இஸ்ரேலின் ’Start TLV பூஸ்ட் கேம்ப்’ போட்டியில் பங்குபெற பெண்கள் தலைமையில் இயங்கும் இந்திய ஸ்டார்ட் அப்-க்களுக்கு அழைப்பு!

தொழில்நுட்ப புதுமைகள் வாயிலாக உலகை சிறப்பாக மாற்றும் முயற்சியில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்க ஸ்டார்ட் TLV போட்டியின் ஐந்தாவது எடிஷன் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது

0

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் தங்களின் பங்கினை பெண்கள் தொடர்ந்து அளித்து வந்து இவ்வுலகை ஒரு சிறப்பான இடமாக மாற்றிக்கொண்டிருப்பதை அடுத்து, Start TLV போட்டி தனது ஐந்தாவது பதிப்பை இந்த ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து, இந்தியாவில் 2017-ம் ஆண்டுக்கான போட்டியில், 25 வருட இந்தியா-இஸ்ரேல் நட்புறவுக் கொண்டு இஸ்ரேல் தூதரகத்தின் குடையின்கீழ் இயங்கும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்த உள்ளது. 

Start TLV என்பது இஸ்ரேலிய MFA மற்றும் Tel Aviv Municipality-யால் ஏற்பாடு செய்யப்படும் உலகளாவிய வருடாந்திர நிகழ்வாகும். 23 வெவ்வேறு நாடுகளிலிருந்து தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் இறுதித் தேர்வாளர்கள் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரேலின் டெல் அவிவில் ஒன்றுதிரண்டு DLD இன்னோவேஷன் ஃபெஸ்டிவலுடன் இணைந்து நடைபெறும் ஐந்து நாட்கள் நடக்கக்கூடிய ஸ்டார்ட் அப் ‘பூஸ்ட் கேம்ப்’பில் பங்கேற்பார்கள்.

கான்சுல் ஜென்ரல் யேல் யஷாவித் உடன் பயோகான் நிறுவனர் கிரன் மஜும்தார் ஷா 
கான்சுல் ஜென்ரல் யேல் யஷாவித் உடன் பயோகான் நிறுவனர் கிரன் மஜும்தார் ஷா 

வெற்றிபெரும் ஸ்டார்ட் அப், உள்ளூர் இஸ்ரேலிய தொழில்முனைவோருடன் இணைந்து விரிவுரைகள், பயிற்சி பட்டறைகள், இஸ்ரேலிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் சந்திப்புகள் ஆகியவற்றில் பங்கேற்பார்கள்.

இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் வளர்ச்சி குறித்தும் இஸ்ரேலின் இகோசிஸ்டத்துடன் பொருந்துவது குறித்தும் தனது பாராட்டுகளை தெரிவித்த தூதர் டேனியல் கார்மன் கூறுகையில், 

“வளர்ந்து வரும் நம் இருநாடுகளுக்கிடையேயான கூட்டுறவை மேலும் சிறப்பிக்கக்கூடிய மற்றொரு பகுதி இது. புதுமைகளின் நமது கூட்டு சக்தியானது நமது சமூகத்தையும் பொருளாதாரத்தையும் சிறப்பாக மாற்றி உலகில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.”

பெண்கள் புதுமைகளை கண்டறியும் ஆற்றலை முழுமையாக ஒன்றிணைத்து இந்த இகோசிஸ்டங்கள் நிலையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று தூதர் கார்மன் வலியுறுத்தினார்.

போட்டி விவரங்கள்

போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக பதிவு துவங்கிவிட்டது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூலை 17, 2017.

ஐந்து இறுதி போட்டியாளர்கள் ஜூலை 24-ம் தேதி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ஸ்டார்ட் அப்பின் தொழில்நுட்பம் குறித்தும் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் நிபுணர்கள் குழு கேட்டறிந்து வெற்றியாளரை தேர்வு செய்வார்கள்.

Start TLV இந்தியா போட்டி குறித்தும் விண்ணப்பம் குறித்தும் தகவல்களைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்களை தேடுவதற்காக ஸ்டார்ட் அப் இந்தியா, TiE-NCR, YES Bank, YES Global Institute ஆகியவற்றுடன் தூதரகம் இணைந்துள்ளது.

உலகெங்கிலுமிருந்து ஸ்டார்ட் அப்கள், வென்ச்சர் கேப்பிடலிஸ்டுகள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், புதுமைகளை அறிமுகப்படுத்துபவர்கள், மூவர்ஸ் அண்ட் ஷேக்கர்ஸ் ஆகியோர் இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வான Start TLV-ல் பங்கேற்பார்கள்.

ஸ்டார்ட் அப் நாடு

69 வருடங்களே ஆன ஒரு சிறிய நாடாக இருப்பினும் இஸ்ரேல் தொழில்நுட்பம், புதுமை, கலை, கலாச்சாரம் என அனைத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஜப்பான், சீனா, இந்தியா, கொரியா, கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, UK போன்ற நாடுகளை விட அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. மேலும் இஸ்ரேலின் தனி நபர் வென்ச்சர் கேப்பிடல் முதலீடு அமெரிக்க வென்ச்சர் கேப்பிடல் முதலீட்டுத் தொகையைக்காட்டிலும் இருமடங்காகவும் ஐரோப்பிய யூனியன் மொத்த உறுப்பினர்களைக் காட்டிலும் 30 மடங்கு அதிகமாகவும் உள்ளது. இஸ்ரேலில் R&D-க்காக செலவிடப்படும் GDP தொகைதான் உலகிலேயே அதிகமானதாகும் (3.9 சதவீதம்).

இஸ்ரேலின் கான்சுல் ஜென்ரல் யேல் யஷாவித் உடன் இஸ்ரேல் தூதரக நிர்வாக துணை தலைவர் ஷிவ் ஷால்வி
இஸ்ரேலின் கான்சுல் ஜென்ரல் யேல் யஷாவித் உடன் இஸ்ரேல் தூதரக நிர்வாக துணை தலைவர் ஷிவ் ஷால்வி

Tel Aviv இஸ்ரேலின் வணிக தலைநகரமாகவும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத் திறமைகள் கொண்ட உள்ளூர் இகோசிஸ்டம், பன்னிரண்டு முன்னனி பன்னாட்டு நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் ஆகியவற்றைக் கொண்ட புதுமைகளின் இடமாகவும் உள்ளது.

இந்தியாவின் முன்னாள் வெற்றியாளர்கள்

குறைந்த செலவிலான ஹெல்த்கேரில் செயல்பட்ட Advenio நிறுவனத்தின் மௌசுமி ஆச்சார்யா மற்றும் ஆன்லைன் காப்புரிமை தேடல் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்கும் XLPAT Labs நிறுவனத்தின் கோமல் தல்வார் ஆகிய இரண்டு இந்திய பெண் தொழில்முனைவோரும் இஸ்ரேலில் நடைபெற்ற Start Tel Aviv வொர்க்ஷாப்பில் இந்தியாவின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.
இஸ்ரேல் தூதர் டேனியல் காரமன் கடந்த ஆண்டு வெற்றியாளர் கோமல் தல்வார் உடன்
இஸ்ரேல் தூதர் டேனியல் காரமன் கடந்த ஆண்டு வெற்றியாளர் கோமல் தல்வார் உடன்

பொதுப் பிரிவில் வெற்றிபெற்று இந்தியாவின் பிரதிநிதிகளாக Start TLV நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்களின் விவரம் கீழ்வருமாறு:

Start TLV 2013-ல் NowFloats இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றனர். டெல் அவிவ் சென்ற இதன் இணை நிறுவனரான ரோனக் குமார் சமந்த்ரே கூறுகையில், 

“நாங்கள் சந்தித்த சிலருடன் எங்கள் நட்பு இன்றும் நீடிக்கிறது. டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கும் TiE Delhi-க்கும் நன்றி.”

இந்தியர்களின் இறுதிப்போட்டியில் வென்ற Shield Square-ன் பவன் தாத்தா கூறுகையில், “ஸ்டார்ட் அப் Tel Aviv-ல் பங்கேற்றது மிகப்பெரிய கற்றல் அனுபவத்தை எங்களுக்கு அளித்தது. செக்யூரிட்டி பகுதியில் செயல்படும் தொழில்முனைவோர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் எங்களது ப்ராடக்டிற்கான திட்டங்களை சீர்ப்படுத்த பெரிதும் உதவியது. DLD Tel Aviv சிறப்பாக ஒருங்கிணைவதற்கான வாய்ப்பை அளிப்பதால் நிச்சயம் பங்கேற்கவேண்டிய ஒன்றாகும்."

Start TLV 2015-ல் இந்தியாவிற்கான இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற, ஸ்மார்ட்ஃபோன்களை தனிப்பட்ட பயண வழிகாட்டியாக மாற்றிய AudioCompass நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ கெளதம் ஷேவாக்ரமணி கூறுகையில், ”Start Tel Aviv-ல் வெற்றிபெற்றதால் உலகளவிலான ஸ்டார்ட் அப் மற்றும் நிறுவனங்களுடன் ஒன்றிணையும் வாய்ப்பு கிடைத்தது. வெவ்வேறு சந்தை குறித்த கற்றல்களையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதே துறையில் செயல்படும் புதுமையான இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இணைத்து உரிமம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுப்பணிகள் குறித்து தெரிந்துகொள்ள Start Tel Aviv வாய்ப்பளித்தது,” என்றார். 

July 7, 2017-க்குள் விண்ணப்பியுங்கள்

Related Stories

Stories by YS TEAM TAMIL