சொந்த இழப்பில் இருந்து மீண்டு சுனில் சூரி மற்றவர்களுக்கு உதவியது எப்படி?

0

சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு உத்வேகமூட்டும் வெவ்வேறு ஆதாரங்கள் மக்களிடம் இருக்கின்றன. ஆனால் சுனில் சூரிக்கு காரணமாக அமைந்த மிகச்சிறந்த விஷயம், அது மிகப்பெரிய சொந்த இழப்பு.

தன் தாயை மார்பகப் புற்றுநோயால் இழந்தபோது, தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டபோது, மென்பொருள் பொறியாளரான அவருடைய வாழ்க்கை எப்போதும் இல்லாத அளவுக்கு மாறிப்போனது. உணவும் ஆரோக்கியமும்தான் முக்கியமான பிரச்சினைகளாக அவருக்கு இருந்தது. தன் தந்தைக்கு சரியான உணவு பழக்கமும் தொடர் கண்காணிப்பும் இருந்திருந்தால் அவர் நீண்டநாட்கள் வாழ்ந்திருப்பார் என சுனில் வேதனை அடைந்தார்.

பேரார்வத்தையும் தாண்டி அப்பாவுக்கு அளிக்கும் அஞ்சலியாக, சுனில், "ஸ்வதேஷ் மெனு ப்ளானர்" என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷனை உருவாக்கினார். பயனர்கள் தங்களுடைய டயட் திட்டத்தை பதிவு செய்வதற்கும், அதனை டயட்டீசியன்கள் பரிசோதித்து சான்றளிப்பதற்குமான தளமாக அது இருந்தது. அந்த சேவையை அவர் இரண்டே மாதங்களில் உருவாக்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த இலவச சேவையை அடுத்து ஆறு மாதங்களுக்கு யாரும் எடுத்துக்கொள்ள முன்வரவில்லை.

விஷயங்கள் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்குச் செல்லும்போது, அவர் முக்கியமான மையத்துக்கு நகர முடிவு செய்தார். உணவும் ஆரோக்கியமும் அவருடைய பிரதான ஆர்வமாக இருந்தது. முதலில் அவர்களிடம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்றார் பின்னர் அவர்களுக்கு இலவசமாக மெனு ப்ளானரை அளித்தார் சுனில்.

பழங்கள், காய்கறிகளை விற்பது வேலையெடுக்கும் வேலை என்பது அவருக்குப் புரிந்தது. மிகவும் இறுக்கமான போட்டியில், பல தொடக்கநிலை நிறுவனங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்தன. இதை ஒரு ஆரம்பக்கட்ட தடையாக நினைத்த சுனில், புதிய கண்டுபிடிப்பு மாடல் பக்கம் போக விரும்பவில்லை. அது நஷ்டத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்தார். பல தொடக்கநிலை நிறுவனங்கள் அதே நாளில் டெலிவரி செய்யும் சேவையை அளித்து வந்தன. சுனிலோ அதற்கு நேர்மாறாக மாற்றி யோசித்தார்.

ஜூன் 2015 ஆம் ஆண்டு "ஃபல்பூல்" (Falphool) ஆன்லைன் தளத்தை தொடங்கினார். வடமேற்கு தில்லியில், மாலை நேரத்தில் பழங்கள், காய்கறிகளை ஆர்டர் செய்தால் மறுநாள் காலையில் விநியோகம் செய்யும் தளமாக இருந்தது.

“இந்த தளத்தில், வாடிக்கையாளர்களும் அந்த நிறுவனமும் பயன்பெறும். எங்களிடம் வீணாவது என்பதே கிடையாது. அடுத்த சில மாதங்களில், தேவை அதிகரிக்கும்போது நாங்கள் மருந்துகள், தாவரங்கள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்க இருக்கிறோம்” என்கிறார் உற்சாகமாக 41 வயதாகும் சுனில் சூரி, ஃபல்பூல்.காம் இன் நிறுவனர்.

ஆறே மாதங்களில் 3 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ததாகவும், தினமும் 45 ஆர்டர்களைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார் அவர். இந்தத் தளம் மட்டுமே பழங்கள், காய்கறிகள், தாவரங்கள், மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களுக்கான முற்றும் முழுதுமான தீர்வை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் சுனில்.

இதுவரையில், ஏழு, எட்டு லட்சம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகக் கூறுகிறார் சுனில். “வாடிக்கையாளர்களை கையகப்படுத்துவதற்கு, நாங்கள் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாழ்பொழி பிரச்சாரத்தை நல்ல சந்தைப்படுத்தும் நுட்பங்களாக பயன்படுத்துகிறோம்.”

கடந்த நவம்பர் 2015இல், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஃபல்பூல் தளம் புதுவகையான தள்ளுபடிகளை வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. “அதுவரையில், நாங்கள் தள்ளுபடிகள், சலுகைகள் பற்றி யோசித்ததே இல்லை. எனினும், நாங்கள் புதுமையாக செய்ய முடிவுசெய்தோம். அதன்படி அடுத்துவந்த ஏழு நாட்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வழங்கினோம்” என்று விவரிக்கிறார் சுனில்.

இதுவொரு சீர்குலைக்கும் வழிமுறையாக இருந்தாலும், அது தொழில் டு நுகர்வோர்கள் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார் அவர். இதனை நடைமுறைப்படுத்திய போது 74 சதவிகித வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் ஆர்டர்கள் கிடைத்தன.

வலியதே வாழும்

இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தையில், உணவு என்பது அத்தியாயவசியமான தேவையாக இருக்கிறது. அதில் மளிகைப் பொருட்களுக்கு மட்டும் 60 சதவிகித பங்கு இருக்கிறது. இந்தியாவின் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் தொழில்துறை 383 பில்லியன் டாலர் மதிப்புமிக்கது. அது 2020ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலரை எட்டும் டெக்னோபாக்கின் ஆய்வு என்று தெரிவிக்கிறது.

மிக முக்கியமான நிறுவனங்கள், சந்தையில் முன்னணியில் இருக்கின்றன. அவற்றில் பிக் பாஸ்கெட், ஷாப்நவ், க்ரோபர்ஸ், பெப்பர்டேப் மற்றும் ஜக்நூ உள்பட மற்றவர்கள் முதன்மையாக உள்ளனர். முதல் ஐந்து மளிகைப்பொருள் ஆன்லைன் தொடக்கநிலை நிறுவனங்கள் இந்த ஆண்டில் 120 மில்லியன் டாலரில் இருந்து 173.5 மில்லியன் டாலராக வருமானத்தை உயர்த்தியுள்ளனர். பிக் பாஸ்கெட் மற்றும் க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்கள் 45.5 மில்லியன் டாலரில் இருந்து 85.5 மில்லியன் டாலராக உயர்த்தியுள்ளனர்.

இந்தப் போட்டியைப் பற்றி சுனிலிடம் கேட்டால், மற்ற நிறுவனங்கள் எக்கச்சக்கமான பணத்தை தொழிலில் நிலைத்திருக்க முதலீடு செய்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஜனவரி 2016ல் அவர் முதலீடு செய்த பணத்தில் சில சதவிகிதங்களைத் தொட்டுவிட்டார்.

“இந்த பிஸினஸ் மாதிரியைத்தான் எங்களுடைய தொழிலில் பின்பற்றுகிறோம். நாங்கள் தயாரிப்புகளை அடுத்த நாளே டெலிவரி செய்கிறோம். அதே நாளில் விநியோகம் செய்வதற்கு ஒவ்வொரு ஆர்டருக்கும் 45 ரூபாய் கூடுதலாக வாங்குகிறோம்” என்கிறார் சுனில்.

அண்மைக்கால முன்னேற்றங்கள்

சமீபத்தில், இந்த தளம் சிறு மற்றும் குறு மளிகைப் பொருள் கடைகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. விரைவில் அவர்களுடைய பொருள்களையும் ஃபல்பூல். காம் வழியாக விற்கப்போகிறார்கள். தகுதியான வாடிக்கையாளர்கள் வெவ்வேறு கடைகளில் வழங்கப்படும் சலுகைகளைப் பொறுத்தே பொருட்களை வாங்குவார்கள். தற்போது துவார்கா அப்படி சேவையாற்றுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உணவு வகைகளை பகிரும் பிரிவைத் தொடங்கியது. அதில் தங்களுக்குத் தெரிந்த ஆரோக்கியமான உணவு பதார்த்தங்களை சமையல் கலைஞர்களும் வீட்டுப் பெண்களும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

மேலும், ஜூன் 2016க்குள் டெல்லி, குர்கான் மற்றும் நொய்டா நகரங்களின் மற்ற பகுதிகளிலும் தொழிலை விரிவுபடுத்த ஃபல்பூல் தளம் திட்டமிட்டுள்ளது. “இதுதவிர, மெனு பிளானரை பாரம்பரியம் மற்றும் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களுக்காக மேம்படுத்தி மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். சில மாதங்களில் அதைச் செய்துவிடுவோம். அது மிகப்பெரிய கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும்" என்று நம்பிக்கையுடன் விடைகொடுக்கிறார் சுனில்.

இணையதள முகவரி: Falphool

ஆக்கம்: TAUSIF ALAM | தமிழில்: தருண் கார்த்தி