத்த வேண்டும் என்று சொல்கிறது. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதையடுத்து 2017ம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கில் நடத்தப்படும்,” என்று கூறினார்.

மத்திய அரசின் 15 சதவீத இடஒதுக்கீட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால் மாநில அரசுகளின்கீழ் வரும் 85 சதவீத இடங்களில் (இளங்கலை/ முதுகலை) அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றார் மேலும். மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு கொள்கையை நீட் தேர்வு எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவித்தார்.