350 கிராமப்புற பெண்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டும் முயற்சிக்கு உதவுங்கள்!

1

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என்றாலே நண்பர்களுடன் பொழுதை கழித்து, ஜாலியாக இருக்கவே கல்லூரி செல்கின்றனர் என்று நினைப்போம். ஆனால் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை நாம் கொஞ்சமும் நினைத்துக்கூட பார்ப்பது இல்லை.

அந்த வகையில், இந்தச் சூழலில் பின் தங்கி இருக்கும் மாணவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது ’போதி ட்ரீ’ அமைப்பு.

நிறுவனர் அஷ்விதா
நிறுவனர் அஷ்விதா
“கிரமப்புற மாணவர்கள் என்றால் பலருக்கு அவர்களின் நிலைமை சரியாக புரிவதில்லை. பின்தங்கிய கிராமத்தில் இருந்து வரும் பெண்களுக்கு பேசக் கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை. நிதி நிலை, படிக்கும் சூழல் என எதுவும் அவர்களுக்கு சரியாக அமைவதில்லை,”

என பேசுகிறார் போதி ட்ரீ-ன் நிறுவனர் அஷ்விதா. முதல் தலைமுறை பட்டதாரியான அஷ்விதா, நெல்லையில் சிறு கிராமத்தில் தன் படிப்பை முடித்து விட்டு மேல் படிப்பிற்காக டெல்லி சென்ற போதே கிரமப்புற மற்றும் நக்ர்புரதிற்கும் உள்ள இடைவெளி அவருக்கு தெரிந்தது. அதன் பின்னரே தன்னால் முடிந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இவ்வமைப்பை துவங்கியுள்ளார்.

இவர் அமைப்பின் மூலம் கடந்த ஆண்டு பின்தங்கிய கிராமப்புற கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து 3 நாட்களுக்கு வொர்க்ஷாப் நடத்தியுள்ளார். இது மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச, வேலை வாய்ப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்லூரிக்கு பின் இருக்கும் வாய்ப்புகள், திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்க்கும் நோக்குடையது.

“கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய இந்த பட்டறை நல்ல பலனை கொடுத்தது. பல மாணவிகள் இதனால் பயனடைந்தது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்கள்.”

இதே போல வரும் கல்வி ஆண்டும் குறைந்தது 10 பட்டறைகளை நடத்த முடிவு செய்துள்ளார் அஷ்விதா. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்யாகுமாரி கிராமங்களில் உள்ள கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து இதை நடத்த உள்ளனர். ஒரு அமர்வுக்கு 35 மாணவிகள் என மொத்தம் 350 மாணவிகளுக்கு வழிகாட்ட உள்ளனர். இவர்களுக்குத் தேவையான பொருட்கள், தங்கும் செலவுகள், உணவு, பேனாக்கள், பயிற்சியாளர்களுக்கு ஊதியம் மற்றும் போக்குவரத்து செலவுகள் என சகல செலவையும் கவனிக்க நிதி திரட்டி வருகின்றனர் போதி ட்ரீ.

ஒரு பயிற்சி பட்டறை மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. ஒரு மாணவிக்கு ரூ.1500 என 350 மாணவிகளுக்கு 5,25,000 ரூபாய் நிதியை மிலாப் என்னும் கூட்டு நிதி திரட்டல் தளம் மூலம் திரட்டி வருகிறது இவ்வமைப்பு. இதுவரை 75000 ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். 

இந்த பின்தங்கிய கல்லூரி மாணவிகளுக்கு உதவ நினைத்தால் https://milaap.org/fundraisers/bodhitree இந்த இணையதளத்தில் நிதி உதவி செய்யலாம்.

இந்த பட்டறை இம்மாணவிகளுக்கு சுய நம்பிக்கை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிக்க உதவும். மேலும் கல்லூரிக்கு பின் இருக்கும் வேலை வாய்ப்பு, வெளிப்பாடு மற்றும் எதிர்காலத்தின் பார்வையை உணரச் செய்யும். இதில் கலந்துக்கொள்ளும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாகவும், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருகின்றனர். 

இவர்களுக்கும் ஓர் வாய்ப்பு அளிப்போம்!

பயிற்சி பட்டறை காணொளி
பயிற்சி பட்டறை காணொளி

Related Stories

Stories by Mahmoodha Nowshin