இயற்கை அழகை ரசிக்கலாம் வாங்க!

0

"குடிசை ஒன்றில் தரையிலிருந்து 7 அடி உயரத்தில் உள்ள கட்டிலில் காலை நீட்டியபடி படுத்துக் கொண்டு கடலில் சூரியன் அஸ்தமிப்பதைக் கண்டு களிப்பது போல் கற்பனை செய்து பாருங்கள்" என்கிறார் "லெட்ஸ் கேம்ப் அவுட்" (LetsCampOut) நிறுவனரான அபிஜித் மஹாத்ரே. நம்மை உற்சாகப்படுத்தக் கூடிய பல விஷயங்கள் இருக்கின்ற போதிலும் லெட்ஸ் கேம்ப் அவுட் குழுவைப் பொருத்தவரையில் தூய்மையான இயற்கையின் அழகில் உற்சாகம் பெறுவதுடன் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும்தான் உற்சாகம் கிடைக்கிறது.

இந்த அமைப்பு மகாராஷ்ட்ராவில் முகாமிடும் அனுபவத்தைத் தருகிறது. "லோனாவாலா, ராஜ்மச்சி, பனஸ்ராய், துங்கர்லி மற்றும் ஷிரோட்டா உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் எங்களிடம் 12 இடங்களில் இருப்பதுடன் காஷித், காஸ், மாதேரன் மற்றும பன்ச்கனி ஆகிய இடங்களில் ஓய்வான முகாம் அனுபவங்களும் உள்ளன" என்கிறார் அபிஜித்.

இந்தியாவில் உள்ள முகாமிடும் அனுபவங்களின் தரம் மற்றும் வகைகளில் பெருத்த ஏமாற்றத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அபிஜித் மாறுபட்ட வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். "நான் ஒரு சர்வதேச வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், சென்னையில் ஒரு திட்டத்திற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அங்கு சென்ற பின்னர் எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக தினசரிபடி அளிக்கப்பட்டது. இதனையே நான் என்னுடைய ஆரம்பகால முதலீடாக கொண்டு லெட்ஸ் கேம்ப் அவுட் தொடங்கினேன்" என்கிறார் அவர்.

விரைவிலேயே அபிஜித்தின் நண்பரான அமித் ஜம்போட்கர் உபசரிப்புத் துறையில், தான் வகித்து வந்த உயர்பதவியை உதறிவிட்டு வெளிப்புற வாழ்வில் தனது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள லெட்ஸ் கேம்ப் அவுட் நிறுவனத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

"வெளிப்புறங்களில் முகாமிடுவதை எளிமைப்படுத்தி அதன் மூலம் இந்தியாவில் வெளிப்புற வாசத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவது தான் 2010ல் எங்களது நோக்கமாக இருந்தது" என கூறுகிறார் அபிஜித். "சில கொட்டகைகள் மற்றும் ஒரு முகாம் ஆகியவற்றுடன் தான் நாங்கள் ஆரம்பித்தோம். முகாம் அமைத்து தங்குவது என்பது அதிகம் பிரபலமடையாமல் இருந்ததாலும் சரியான நேரத்தில் நாங்கள் இத்துறையில் நுழைந்ததாலும் எங்களது விருப்பமான இந்த திட்டம் விரைவிலேயே நல்ல லாபம் தரும் ஒரு தொழில் மாதிரியாக உருவெடுத்தது" என்கிறார் அவர்.

முதல் வாடிக்கையாளர்கள் குழுவில் இருந்தவர்கள் வெளிப்புற சாகச ஆர்வலர்கள். மெதுவாக இந்தக் கூட்டம் அதிகரித்து பரவலாகியது. "கடந்த சில ஆண்டுகளில் அதிக குடும்பங்கள், பெண்கள் குழுக்கள், நண்பர்கள் மற்றும் தம்பதிகள் எங்களிடம் வந்தனர். இப்போதெல்லாம் மக்களுக்கு நேரம் இல்லை என்பதாலும் எப்போதும் எளிமையையே விரும்புவதாலும் அழுத்தத்தைப் போக்கும் வகையில் ஏதேனும் சாகசம் செய்ய வேண்டும் என்றும் விரும்புகின்றனர்." "நிறுவன உயரதிகாரிகளைப் பொருத்தவரையில் வானத்தை பார்த்துக் கொண்டே இருப்பது என்பது விருப்பமான ஒன்றாகும். "பெட்ஸ் கேம்ப் அவுட்"(PetsCampOut) மற்றும் "அவுட் அண்ட் லவுட்" (OutAndLoud) போன்ற பிரச்சார திட்ட முயற்சிகளின் மூலமாக செல்லப்பிராணிகள் மற்றும் இசைப்பிரியர்களையும் நாங்கள் ஈர்த்தோம்."

லெட்ஸ் கேம்ப் அவுட்டுக்கு தற்போது உறுதியான வாடிக்கையாளர்கள் மற்றும் பின்தொடர்வோர் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு வகையான கருவிகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளை அளிக்கின்றனர். பார்பிக்யூ, மலை ஏறுதல், இரவில் வனத்திற்குள் நடப்பது மற்றும் வானியல் போன்றவை இதில் அடங்கும். எனினும் இந்த நிறுவனம், முகாம் நடக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் மற்றும் முகாம்கள் அருகிலுள்ள கிராமங்களுடன் உறவு கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது. "எல்லா முகாம் பகுதிகளும் எங்களுக்கு சொந்தமாக இருப்பதுடன் நாங்கள் எங்களது சொந்தக் கொள்கைகளையே உருவாக்கியிருக்கிறோம் என்று கூறும் அபிஜித், "அனைத்து உணவுகளும் உள்ளூரிலேயே சேகரிக்கப்படுகிறது, நாங்கள் கரியமில வாயுக் கசிவைக் குறைக்கும் வகையில் சூரிய மினசக்தியையே பயன்படு்துகிறோம். எங்களது முகாம் இடங்களில் எந்தவிதமான கட்டுமானங்களும் கிடையாது என்பதுடன் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்துகிறோம் என்கிறார்.

"நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் உயர்வான முகாமிடும் உபகரணங்கள் முதல் சாகச உபகரணங்கள் வரை சொந்தமாக வைத்திருக்கிறோம் என்பதும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருப்பதும், எங்களுடன் இணைந்து பணியாற்றும் ஒட்டுமொத்த கிராமத்தையே நடத்துவதற்கான ஆதாரங்களை உருவாக்கியிருப்பதும் எங்களை பெருமிதமடையச் செய்துள்ளது" என்கிறார் அபிஜித்.

*இன்று வரையில் எங்களது கண்ணோட்டம் மும்பை மற்றும் புனேயில் தான் இருந்தது, எனினும் நாங்கள் தற்போது கீழே தெற்கு வரையிலும் மேலே வடக்கு வரையிலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம். சூலாபெஸ்ட், என்எச்7, இந்தியா பைக் வாரம், தி லாஸ்ட் பார்ட்டி போன்ற வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் கொண்ட அமைப்புக்களுடன் நாங்கள் கூட்டாக இணைகிறோம்" என்கிறார் அவர்.

லெட்ஸ் கேம்ப் அவுட் நிறுவனம் மெதுவாக முன்னேறி வந்துள்ளது, 20 பேர் கொண்ட இந்தக் குழு மும்பை, புனே, மற்றும் பெங்களூரில் பரவி இருக்கிறது என்றாலும் தனது அனுபவங்கள், சாதனைகள் மற்றும் தவறுகளை பகிர்ந்து கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்கும் மேலாக, இந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரிதான் மோச்சா பைக் சங்கத்தின் நிறுவனர் ஆவார். 2010ம் ஆண்டில் இதுதான் லெட்ஸ் கேம்ப் அவுட்டின் பெரிய ஆர்டர் ஆகும்.

இந்த நிறுவனம் பல சவால்களை போட்டியையும் எதிர்கொண்டுள்ளது. மிகவும் சவாலானது இந்தத் துறையில் ஈடுபடும் பலர் எந்த வித அனுபவமும் இன்றி, இரவு நேர ஆப்பரேட்டர்களை கொண்டு, குறைந்த கட்டணத்தில் மக்களை அழைத்துவந்து அவர்களை ஆபத்தில் சிக்க வைப்பதுதான்" என்கிறார் அபிஜித். கடந்த சில மாதங்களுக்கு முன் லோனாவாலாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவுகூரும் அவர், "மலையேறிக் கொண்டிருந்த சில பெற்றோர் தங்களது குழந்தைகளை காணவில்லை என்று கூறி எங்களைத் தொடர்பு கொண்டனர். 150க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு பேர் மட்டுமே பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் எங்களது செயல்பாடுகள் இருப்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டிருந்த அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு குழந்தைகளை கண்டுபிடிக்க உதவ முடியுமா என்று கேட்டார்கள். எங்களிடம் உள்ள கிராமத்தினர் அந்தக் குழந்தைகள் ஒரு சிற்றாறு அருகே சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்து அவர்களை லோனாவாலாவுக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்" என்றார்.

லெட்ஸ் கேம்ப் அவுட் காட்டி வரும் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அடுத்த கட்டத்தை எட்ட முடியும். வெளிப்புறங்களில் முகாமிடுவது என்பது பொழுதுபோக்கு செயல்மட்டுமல்ல, அது இயற்கையின் அழகை ரசிக்க கிடைத்த ஒரு வாய்ப்பும் ஆகும். வெளிப்புறங்களில் முகாமிடச் செல்லும் முன் பாதுகாப்பு, கழிவு நிர்வாகம் மற்றும் சூரியமின் சக்தி பேனல்கள் குறித்து ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொள்வது நமது முக்கிய பொறுப்பாகும். 

லெட்ஸ் கேம்ப் அவுட் பற்றி கூடுதலான விவரங்கள் தெரிந்து கொள்ள: LetsCampOut