மக்களின் மன அழுத்தத்தை போக்க உதவும் ஜானகி விஸ்வநாதின் 'சாத்தி ஹாத் பதானா'

0

ஜானகி விஸ்வநாத், 1988ம் ஆண்டில் மும்பை டாடா இண்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் (TISS) மனித வள மேம்பாட்டு படிப்பை முடித்த பின், பெரிய நிறுவனங்கள், சுற்றுப்பயணம், பணம், வேலை என்று தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே விரும்பினார். உடன் வளர்ச்சியுடைய வேலை, வெளிநாடு சுற்றுப்பயணம், திருமணம் என்று நினைத்ததை போலவே எல்லாம் கிட்டியது இவருக்கு என்றே தான் சொல்லவேண்டும். 33வது வயதில் ஒரு குழந்தை என்று காலம் மாறிய பின், ஒரு தாயாக வீட்டில் இருந்து ஒவ்வொரு விஷயங்களையும் அழகாக அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தார் ஜானகி. அப்போது, தான் வசிக்கும் அவுந்த் என்ற பகுதியில் ஒரு புத்தகங்களுக்கான கடை இல்லை என்பதை அறிந்தார்.'ட்விஸ்ட் அண்ட் டேல்ஸ்' (twistntales) என்ற ஒரு புதுவகையான புத்தகங்களுக்கான கடையை நிறுவி வெற்றிக்கரமாக 11 ஆண்டுகள் வரை நடத்திவந்தார். இணைய வர்த்தகத்தின் பெருக்கம் அதிகமாகிவந்த நேரத்தில், தன்னுடைய புத்தக கடையை சந்தோஷமாக நடத்திய ஜானகி அதை மூடிய பின், அடுத்த ஓராண்டுக்குள் "சாத்தி ஹாத் பதானா சோஷியல் ஃபவுண்டேஷன்" (Saathi Haath Badhana) என்ற மையத்தை தொடங்கினார் ஜானகி விஸ்வநாத்.

எதற்காக இந்த நிறுவனம்?

தற்போதய வேகமாக நகரும் டிஜிட்டல் காலத்தில் மன அழுத்தம் மக்களிடையே அதிகமாகி வருகின்றது. கிட்டத்தட்ட ஒரு அடிமையாக்கும், தற்காலிக உலகத்தின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவும் வகையில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. மனித வள துறையில் முன் அனுபவம் இருந்த ஜானகி ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப இருப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நவீன கலாச்சாரத்தில் இருக்கும் நமக்குள் சரியான அறிவு இல்லை என்பது ஜானகியின் கருத்து. வீடுகளில் ஏற்படும் பிரச்சனைகள், தற்கொலைகள், பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துவது, போன்ற பல சமூக பிரச்னைகள் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு பெரும் பாதிப்பை தந்துவிட்டது. "ஆமாம், மாடுகள் கூட சாலைகளில் நடக்ககூடாது என்று எண்ணுகின்றனர் பலர். மாடு நடந்தால் கூட ஒலி எழுப்புகின்றனர். இதன் மூலமே நம்மிடம் ஒரு பிரச்சனை இப்பது தெளிவாக தெரிகிறது." என்கிறார் ஜானகி.

பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்
பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்

இதற்கு, எல்லோரும் சேர்ந்து சரியாக ஒரே குறிக்கோளையும், நல்ல மாற்றத்தையும் நோக்கி பயணிப்பது தான் ஒரே சிறந்த வழியாக உணர்ந்தார். சாத்தி ஹாத் பதானா (எஸ் எச் பி) என்ற பெயருக்கேற்ப (ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம் என்பது இதன் அர்த்தம்) மற்ற சமூக நிறுவனங்களுடன் இணைந்து செயல்ப்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

மற்ற நிறுவனங்களை விட வித்தியாசமான ஒரு விஷயம் ஜானகியின் எஸ்எச் பி யில் உண்டு. லிசனிங் போஸ்ட் (Listening Post) என்றழைக்கப்படும் இந்த சேவை, மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கான ஒரு தனி இடம் என்று கச்சிதமாக சொல்லலாம். பிரியமானவர்களின் இறப்பு, பிரிவு, தனியாக உணர்த்துதல், அல்லது மாணவர்களுக்கு இருக்கக்கூடிய அழுத்தம், கோபம் போன்ற தங்களுடைய பிரச்சனைகளை மனம் விட்டு பேசக்கூடிய இடமாக இந்த லிசனிங் போஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எல்லோராலும் உபயோகிக்கக்கூடிய வகையில் இலவசமாகவும் எளிதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. SHBயில் மனதை லேசாக மாற்றக்கூடிய காம்பாஷன் லிசனிங் (Compassion Listening) என்று பிரத்யேக வகையான கேட்கும் திறனைக்கொண்ட திறனாளிகள் இதற்காக இங்கு இருக்கின்றனர்.

எஸ் எச் பி யின் மூன்று முக்கியமான அம்சங்கள்

அடுத்தவர்களிடம் இரக்க குணம் காட்டுவது(Compassion), வாழ்க்கை நெறிமுறைகள்(Life Skills), பாலின சம்பந்தமான பிரச்சனைகள் (Gender Issue) போன்ற மூன்று முக்கியமான அம்சங்களை வைத்தே முகாம்கள் நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றது.

லிசனிங் போஸ்ட் தவிர, காம்பாஷன் பகுதியில் 'கேரிங் ஃபார் தி கேர்கிவ்வர்' (Caring for the Caregiver) என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு. இதில், நிறுவனத்துடன் இருப்பவர்கள் தங்களுடைய மன அழுத்தத்தை வெளியேற்றி கொள்ளும் வகையில் சிறப்பு குழு பயிற்சிகள் நடைபெறுகின்றது. இது மட்டுமல்லாமல் முதியவர்களுக்கான புதன் விட்டு புதன் ஸ்மார்ட் ஃபோன் உதவி முகாமும் நடைபெறுகின்றது.

பாலின சம்பந்தமான பிரச்சனைகளை பள்ளி, இளைஞர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து SHB செயல்பட்டுவருகின்றது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலின கொடுமைகள் பற்றி மட்டுமல்லாமல், குழந்தைகளை இது போன்ற பாலியல் பிரச்சனைகளிலிருந்து காக்கும் சட்டங்களை விளக்கும் வகையிலும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலின வேற்றுமை, அணுகும் முறைகள், தற்காத்து கொள்ளும் முறைகள் போன்றவை விளக்கப்படுகின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, வேலையிடங்களில் இருக்கும் பாலியல் பிரச்னைகளும், அதிலிருந்து தற்காத்து கொள்ள இருக்கும் சட்டங்களை பற்றியும் பயிற்சி மற்றும் முகாம்கள் மூலம் விளக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

லைஃப் ஸ்கில்ஸ் பகுதியில் ஜானகி மற்றும் அவருடைய தோழி விபா இருவருமே அடுத்தவர்களை சரியாக வழிநடத்துவதில் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து லைஃப் ஸ்கில்ஸ் பயிற்சிகளை பாடத்திட்டங்களாகவும் தனியாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்த மூன்று அம்சங்களை நிறைவேற்றும் பயிற்சி முகாம் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்துமே தன்னார்வ தொண்டர்களுடைய உதவியுடனும் சேர்ந்தே தான் நடத்தப்படுகின்றது.

இம்மூன்று அம்சங்களை தவிர அதிக வரவேற்பை பெறுவது அவுந் வளாகத்தில் சனிக்கிழமை காலையில் நடைபெறும் பொழுதுபோக்கு பயிற்சி முகாம்களே. சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படும் இந்த முகாம்கள் புது வாய்ப்புகளையும் மற்றவர்களோடு கலந்து உரையாடும் திறன்களை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.

SHB மூலம் நடத்தப்படும் இந்த வகையான நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் மூலம் ஒவ்வொருவரும் பயன்பட்டு ஒரு சமுகமே புது வகையான மாறுதலை அடைய வேண்டும் என்று அதிகமான நம்பிக்கை ஜானகியிடம் இருப்பது காணமுடிகிறது. தற்போது சுய நிதியுதவி மூலம் நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்தி வந்தாலும், பள்ளி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களுக்கு நிதியுதவி பெற்று, மற்ற நிகழ்ச்சிகளுக்கு கச்சிதமாக பயன்படுத்தபடுகின்றது.

மாறி வரும் தற்காலிக உலகத்தில் நமது மனம் சரியாக மாற்றம் அடையாமல் இருக்கும்போது, மன உளைச்சல் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். ஒரே ஆளாக நின்று இதற்கு ஒரு தீர்வை தர இயலாது என்பது எனக்கு தெரியும், ஆனால் ஒன்றாக இணையும் போது இது சாத்தியமாகும். இணைந்து செயல்படுவதே முன்னேற்றத்தை தரும்.

இணயத்தள முகவரி: Saathi Haath Badhana

Journalist, News buff, Biographies attract me more. Lover of Conspiracy and Conflict theories, Okay'ish Photographer, Lost in Arts and Music.

Stories by Nithya Ramadoss