TechSparks மேடையில் அல்ஜீப்ரா ராப் பாடி தன் வெற்றிக் கதையை பகிர்ந்து கொண்ட பைஜு ரவீந்திரன் 

”நான் லட்சங்களில் சம்பாதிக்க நினைக்கவில்லை, லட்ச மக்களின் சிந்தனை மற்றும் கற்றலை மாற்ற விரும்புகிறேன்’- பைஜூஸ் கல்வி நிறுவன நிறுவனர் பைஜு ரவீந்திரன்.

0

ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் மேடையில் ஏறி ராப் செய்வதை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் நிறுவனரான பைஜு ரவீந்திரன் Techspark 2017-ன் இரண்டாம் நிகழ்வில் மேடையில் ராப் இசை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ராப் என்றால் எதோ ஒரு இசை அல்ல; அல்ஜீப்ரா சமன்பாட்டை ராப்பாக பாடியுள்ளார்.

மேடை ஏறிய அவர் தன் பயணத்தை எவ்வாறு தொடர்ந்தார் என்பதை பற்றி பேசினார். முதலில் நண்பர்களிடையே தொடங்கி பின் அரங்குங்கள் என வகுப்பெடுத்து தற்பொழுது எட்டெக் நிறுவனங்களில் 5-வது எடுத்தில் உள்ளார்.

“இன்னும் 75 மில்லியன் டாலர்கள் உயர்ந்தால் நாங்கள் முதல் இடத்தை அடைந்து விடுவோம்,” என்றார்.

எட்டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் சாங்-ஜுக்கர்பெர்க் இடம் இருந்து நிதியுதவி பெற்ற முதல் இந்திய நிறுவனம் இது. இருப்பினும் இது எல்லாம் வெறும் எண்கள்தான், நாங்கள் வெறும் 1 சதவீத மாணவர்களை மட்டுமே சென்று அடைந்துள்ளோம் என்றார். இவரின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் மனப்பாடம் செய்து படிப்பதை தவிர்த்து புதிய வழியில் பாடங்களை அணுகுகிறது. அல்ஜீப்ரா சமன்பாட்டை அவர் ராப் செய்ததே இதற்குச் சான்றாகும்.

கேரளாவை சேர்ந்த பைஜு தன் பைஜுஸ் வகுப்பை, போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை கற்பித்து தொடங்கினார். தற்பொழுது பைஜுஸ் ஆப், கே-12 மாணவர்களை நோக்கியே உள்ளது. மேலும் அவரது ஆப் 8 மில்லியன் டவுன்லோடை தாண்டி சென்றுள்ளது, அதில் 4 மில்லியன் மக்கள் பணம் செலுத்தி படிப்பவர்கள். இருப்பினும் கல்வியில் புரட்சி செய்வதற்கு இது போதாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலீடு மற்றும் கையகப்படுத்துதல்

கடந்த ஆண்டு, பைஜு முதலீட்டாளர்களிடமிருந்து மூன்று சுற்றுகளில் $140 மில்லியன் திரட்டியது, இதில் ஏப்ரல் மாதத்தில் Sequoia Capital மற்றும் Sofina இருந்து $75 மில்லியன் அடங்கும். சமீபத்திய சுற்று நிதியுதவி பைஜுவின் மதிப்பை 2015-ல் $160 மில்லியனிலிருந்து தற்போது சுமார் $500 மில்லியன் வரை தள்ளியுள்ளது.

இந்த வருடம் பைஜுஸ் ஸ்டார்ட்-அப் டென்சென்ட் முதலீட்டை பெற்றுள்ளது மேலும் TutorVista மற்றும் Edurite நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

பைஜுஸ் நிறுவனம் தற்பொழுது மத்திய கிழக்கிற்கு எடுத்து செல்ல உள்ளது. மேலும் இந்தியாவில் பல உள் நகரத்திற்கும் கிராமங்களுக்கும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய சந்தை

TutorVista மற்றும் Edurite-ஐ கைப்பற்றி, தன் நிறுவனத்தை விரிவுப்படுத்தியுள்ளது, TutorVista அமெரிக்காவில் அதிக வாடிக்கையாளர்களை கொன்ட நிறுவனமாகும். அதனால் அடுத்த 18 மாதத்திற்குள் அமெரிக்காவில் விரிவடைய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது 50,000 மாணவர்கள் தங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செயுதுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் வகுப்பில் செலவிடும் நேரம் 51 நிமிடங்களாக உள்ளது, இது புத்தகத்தில் செலவிடப்பட்ட நேரத்துடன் ஒப்பிடும்போது சுமார் 16 சதவீதம் ஆகும்.

“தற்போது சப்ஸ்க்ரைப் செய்துள்ளவர்களுள் 89% மாணவர்கள் புதுபித்துள்ளனர்,” என விளக்கினார் பைஜு.

இப்பொழுது இருக்கும் கல்விச் சூழலில் பயிற்சி என்பது மிகப்பெரிய பிரிவாகி விட்டது; இன்னும் 15 சதவீதம் இது வளரும். 2014 ல் $11 பில்லியனில் இருந்து 2017-ல் $16 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது.

“எங்கள் பயணம் இன்னும் நெடுதூரம் உள்ளது. தற்பொழுது எங்கள் கவனம் தனிப்பயனாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் மேலும் அதை வேகமாகவும் மாணவர்களுக்கு பிடித்த வகையில் கொண்டு செல்வதாகும்,” என முடித்தார் பைஜு.