டைம்ஸ் உலக பல்கலைகழக பட்டியல் ரேன்கிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தியா! 

0

இந்திய பல்கலைகழங்கள், இந்த ஆண்டிற்கான ‘Times Higher Education World University Rankings’-இல் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்திய பல்கலைகலழகங்கள் எவையும் டாப் 200-ல் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச 1000 கல்வி நிலையங்கள் பட்டியலில் வெறும் 30 இந்திய நிலையங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ஒரு எண்ணிக்கை குறைவாகும்.

ஐஐடி பாம்பே தவிர, மற்ற ஐஐடி-களான ஐஐட் மெட்ராஸ், ஐஐடி டெல்லி பட்டியல் ரேன்கில் ஒரு படி கீழே வந்துள்ளது. இந்தியாவின் சிறந்த கல்வி நிலையமான ஐஐஎஸ்சி-யும் 201-250 க்ரூப்பில் இருந்து 251-300 க்ரூப்பிற்கு தள்ளப்பட்டுள்ளது. லைவ்மின்ட் பத்திரிகையின் படி,

”அரசு பாலிசியின்படி, இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கட்டுபாடு இருக்கிறது. அதே போல் அவர்களை நீண்ட கால ஆசிரியர் பணிக்கு அமர்த்துவதையும் தடுக்கிறது. ஆனால் உலகத் தரம் வாய்ந்த பல்கலைகழக திட்டம் மூலம் இதில் விரைவில் மாற்றம் வரலாம்.” 

மற்ற ஆசிய நாடான சீனா பட்டியல் ரேன்கிங்கில் முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவின் இந்த கீழ்முகம் சற்று அதிர்ச்சியை தருச்கிறது. க்ளோபல் ரேன்கிங்க்ஸ் இயக்குனர் பில் பாட்டி இது பற்றி பேசுகையில்,

Times Higher Education World University Rankings-ல் இந்தியாவின் நிலை கவலையை அளிக்கிறது. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் கல்வித்தரத்தில் உயர்ந்துள்ள நிலையில் இந்தியா குறைவாக உள்ளது அதிருப்தியை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த கல்வி நிலையமான ஐஐஎஸ்சி-யும் பட்டியலில் கீழே சென்றது எதிர்ப்பார்க்காதது,” என்றார். 

ஆக்ஸ்பர்டு பல்கலைகழகம் உலகில் முதல் இடத்தில் முன்னேறி, கடந்த ஆண்டு முதல் ரேன்கில் இருந்த கேம்பிரிட்ஜ் பல்கலையை இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளது. முதல் இரண்டு ரேன்கிலும் யூகே பல்கலைகழகங்கள் பிடித்துள்ளது இதுவே வரலாற்றில் முதன் முறையாகும்.

அலிகார் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் ஹிந்து பல்கலை, டெல்லி பல்கலைகழகம், இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ், ஜாதவ்பூர் பல்கலை, என்ஐடி ரூர்கேலா, பஞ்சாப் பல்கலைகழகம், சாவித்திரிபாய் பூலே பூனே, தேஜ்பூர் பல்கலைகழகம், அம்ரிதா பல்கலைகழகம் மற்றும் ஆந்திரா பல்கலைகழகம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற இந்திய பல்கலைகழகங்கள் ஆகும். 

கட்டுரை: Think Change India