முதல் முறை நிறுவனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 பண்புகள்!

0

20 வயதே ஆன 63% மக்கள் தங்களின் சொந்த தொழிலை தொடங்குவதற்கான தீவிர ஆர்வம் காட்டுவதாக சமீபத்தில் ‘ஃபீனிக்ஸ் பல்கலைக்கழக’த்தால் நடத்தப்பட்ட மதிப்பாய்வு (கணக்கெடுப்பில்) தெரிவிக்கிறது. 1990-களில் பிறந்த மக்கள் இந்த ஆய்வு சரியென்றே நிரூபிக்கின்றனர். இன்று நகர்ப்புற வீட்டில் வசிப்பவர்கள் வீட்டுக்கு ஒருவராவது தனக்கான சொந்த தொழிலை செய்து வருவதை சுலபமாக காண முடிகிறது. பாதுகாப்பான, பெருநிறுவனங்களில் வேலை செய்பவர்கள்கூட தங்கள் வேலையை துறந்து தனக்கு பிடித்தமான வேலையை செய்து தொழில் முனைவதற்கான வேலைகளில் ஈடுபடுகின்றனர். எதுவானாலும் புதியதாய் தொடங்கப்படும் தொழில்களுக்கான பொற்காலம் என்றே இன்றைய நிலையை சொல்ல முடியும்.

தொடர் தொழில்முனைவரும், 'கிளிப்' என்னும் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரிம்யான அலைன் ரோஸ்மன் தெரிவிக்கையில்,

"10 மடங்குக்கும் குறைவான மூலதனத்தில், 10க்கும் குறைவான ஊழியர்களை வைத்துக்கொண்டு, 10 மடங்குக்கும் அதிகமாக சாதிக்க முடியும். நம்ப முடியாத விஷயம் இது. இது புதிய நிறுவனங்களின் பொற்காலம். அதை எல்லோரும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் வணிகம் ஆரம்பிப்பதற்கு எது உங்களை எத்தனிக்கிறது? முக்கியமாக வணிகத்தில் நீங்கள் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல்முறையெனில் எது உங்களை வெற்றி பெற்ற தொழிலதிபராக மாற்றுகிறது? உங்களின் பயத்தையும் கனவுகளையும் நனவாக்க முதல் தலைமுறை நிறுவனர்கள் கடைபிடிக்க வேண்டிய 5 பண்புகள் இதோ!

தெளிந்த பார்வை

வணிகத்தை பற்றிய பார்வையே உங்கள் ஆயுதம். அதுமட்டுமே உங்களின் கஷ்டகாலத்திலும் உங்களின் தொழில் மூழ்கிவிடாமல் காப்பாற்றும். தெளிந்த பார்வையும் உங்களின் இலக்குகள் என்ன என்று நீங்கள் கொண்ட தெளிவுமே நீங்கள் ஒரு சிறந்த நிறுவனர் ஆவதற்கான முதல் படி. உங்கள் தயாரிப்பினை பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாமல் போகும்பட்சத்தில், உங்களுடைய வணிகத்தில் சிறந்த முதலீட்டாளர்களை காணவே முடியாமலோ அல்லது உறுதியான அணியினை அமைக்க முடியாமலோ போய்விடலாம். நீங்கள் உங்கள் வணிகத்தை துவங்குவதற்கு முன்னரே உங்களது வணிக மாதிரி பற்றிய தெளிவும், வளர்ச்சி அம்சங்களும், சாத்தியமான சந்தையையும் நீங்கள் தீர்மானித்திருக்க வேண்டும்.

பயனுள்ள தகவல் பரிமாற்றம்

எதுவும் தாமதமாகவில்லை. ஒரு சிறந்த நிறுவனருக்கு மிகச்சிறந்த தகவல் தொடர்புத் திறன் இருத்தல் வேண்டும். அதன்மூலம், ஒரு மொழியில் நம்மால் சரளமாக பேசமுடியாவிட்டாலும், உங்கள் பங்குதாரர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் உங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடமும் இலகுவாக தகவல்களை தெரிவிக்க முடியும். எது எப்படியானாலும் உங்கள் வணிக மாதிரியை உங்களால் சுருக்கமாகவும் தெளிவாகவும் புரியவைக்க முடிய வேண்டும்.

கருத்துகளை மதிக்கும் பண்பு

எல்லா முதல் முறை (சில நேரங்களில் தொடர்) தொழில்முனைவர்களிடம் சில நேரங்களில் மக்கள், 'உங்கள் யோசனை சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை' என்றோ 'இல்லை இல்லை இது போன்ற யோசனைகளில் ஏற்கனவே மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்ட போட்டியான சந்தையில் அவர்களை மீறி நாம் வெற்றி பெறுவது சந்தேகமே' என்று சொல்வதுண்டு. நீங்களும் இது போன்ற வாக்கியங்களை கேள்வி பட்டிருக்கிறீர்கள் அல்லவா?

உண்மையான பண்பு என்னவெனில், அத்தகைய கருத்துகளை நேர்மறையாக எடுத்துக்கொண்டு உங்களுக்கான சிறந்த வணிக மாதிரியை தயார் செய்வதுதான். வேண்டுமானால் உங்களது யோசனையில் சிறு மாறுதல்களோ அல்லது சந்தையில் நிலையாக இருப்பதற்கு அதிகமான நிதியை செலவிட வேண்டியதிருக்கலாம். உங்களின் தொழில் பயணத்தில் என்றுமே நிலையான கருத்துகளை எதிர்நோக்கியும் உங்கள் வெற்றியின் முன் வரும் தடைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதிலும் தீவிரம் காட்டுங்கள்.

ஒரு உயிர்ப்பான அணுகுமுறை

தொடக்கத்தில் எல்லா வேலைகளையும் ஒரு நிறுவனரே செய்ய வேண்டியிருக்கும். பால் கிரஹாம், ஒய்காம்பினேட்டர் மற்றும் வயாவெப்பின் துணை நிறுவனர் கூறுகையில், தொடக்க நிறுவனர்கள் 'இருக்கும் தொழில் சீராய் இருக்க வழிகள் செய்ய வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் நிறுவனர்கள் போதுமான வேலைகளை செய்யும்பட்சத்தில்தான் அவர்களின் தொழிலும் துவங்கும். எதிர்காலத்தில் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்காக சில அணிகளையோ, தற்காலிக பணியாளர்களையோ நீங்கள் பணியில் அமர்த்தக்கூடும். ஆனால் துவக்கத்தில், நீங்கள் மட்டும்தான், எப்போதுமே நீங்கள் உங்களுக்காக வேலை செய்துகொள்வதே நல்லது. முதலில் நிறுவன இயக்கத்திற்கான நிலையான வடிவத்தை இயற்றிடுதல் வேண்டும். அப்போதுதான் உங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் அந்த விதிகளை கடைபிடிப்பார்கள்.

ஆர்வமிக்கவராக இருத்தல்

உங்களிடம் சரியான யோசனையும் அதற்கு நிதி தருவதற்கு வலிமையான முதலீட்டாளரும் இருக்கும்பட்சத்தில் நீங்கள் சிறந்த திறமைசாலிகளைக் கொண்ட ஒரு அணியை உருவாக்குவீர்கள். அவர்கள்தான் உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடும். ஆனால் ஆற்றலும் உற்சாகமும் இல்லாத சமயத்தில் உங்களால் உங்கள் தொழிலை அடுத்த இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் போகலாம். உந்துசக்தியுடனும் பேராற்றலுடனும் வேலை செய்வது மட்டுமே உங்கள் பணியாளர்களை மட்டும் உங்களிடம் நிலைநிறுத்தாது உங்கள் முதலீட்டாளர்களையும் உங்கள் இலக்குகள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

வெற்றிபெற்ற தொடக்க நிறுவனர்கள், உலகையே புரட்டிப்போடும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் ஊக்குவிப்பதிலும் வல்லவர்கள். இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள பண்புகளில் நீங்கள் தலைசிறந்தவர்களாக இருப்பீர்களானால் நீங்கள் நிச்சயம் உங்கள் பணியில் சிறந்தவராகவும் உங்கள் நிறுவனத்தை உறுதியாக தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்