இணையத்தில் உங்கள் மொழியில் இரங்கல் நினைவலைகள்: பிரதமர் மோடி பாராட்டிய ஷ்ரத்தாஞ்சலி !

1

விற்பனைத் துறையில் பணியாற்றிய இரண்டு நண்பர்கள் விவேக் மற்றும் விமல், ஒரு நாள் மாலை பொழுதில், டீ குடிக்க அலுவலகம் அருகில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்றனர். பிற்காலத்தில் பாரத பிரதமரிடம் இருந்து பாராட்டுப் பெறப்போகும் ஒரு ஐடியா, அந்த டீக்கடையில் அவர்களுக்கு தோன்றும் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள்.

டீக்கடையில் ஸ்னாக்ஸ்களை செய்தித்தாளில் வரும் இரங்கல் பக்க பேப்பரால் மடித்துக் கொடுப்பதைப் பார்த்தோம். அந்த காட்சி எங்களுக்கு மனவேதனையை அளித்தது. இறந்தவருக்கு மரியாதை அளித்து அஞ்சலி செய்யாமல், பொட்டளம் மடிக்க பயன்படுத்துவது அவர்களை இழிவு படுத்துவதுவதாக வருத்தப்பட்டோம். இறந்தவர்களை நினைவுக்கூற, மரியாதை செலுத்த ஒரு நல்ல வழி இருக்கிறதா? என சிந்தித்தோம்.” 

உலக அளவிலும் இது பரவவேண்டும் என்று யோசித்த நண்பர்கள், பின் அதற்கு ஒரு தீர்வாக தான் ஷ்ரத்தாஞ்சலி (Shradhanjali) எனும் இணையதளத்தை தொடங்கினர். 

ஷ்ரத்தாஞ்சலி, இந்தியாவின் முதல் ஆன்லைன் இரங்கல் தளமாகும். இந்த இணையதளப் பக்கத்தில் நம்முடன் வாழ்ந்து பின்பு இயற்கை எய்தியவர்களின் சாதனையையும், அவர்களுக்கு பிடித்த-பிடிக்காத விஷயங்கள், விரும்பி உண்ணும் உணவு, பிடித்தமான உடை, விரும்பி படிக்கும் புத்தகம், பிடித்தமான மனிதர்கள், அவர்களின் போட்டோகள், விடியோ பதிவுகள், ஆடியோ பதிவுகள் என அவர்கள் பற்றிய அனைத்தையும் இந்த இணையத்தில் பதிவிடலாம் என்கிரார் ஷ்ரத்தாஞ்சலியின் நிறுவனரான விவேக் வ்யாஸ். 

இறந்தவர்களின் ஆன்மாவுக்கு மரியாதை

விவேக் சேல்ஸ் துறையில் பதினெழு வருடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார், விமல் பன்னிரண்டு ஆண்டுகளாக சேலஸ் துறையில் அனுபவம் கொண்டவர். அந்த மாலை பொழுது இவர்களின் வாழ்க்கையே மற்றியது. இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இவ்வுலகில் அவர்கள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவு நம்மோடு இருந்து கொண்டே இருக்கும் என்று இருவரும் நம்புகின்றனர். 

2011-ல் பீட்டா வடிவில் இயங்கி பின்னர் 2013-ல் முழு தளமாக அறிமுகப்படுத்தினர். ஷ்ரத்தாஞ்சலியில் பதிவு செய்பவர்களிடம் கட்டணம் பெறப்படும். உலகம் முழுதிலும் பலர் இந்த இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர். 

பயனர்கள் சுலபமாக இயக்கும் முறையில் தளத்தை வடிவமைத்துள்ளனர். ஒருவர் தாங்கள் விருப்பப்பட்டோரின் மறைவுக்கு பின் அவர்களின் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், நினைவலைகளை இசையுடன் சேர்த்து தளத்தில் ஒரு தொகுப்பாக வெளியிட முடியும். உலகில் உள்ள பலரும் இதில் தங்கள் இரங்கலையும், பிறப்பு, இறப்பு ஆண்டு தினங்களை நினைவூற்றல் மூலம் வெளிப்படுத்தமுடியும். இந்த இணையதளத்தில் இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், தமிழ் போன்ற பத்து வகையான மொழிகளில் பதிவு செய்யலாம். மேலும் தெலுங்கு, பஞ்சாபி, ஒரிசா, கன்னடம் போன்ற மொழிகளையும் சேர்க்க உள்ளனர். 

”இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு சுமார் 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர், இதனால் அவர்கள் குடும்பம் மிகவும் வருத்தத்தில் ஆழ்கின்றது. அந்த இழப்பை இடுக்கட்ட தான் ஷ்ரத்தாஞ்சலி இணையதளத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கின்றனர் விவேக்கும், விமலும்.

ஷ்ரத்தாஞ்சலி; இந்தியா, அமெரிக்கா, கனடா, யூகே மற்றும் ஆப்ரிக்காவில் தனது வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது ஃபிரீமியம் (Freemium) மாடலில் தளத்தில் 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தேசத் தலைவர்கள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்களின் விவரங்களை, மரியாதையின் அடிப்படையில் நிறுவனர்களே பதிவுயேற்றி உள்ளனர். 

இது வரை 400க்கும் மேற்பட்ட இரங்கல் பதிவுகளை இந்த இணையதளம் பதிவுயேற்றி உள்ளது. மாத வருமானமாக ரூ.65000 முதல் 80,000 ரூபாய் வரை ஈட்டுகின்றனர். இவர்கள் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு, ரியல் டைய்மன்டு ரெக்கார்டு, பிக் பிசினஸ் போன்ற விருதுகளையும் வாங்கி உள்ளனர். மேலும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியும் இந்த இணையதளத்தை உருவாக்கிய விவேக் வ்யாஸ் மற்றும் விமல் போபட் இருவரையும் கடிதம் மூலம் பாராட்டி உள்ளர். அதில்,

“ஷ்ரத்தாஞ்சலி.காம் மூலம் ஒருவரின் நினைவுகளை வாழவைக்க நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார். 

யுவர்ஸ்டோரி நடத்திய மொழிகள் மாநாடான, பாஷா 2016-ல் ஷ்ரத்தாஞ்சலி பற்றிய அறிமுகம் தந்தபோது, பங்கேற்பாளர்களால் நிறுவனர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர். விளம்பரம், மார்க்கெட்டிங் என்று எதற்கும் செலவு செய்யாமல், சமூக ஊடகங்கள் மூலம் குழுக்களை பயன்படுத்தி, நாடு முழுதும் தங்களைப் பற்றி பிரபலப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஷ்ரத்தான்ஞ்சலி நிறுவனர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.