மின்சாரமின்றி இயங்கும் ஃபேன்: தாத்தாவின் துயரை துடைத்த சென்னை இளைஞர்! 

0

மின்சாரத் தடையால் மக்கள் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் சிறு தொழில் நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் ஜெனரேட்டர் அல்லது இன்வர்டர்கள் பயன்படுத்த முடியாது என்பதால் மின்சார தடையால் நஷ்டம் ஏற்படுகிறது. 

இது போன்ற பிரச்சனைகளுக்கு சிலசமயம் தனி நபர்களே தீர்வு காண முயல்வது வழக்கம். சென்னையைச் சேர்ந்த இளைஞர் தினேஷ், கைத்தறி மையத்தில் பணிபுரியும் தனது தாத்தாவின் பிரச்சனைக்கு முடிவு கட்ட நினைத்தார். மின்சாரம் தடையின்போது அவர் அவதிப்படுவதை அடுத்து, மின்சாரம் தேவைப்படாத ஃபேன் ஒன்றை உருவாக்கி தன் தாத்தாவை குளிர்வித்தார் தினேஷ். அந்த காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். 

"இது என் கண்டுபிடிப்பு... என் தாத்தாவுக்காக... மின்சாரம் தேவைப்படாத கைத்தறியில் பயன்படுத்த உதவும் ஃபேன்...”  

தினேஷ் ஒரு எலக்டிரிக்கல் டிசைன் இன்ஜினியர். சிறு வயது முதல் தன் தாத்தா கைத்தறியில் அயராது பணிபுரிவதை பார்த்து வளர்ந்தவர். ஆனால் கைத்தறி மையத்தில் மின்சார தடையால் பல சமயங்களில் வேலையை முடிக்கமுடியாமல் தவிப்பத்தை பார்த்து மனம் வேதனை அடைந்த தினேஷ், அதற்கு தீர்வாக தானே ஒரு ஃபேனை வடிவமைத்தார். கைகளால் ஓட்டப்படும் அந்த ஃபேனை தாத்தாவின் கைத்தறி நிலையத்தில் பொருத்தி அவரின் பணியை தொடர உறுதுணையாய் இருக்கிறார். 

வாழ்த்துக்கள் தினேஷ்!

கட்டுரை: Think Change India