இந்தியாவின் முதல் பட்டினியில்லா மாவட்டமாக மாற இருக்கும் கோட்டயம்!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் தன்னார்வல நிறுவனங்கள் தினமும் சுமார் 8,000 பேருக்கு உணவளிக்கிறது.

0

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் விரைவிலேயே இந்தியாவின் பட்டினியில்லா மாவட்டமாக மாறிவிடும். ஏனெனில் பல்வேறு தன்னார்வல நிறுவனங்கள் தினமும் சுமார் 8,000 பேருக்கு உணவளித்து வருகிறது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 20 தன்னார்வலக் குழுக்கள் உணவளிக்கிறது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை, கோட்டயம் அரசு பொது மருத்துவமனை, அரசு ஆயுர்வேத மருத்துவமனை, ஹோமியோபதி மருத்துவமனை போன்றவற்றில் இருக்கும் சுமார் 5,000 நோயாளிகளுக்கு நவ்ஜீவன் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வல ட்ரஸ்ட் உணவளிக்கிறது.

தன்னார்வல குழுக்கள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் வீடில்லாமல் தவிப்போருக்கு உணவளிக்கிறது. உதாரணத்திற்கு உள்ளூர் ரெட் கிராஸ் மதியம் 1-2 மணி வரை இலவச மதிய உணவை வழங்குகிறது. பகல்வீடு என்கிற பராமரிப்பு இல்லத்தில் சுமார் 100 பேருக்கு இலவசமாக உணவளிக்கப்படுவதாக மனோரமா ஆன்லைன் தெரிவிக்கிறது.

தன்னார்வல பணிகள் நடைபெற்று வருவதுடன் கோட்டாயத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலா என்கிற இடத்தில் பட்டியினியில்லா முயற்சி ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.

முகநூல் பக்கத்தைத் துவங்கி உள்ளூர் மக்கள் ஆதரவளிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் சங்கனாச்சேரி நகரில் உள்ள வீடில்லாத, பசியோடு இருக்கும் 15 பேருக்கு மூன்று நாட்கள் உணவு வழங்கலாம். வீடின்றி பட்டினியாக இருப்போருக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவு பெட்டியிலும் அவர்கள் உணவை வைக்கலாம் என ’தி பெட்டர் இண்டியா’ குறிப்பிடுகிறது.

அரசு ஆணைப்படி இந்த நகரில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆதிவாசி சமூகத்தினருக்கு தொடர்ந்து உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. கோட்டயத்தில் வசிக்கும் 241 பேருக்கும் தினமும் உணவு வழங்கப்படுகிறது.

கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரி நகரில் உள்ள ’அஞ்சப்பம் பக்‌ஷனஷாலா’ என்கிற உணவகத்தில் ஒருவர் பசியோடு இருக்கும்போது உணவருந்திவிட்டு பின்னர் பணம் கிடைக்கும்போது கொடுக்கலாம். தி சோஷியல் ஆக்டிவ் ஃப்ரெண்ட்ஸ் (SAF) என்கிற லாப நோக்கமற்ற வகையில் செயல்படும் உள்ளூர் குழுவானது ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்குகிறது.

மக்கள் ஒன்றிணைந்தால் சமூக பிரச்சனைகளை சிறப்பாக கையாள முடியும் என்பதற்கு கோட்டயம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

கட்டுரை : THINK CHANGE INDIA