சமூகத்தின் எதிர்ப்புகளை எதிர்த்து மகள்களின் தொழில்முனைவு கனவிற்கு சிறகளித்த சுலோசனா சௌத்ரி! 

0

சுலோசனா சௌத்ரியின் உலகம் அவரது மூன்று மகள்களைச் சுற்றியே அமைந்திருந்தது. ஆச்சாரமான மார்வாரி குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு எங்கும் நிறைந்துள்ள பாலின வேறுபாட்டில் இருந்து தனது மகள்களை பாதுகாப்பது தினமும் ஒரு போராட்டமாகவே இருந்தது.

பெண் குழந்தைகளுக்கான கல்வியை ஊக்குவிக்கவும் பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் அரசாங்க தரப்பில் இருந்து எண்ணற்ற திட்டங்கள் உள்ளபோதும் சுலோசனாவைப் போன்ற அம்மாக்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகவே அமைந்துள்ளது.

”என்னுடைய மகளை மடியில் அமர வைத்துக்கொண்டு முத்தமிட்டு அவரிடம், ‘நீ என்னுடைய மூன்றாவது மகள். உனக்கு சிறப்பானவற்றை நான் அளிப்பேன்’ என்று கூறினேன்,” என்றார் சுலோசனா.

அதை நிறைவேற்றியும் உள்ளார்.

மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ஆண் குழந்தை இல்லை என பலர் அவரை அவமானப்படுத்தினர். கல்வி வாய்ப்பும் மற்ற ஆதரவும் அவரது கிராமத்தில் கிடைக்காது என்பதால் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றலாக தீர்மானித்தார்.

ஆனால் வேறு பகுதிக்கு மாற்றலானபோதும் சுலோசனா ஒவ்வொரு விடுமுறையின் போதும் குடும்பத்துடன் தனது கிராமத்திற்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். தனது மகள்கள் சொந்த ஊருடன் தொடர்பில் இருப்பது அவசியம் என்று நினைத்தார். இதனால் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார் நிலையை அவர்கள் சிறப்பாக உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவார்கள் என சுலோசனா நம்பினார்.

அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறே அவரது மகள்கள் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்து அவர்களது குடும்ப வணிகமான ’ஜெய்ப்பூர் ரக்ஸ்’ செயல்பாடுகளில் இணைந்து கொண்டனர். இன்று ஆஷா சௌத்ரி நிறுவனத்தின் சிஇஓ-வாகவும் அர்ச்சனா சௌத்ரி அமெரிக்காவில் செயல்பாடுகள் பிரிவின் தலைவராகவும் கவிதா சௌத்ரி வடிவமைப்புப் பிரிவில் தலைவராகவும் உள்ளனர்.

”இவர்கள் வணிகத்தை வெற்றியடையச் செய்துள்ளனர். இத்தகைய வெற்றியை என்னால் தனியாக சாதித்திருக்கமுடியாது,” என்றார் இந்தப் பெண்களின் அப்பா என் கே சௌத்ரி.

தொலைதூர கிராமப்புறங்களைச் சென்றடைந்து அந்த சமூகத்தினருடன் ஒன்றிணையும் நோக்கத்துடன் பெண்கள் நெய்தல் பணியில் ஈடுபட ஜெய்ப்பூர் ரக்ஸ் வழி வகுத்துள்ளது. ஜெய்ப்பூர் ரக்ஸ் அதன் தீவிர திறன் பயிற்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்திய பிறகு இன்று பல்வேறு கிராமப்புற மக்கள் தொடர் வருமானம் பெற்று வருகின்றனர். கைவினைஞர்களுக்கு அவர்களது வீட்டிற்கு சென்று பயிற்சி வழங்கப்படுகிறது. விரிப்புகள் தயாரானதும் அவை வெவ்வேறு உலகளவிலான சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.

”நாங்கள் பெண்களையே அதிகம் பணியிலமர்த்துகிறோம். அவர்கள் வெவ்வேறு நிலைகளில் வெற்றியடைய அவர்களுக்கான வாய்ப்புகளையே வீட்டிற்கே கொண்டு சேர்க்கிறோம்,” என்றார் சௌத்ரி.

கட்டுரை : THINK CHANGE INDIA