’ஜெண்டெஸ்க்’ உலக அளவில் வளர்ச்சி அடைந்து 81,000 வாடிக்கையாளர்களை பெற்றது எப்படி?

0

'ஜெண்டெஸ்க்’, (Zendesk) சாப்ட்வேர் டெவலப்மெண்ட் துறையில் SaaS அடிப்படையில் சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பிற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் உதவிகளை வழங்க உதவும் தளம். சுமார் 81000 வாடிக்கையாளர்களுக்கு கட்டண அடிப்படையில் உலகம் முழுதும் சேவைகள் புரிந்து வருகிறது ஜெண்டெஸ்க். 1500 ஊழியர்கள் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், 12 சர்வதேச நாடுகளில் செயல்பட்டுவருகிறது. 2011ஆம் ஆண்டு ஐபிஒ’ க்கு தகுதி பெற்றது. ‘யுவர்ஸ்டோரி’ இன் ‘டெக்ஸ்பார்க்ஸ் 2016’ பிரதான ஸ்பான்சர் ஆன ஜெண்டெஸ்க்கின் இணை நிறுவனர் மற்றும் சிடிஒ மார்டென் ப்ரிம்தஹ்ல் ‘ஜெண்டெஸ்க்’ இன் கதையை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

ஜெண்டெஸ்க் ஒரு உலக அளவில் வெற்றிப்பெற்ற நிறுவனம் ஆகும், ஆனால் அதன் பின்னர் ஒரு சுவாரசியமான ஊக்கமளிக்கக்கூடிய கதை உள்ளது. நிறுவனர்கள் அலெக்ஸாண்டர் அகசிபவுர், மார்டென் ப்ரிம்தஹ்ல், மிக்கெல் ஸ்வானே ஆகியோர் இந்த நிறுவனத்தை தொடங்கியபோதே நிராகரிப்பை சந்தித்து தற்காலிகமாக பணிபுரிந்து வந்தனர். இந்த குழுவை துறை வல்லுனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் தயாரிப்பை சாதரண ஒன்றாக கூறி நிராகரித்தனர். இவையெல்லாம் தாண்டி, ஜெண்டெஸ்க் பொறுமையாக இருந்து சிலிகான் வேலிக்கு தனது தலைமையகத்தை மாற்றியது. தங்களது தயாரிப்பில் மாற்றங்களை செய்து தொடர்ந்து புதுவித தொழில்நுட்பங்களை புகுத்திவந்தனர். தங்களின் பயணத்தை பகிர்ந்து கொண்ட மார்டென்...

மார்டென் தனது பயணத்தை 1999 இல் டென்மார்க்கில் பயோடெக்னாலஜி படித்துக்கொண்டிருந்த போது தொடங்கினார். படிப்பில் ஒரு வருட இடைநிறுத்தம் செய்து புதிதாக எதையாவது செய்ய முடிவெடுத்தார். அப்போது அவர் கணினிகள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதன் மீதான காதலால் அதில் கவனம் செலுத்தினார். கணினித்துறையில் பணியை தொடங்கி, மிக்கெல் என்பவரது நிறுவனத்தில் பணிப்புரியத்தொடங்கினார் மார்டென். மிக்கெல் ஜெண்டெஸ்க்’இன் தற்போதய சிஇஒ.

துறை அனுபவம் பெற்றா மார்டென், மிக்கெல் மற்றும் அலெக்சாண்டர் SaaS தொழில்நுட்பத்துறையில் சிறந்த வாய்ப்புகள் இருப்பதை கண்டனர். கணினி செயல்பாடுகளை எளிமைப்படுத்தக்கூடிய இந்த தொழில்நுட்பத்திற்கு நல்ல ஒரு எதிர்காலம் இருப்பதை அறிந்தனர். இன்று SaaS சுலபமாகிப்போய் இருந்தாலும், 2000 ஆண்டில் அதில் செயல்படுவது அவ்வளவு எளிதாக இல்லை என்றார் மார்டென். 

2005 இல் இது சாத்தியமற்றது என்று கைவிடும் நிலைக்கு வந்தனர் நிறுவனர்கள். பல மாற்றங்களுக்கு பின் ஜெண்டெஸ்க் பிறந்தது. 

“ஒரு தயாரிப்பின் டிஎன்ஏ’வை அறிந்து கொள்வது தொழில்முனைவரின் கடமையாகும். அப்போதே அவரால்  தொழிலின் அடிப்படையை நன்கு புரிந்துகொள்ள முடியும்,” என்றார்.

எங்களுக்குள் இமெயில் அனுப்பிக்கொண்டிருக்காமல், எங்கள் தயாரிப்பை மேம்படுத்த உழைத்துக்கொண்டிருந்தோம் என்றார் மார்டென். 

அக்டோபர் 1, 2007இல், நிறுவனர்கள் ஒரு பெரிய அடியை எடுக்க முடிவெடுத்து அதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். பகுதிநேரமாக இல்லாமல் முழுநேரம் தங்களது நேரத்தை ஜென்டெஸ்கில் செலவிட முடிவெடுத்தனர். இவர்களது தயாரிப்பு மெல்ல வளர்ந்தது. ஆனால் வெளி முதலீடுகளை ஈர்க்கும் அளவிற்கு இல்லை. மார்டென் இந்த சூழ்நிலை இறுக்கமானதாக இருந்ததாக குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் செய்ய போதிய முதலீடு இல்லாமல் தவித்தனர். டென்மார்கில் அந்த சமயம் முதலீடுகள் அவ்வளவாக இல்லை அதனால் வெளியில் முதலீடுகள் பெறுவதைவிட வேறு வழி இல்லாமல் இருந்தது.  

தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வைத்தனர். ஆரம்பத்தில் அவர்களிடம் தயக்கம் இருந்தாலும் அவர்களை சம்மதிக்க வைத்த எல்லாம் நன்றாக சென்றது. 

ஜெண்டெஸ்க்குக்கு ஏற்பட்ட அடுத்த சவால், பிரபல முதலீட்டாளர்கள் கால்கனிஸ் மற்றும் மைக் அரிங்க்டன் அவர்களின் தயாரிப்பை ‘மிகவும் எளிமையாக’ உள்ளது என்று கூறி நிராகரித்தனர். டெக்க்ரன்ச் நடத்தும் டெக் 50 இல் பங்குகொள்ள தகுதியற்றது என்று கூறினர். 

தங்களின் பயணத்த பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்த கொண்ட மார்டென், அறையில் குழுமி இருந்த ஸ்டார்ட் அப்களுக்கு தனது அறிவுரையை வழங்கினார். 

”யுவர்ஸ்டோரியின் ‘டெக்30’ இல் இடம் பெறவில்லை என்றால் நீங்கள் மனம் தளரவேண்டாம். உங்களால் எப்படியும் வெற்றிப்பெற முடியும்,” என்றார். 

இறுதியாக தங்களின் மீது நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள் கிடைத்ததை மார்டென் மகிழ்வுடன் பகிர்ந்தார். ஜெண்டெஸ்க் தனது முதல் கட்ட விதை நிதி ஆகிய 50000டாலர்களை 2009 இல் பெற்றது. பின் 4 வெவ்வேறு முதலீடுகள் மூலம் மொத்தமாக 85.5மில்லிய டாலர் நிதியை பெற்றது என்றார். மார்க்வீ முதலீட்டாளர்கள் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், ரெட்பாயிண்ட் மற்றும் பென்ச்மார்க் போன்றோர் இவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மே 2014இல் ஜெண்டெஸ்க் ஐபிஒ க்கு சென்று தற்போது 1500 ஊழியர்களுடன் உலகெங்கும் வளர்ந்து நிற்கிறது. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக இருப்பதாக கூறிய மார்டென் விரைவில் இங்கும் தங்களது அலுவலகத்தை நிறுவ உள்ளதாக தெரிவித்தார். 

ஸ்டார்ட் அப் கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து, ஜெண்டெஸ்க் ஒரு வருட இலவச சர்வீஸ் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க: https://www.zendesk.com/startups/

ஆங்கில கட்டுரையாளர்: ஹர்ஷித் மல்லையா