நீங்கள் சரியான பாதையில் செல்ல ஊக்கம் தரும் கல்யாணியின் தொழில்முனைவுக் கதை!

1

‘விபத்துகள் நம்மை மாற்றிவிடுவதோடு, நாம் யார் என்பதையும் உணர்த்தும்’

கல்யாணி கோனாவின் வாழ்க்கையும் இதன் மூலம் சரியாக விவரிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஒரு இடமாற்றத் திட்டத்தின் மூலம் கல்யாணி, அடிப்படைக் கல்வி கிடைக்காத கீழ்தட்டு பிரிவைச் சேர்ந்த குழுந்தைகளுக்கு பாடம் கற்பிக்க பிரேசிலுக்கு சென்றார். அந்த பயணத்தின் போது அவர் பெலெம் என்ற நகருக்குச் செல்ல நேரிட்டது, பெலெம் ஏழ்மை மற்றும் குற்றங்களுக்கு பெயர்பெற்ற இடம். அதே சமயம் உலகக் கோப்பை எதிர்வர உள்ள நிலையில் பிஃபாவிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் இடமும் அதுதான்.

சந்தோஷமாக நாட்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில் விதி, தன் விளையாட்டைத் தொடங்கியது. ஒரு நாள் மாலை கல்யாணியின் பாஸ்போர்ட் இருந்த அவருடைய கைப்பை திருடப்பட்டது, அந்தக் குற்றவாளியை அவர் சுற்றிப்பிடிக்க முயன்று முடியாமல் தோற்றுப்போய், தன்னந்தனியாக நின்றார்.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த சம்பத்தை கல்யாணி ஒரு விபத்தாகவே கருதினார். காயம், தழும்புகள் இல்லாத விபத்து.

என்னைப் பொருத்த வரை இது எனக்கு ஒரு மிகப்பெரிய ஆராத வடு – மொழி புரியாத அயல்நாடு, வெளிநாட்டவர் என்ற அடையாளத்திற்கான துண்டுச் சீட்டு தொலைந்த நிலையிலும், கல்யாணி மனம் தளரவில்லை. இதை ஒரு பாடமாகவே கருதினார்.

“உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் அப்போது உங்கள் வழியில் செல்வது போலவே இருக்காது, நீங்கள் அன்றாட நிகழ்வுகளோடு ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்தையும் சுமூகமாக எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று சொல்கிறார் அவர்.

கல்யாணியோடு உரையாடிய சில நிமிடங்களிலேயே அவர் இதை மிகுந்த ஆர்வத்தோடு பின்பற்றுபவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அதை விட அதிகமான பண்பே அவரிடம் இருந்தது. தனி நபராக இருந்த போதும் அவர் எப்போதும் தனது தேவை விரைவில் பூர்த்தியடைய விரும்புவார், அந்த தெளிவே அவருடைய எதிர்கால வாழ்க்கையை வகுக்கவும் துணை நின்றது. முடிவில் 2012 முதல் 2014 வரை கல்யாணி பல்வேறு 20 திட்டங்களை கையில் எடுத்தார். மார்க்கெட்டிங் முதல் மக்கள் தொடர்பு வரை அனைத்தையும் வெயிலையும் பொருட்படுத்தாது முயற்சித்துப் பார்த்தார்.

அவருக்கு என்ன தேவை என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்க அவர் பலரையும் சந்தித்தார், அப்போது தான் அவருடைய விருப்பத்திற்கு தூண்டுகோலும் கிடைத்தது. மனிதவள மேம்ப்பாடு வர்த்தகம் மற்றும் பொருளாதார கல்லூரியில் பட்டம் பெற்ற கல்யாணி அவருடைய வகுப்பில் எப்போதுமே முதல் இடத்தை பிடிப்பவர் அந்த அளவிற்கு படிப்பில் படு சுட்டி.. அவருடைய நண்பர்கள், மற்றவர்களைப் போல கல்யாணியையும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலைக்கு செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால் அது சரியான முடிவு என்று கல்யாணி நினைக்கவில்லை. இன்று நாம் சிறிய முயற்சி செய்தால் நாளை அது நம்மை உச்சமடைய வைக்கும்” என நம்பினார். தன் ஒட்டுமொத்த அனுபவங்களும் தன்னை ஒரு பெரிய மாபெரும் உருவெடுக்க வைக்கும் என்று அவருக்கு ஒரு வித தீர்க்க எண்ணம் இருந்தது.

விபத்து#2

எல்லாக் கதையிலும் ஒரு குறைவான பகுதி இருக்கும் – ஒரு எதிர்மறை உச்சகட்டம் இருக்கும். இவர் விஷயத்தை பொருத்தவரையில் முடிவே இல்லை, ஆனால் உண்மையில் அவருடைய ஊக்கம் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

அவருடைய நண்பர்கள் தங்களுக்கு ஏற்ற பணியில் சேர்ந்ததை அடுத்து, கல்யாணியும் தனக்கு வந்த ஒரு வேலைவாய்ப்பை தேர்வு செய்ய முடிவு செய்தார். ஆனால் வேலையில் சேருவதற்கு முன்னர் கடைசியாக ஒரு சுற்றுப்பயணம் செல்ல விரும்பினார் –மலையேறும் பயணத்தில் இமயமலையின் 14,000 அடியை 20 நாட்களிலேயே தொட்டார்.

அப்போது தான் அந்த இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது – ஏன் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவக் கூடாது என்று அவரின் எண்ணத்தில் ஏற்பட்ட விபத்து அது.

இந்த எண்ணம் தோன்றிய ஓராண்டுக்கு பிறகு அந்த சம்பவம் நடந்தது, அவர் இப்போதும், தான் ஒரு தொழில்முனைவரானது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து என்று கூறுவதைக் காண முடிகிறது.

ஆனால் அவருடைய தைரியம் முற்றுபெறவில்லை. அவர் தனக்கு துளியும் தொடர்பில்லாத தனக்கு புரிதல் இல்லாத ஒன்றையே தொழிலாக எடுத்து செய்தார். அவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்ற ஆடைகளை வடிவமைக்கும் பொட்டிக் ஒன்றை உருவாக்க விரும்பினார்.

அனைத்தும் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது என்ற தன்னுடைய தத்துவதத்தில் உறுதியாக இருந்தார் அவர்.

“மாற்றங்கள் தேவை, பரிதாபம் பச்சாதாபமாக வேண்டும் அதற்கு மக்கள் மனதிலும் மாற்றம் வேண்டும். ஒருவர் சாலையை கடக்க சிரமப்படும்போது அவர்களுக்கு உதவலாம். அதோடு இன்றைய நாள் எப்படி இருந்தது என்றும் அவர்களை நிறுத்தி கேட்கலாம்.”

பெங்களூரில் நடந்த இந்திய இணைப்பு மாநாடு 2015ல், எனக்கு முன்பு நாராயண், சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். 40 வயதான அவருக்கு ஒரு இடத்தை விட்டு நகர முடியாத குறைபாடு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நாராயண், ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றின் அடிப்படையில் கல்யாணியை தொடர்பு கொண்டார். அவர் கல்யாணிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், எப்படி அவருடைய வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்தும் கிடைக்கிறது என்று, ஒரு நல்ல தொழில், ஓய்வெடுக்க ஒரு நிம்மதியான வீடு, ஆனால் அவரோடு கலந்து பேச யாரும் இல்லை என்றும் தனிமையில் வாடுவதைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். நாராயணின் அந்த தனிமை உணர்வு கல்யாணியை சிந்திக்க வைத்தது.

ஒரு சமூகத்தின் தேவை, உரிமை நிராகரிக்கப்படும் போது அவை வெறுப்பாக மாறிவிடுவதாக கல்யாணி கூறுகிறார். அவருடைய "வான்டட் அம்ப்ரெல்லா" (Wanted Umbrella) நிறுவனம், ஒரு செல்போன் டேட்டிங் செயலியை கட்டமைத்தது. அதன் பெயர் 'லவ்எபிலிட்டி' (Loveability), இது மாற்றுத் திறனாளிகளுக்கானது. இது ஒரு தனித்துவமான செயலி என்று கல்யாணி நம்பினார். இந்தத் தனித்துவமான செயலியின் மூலம் சாதரணமானவர்களை, மாற்றுத்திறனாளிகளோடு இணைக்க உதவுகிறது.

இந்த ஆர்வம் அவரை மேலும் பலவற்றை கற்றுக் கொள்ளத் தூண்டியது, அப்போது அவருக்கு மற்றொரு எண்ணம் உதித்தது. உண்மையில் சொல்ல வேண்டுமெனில் இவை அனைத்தையும் துணிச்சலாக தன்னுடைய 22 வயதிலேயே செய்தார் அவர். வான்டட் அம்ப்ரெல்லா, என்ற தன் நிறுவனத்தை 21 வயதில் தொடங்கினார். தனக்கு உடல் ஊனம் பற்றி எதுவும் தெரியாது என்று கூறிகிறார், அதனால் அவற்றை பற்றிக் கூடுதலாக தெரிந்து கொள்ள இணையத்தில் அந்த வார்த்தைகளை தேடினேன். அப்போது தான் அவருடைய தீர்க்கக் குணம் வெளிப்பட்டது.

கல்யாணியை பொருத்தவரை மாற்றுத்திறனாளிகளே அவருடைய முன்மாதிரிகள். “மாற்றத்தினாளிகளே இந்த உலகம் பார்க்க வேண்டிய உண்மையான நாயகர்கள். அவர்கள் எனக்கு மட்டும் முன்மாதிரி அல்ல இந்த சமுதாயத்திற்கே முன்மாதிரியானவர்கள், அவர்களுக்கு கொடுக்கவும் அவர்களிடம் நாம் கற்றக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் உள்ளன.”

மொத்தத்தில் ஒரு தொழில்முனைவராக உங்களது இரண்டாவது விபத்தில் என்ன கற்றுக்கொண்டீர்?

புன்னகையோடு பதிலளித்த கல்யாணி, “நிதி, அனுபவம் மற்றும் ஆதரவு எதுவுமே இல்லாமல் தொழிலைத் தொடங்கினாலும் அனைத்தும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கும்!”

விபத்து#3

கல்யாணியின் மூன்றாவது விபத்திற்கான பெயர் 'லவ்எபிலிட்டி'. 2015ல், கிரவுட்சோர்சிங் தளமான விஷ்பெரியில் தன்னுடைய செயலியை அறிமுகம் செய்தார்.

இன்று அவருடைய செயலி 143 ஃபாலோயர்களுடன் ரூ.6,15,000 பெற்றுள்ளது. “காதல் இருக்கும் காலம் வரை, அனைத்தும் சரியான பாதையில் செல்லும் என்பது எனக்குத் தெரியும்!”

உண்மையிலேயே இதுவும் விபத்து தானா என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ‘ஆம்’ என பதிலளித்தார். “எதைப் பெறுவதற்கான தகுதி நமக்கு இருக்கிறதோ அது நமக்குக் கிடைக்கும் என்று நாம் நம்ப வேண்டும். ஆனால், எல்லோரும் முன்வந்து இதைப்பற்றி கேட்க வேண்டும் என விரும்புகிறேன். விஷ்பெரி (கிரவுட்ஃபண்டிங்) மூலமாக அளவுக்கு அதிகமான அன்பை இந்த விபத்து மூலமாக பெற்றேன் என முடிக்கிறார் கல்யாணி.

பேசி முடிக்கும் முன்பு அனுமதி பெற்று, தொலைப்பேசி இணைப்பை துண்டித்தார் கல்யாணி. காலையிலிருந்து அலுவலக சந்திப்புகளில் மிகவும் தீவிரமாக இருந்ததாகச் சொன்னார். அது எது தொடர்பான சந்திப்பு எனக்கேட்டேன். அப்போது, தான் மத்திய சமூக நலத்துறை மற்றும் மகளிர் முன்னேற்றத்துறையின் ஆலோசகராக இருப்பதாகச் சொன்னார். அதேபோல், பிரதமரின் அக்செசபுள் (Accessible) இந்தியா திட்டத்தின் பங்கெடுப்பாளராக இருப்பதாகவும் சொன்னார்.

நிச்சயமாக, கல்யாணி புதிய தலைமுறைக்கு ஒரு உந்துசக்தியாக திகழ்கிறார். அவர் செய்துவரும் பணியால் அல்லது அவர் எட்டியிருக்கும் உயரத்தால் மட்டும் அதைச் சொல்லவில்லை. தனிப்பட்ட ஒருவருக்குள் இருக்கும் ஆர்வம், தனித்திறமை, ஊக்கசக்தி ஆகியவற்றை வெளிக் கொண்டுவரும் தன்மை கல்யாணியிடம் இருப்பதே அவர் மற்றவர்களை ஈர்க்கும் நபராக இருக்கக் காரணம். அவரால் சாலையில் நடந்துசெல்லும் சுமாரான பையன், பெண்களை உந்தச்செய்யமுடியும், அவர்களை விபத்துகள் மூலமாக யாருமே செய்யாத விஷயங்களையும் செய்ய வைக்க முடியும்.

இணையதள முகவரி: Wanted Umbrella

கட்டுரை: தருஷ் பல்லா | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்