புலம் பெயர்ந்த இந்தியர்கள் உலகின் தனித்தன்மை மிக்க சொத்து...

0

1990 ஆம் ஆண்டு சதாம் உசேனின் இராக் படைகள் குவைத்தில் நுழைந்த போது டொயாட்டா சன்னி என்றழைக்கப்படும் மாத்துன்னி மாத்யூஸ், தூதர் மாத்யூசாக அடியெடுத்துவைத்தார். குவைத்திலிருந்து 488 விமானங்களில் 1,70,000 இந்தியர்கள் காப்பாற்றப்படுவதற்கு சன்னியின் மகத்தான சேவை முக்கிய பங்காற்றியது.

பாலிவுட் ஏர்லிஃப்ட் திரைப்படத்தின் கதாநாயகனுக்கு உந்துசக்தியாக இருந்த டொயாட்டா சன்னி, 2017 ஆம் ஆண்டு மறைந்த போது புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது. இவரைப் போல பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

உலகின் பிரபலமான கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திரு. ஹர் கோபிந்த் குரானா, மைக்ரோ சாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சத்யா நாதெள்ளா, உலகின் முன்னணி இசைக்குழு நடத்துனர் திரு. ஜூபின் மேத்தா உள்ளிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த உலகிற்கு ஆற்றிய அரும் பணிகளுக்கு முடிவே இல்லை.

தற்போது உலகின் எல்லாத் துறைகளிலும் இந்தியர்களின் தனித்திறமையை காணமுடிகிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் துறைகளில் உலகம் முழுவதும் உயர்ந்து நிற்கும் புலம் பெயர்ந்த இந்தியர்களை நாம் காணமுடிகிறது.

மூன்று கோடிக்கும் மேலாக உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை மற்ற எந்த நாட்டவரிலும் காணமுடியாது என்பதில் நாடு பெருமிதம் கொள்கிறது. இந்திய மக்கள் தொகையில் இது ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்றாலும், இந்தியாவின் ஜி.டி.பியில் ஒட்டுமொத்த உற்பத்தி வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு 3.4 சதவீதமாக ஒரு சாதனை படைக்கிறது. உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து தனது மக்கள் மூலம் கிடைக்கும் தொகையில் இந்தியா முன்னணியில் விளங்குகிறது என்றும், 2015 ஆம் ஆண்டு அந்தத் தொகை 6,900 கோடி டாலராக இருந்தது என்றும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. 

புலம் பெயர்ந்த இந்தியர்கள் திறமையிலும், கல்வியிலும், செல்வத்திலும் சிறந்து விளங்குபவர்களாக கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வர்த்தகம், முதலீடு, தொழிலாளர் முதலிய அம்சங்கள் உலகமயமாக்கப்பட்ட நிலையில், இந்த புலம் பெயர்ந்த இந்தியர்களின் திறன் கணிசமாக உயர்ந்துள்ளது.

உலகளவில் மூன்று கோடிப் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ள புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் தலைவிதியை மாற்றியமைக்கும் கேந்திரமான பொறுப்புகளை வகிக்கிறார்கள். சிங்கப்பூர் அதிபர், நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் மற்றும் மொரீஷியஸ், ட்ரினிடாட், டொபாகோ நாடுகளின் பிரதமர்களும் இந்திய வம்வாவளியினரே. 

1995-க்கும், 2005-க்கும் இடைபட்ட காலத்தில் அமெரிக்காவில் வெளிநாட்டவர் தொடங்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கால் பகுதிக்கும் மேற்பட்டவை இந்தியர்களால் துவக்கப்பட்டவை என்று டியூக் பல்கலைக்கழகமும், கலிபோர்னிய பல்கலைக்கழகமும் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் ஹோட்டல்களில் 35 சதவீதம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரால் நடத்தப்படுபவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருவாய் 32 ஆயிரம் டாலராக இருக்க, இந்தியர்களின் வருவாய் 51 ஆயிரம் டாலர் என்று 2,000ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அமெரிக்கா வாழ் இந்தியர்களில் சுமார் 64 சதவீதம் பேர் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை இது 28 சதவீதம். அமெரிக்காவாழ் ஆசிய நாடுகளின் மக்களின் கல்வித் தகுதியில் இது 44 சதவீதமாகும். 

சுமார் 40 சதவீதம் பேர் மேல்பட்டப் படிப்பு, முனைவர் பட்டம் அல்லது தொழிற்கல்வி பட்டம் பெற்றவர்கள். இது அமெரிக்காவின் சராசரியைப் போல 5 மடங்காகும். புலம்பெயர்ந்த இந்தியர்கள் உயர்ந்த நிலையில் இருக்கும் போது அதன் காரணமாக நாட்டின் பெருமையும், அது பற்றிய புரிதலும் வளர்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் இந்த செல்வாக்கு அவர்களின் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்கள் வாழும் நாடுகளில் இந்தியர்களுக்கு பயனளிக்கும் கொள்கைகளை அந்தந்த நாடுகள் பின்பற்றவும் உதவுகிறது. பன்னாட்டு நிறுவனங்களும், தொழில்களும் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை தொடங்குவதற்கு இவர்களின் முயற்சி தூண்டுதலாக இருப்பதால், இந்தியா பெரும் பலனை பெறுகிறது.

உள்நாட்டு மறுமலர்ச்சிக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை யுக்தி மேலும் துரிதப்படுத்தியது. வெளிநாடுவாழ் இந்தியர்கள், உள்நாட்டில் தொழில் தொடங்க தொழில்நுட்பத்தையும், நிபுணத்துவத்தையும் வழங்குவதுடன் முதலீட்டாளர்களாகவும் விளங்குகிறார்கள்.

இந்தோ யுனிவர்சல் பொறியியல் கூட்டமைப்பின் உறுப்பு நிறுவனங்களைப் போல ஆசிரியர் பணியில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் நேரத்தையும், அறிவாற்றலையும் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி, அதன் கல்வித் தரத்தை உயர்த்த உதவுகிறார்கள்.

நமது கட்டமைப்பையும் போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்துவது, நகர்ப்புற மற்றும் எரிசக்தியில் நீடித்த வளர்ச்சி முதலியவற்றை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அரசோ அல்லது தனியார் வர்த்தக அமைப்புகளோ நிறைவேற்றும் இந்தியாவில் தயாரிப்போம், திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தொடங்கிடு இந்தியா போன்ற திட்டங்கள் இதனைப் பிரதிபலிக்கிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சாதகமான கொள்கைகள் நமது மிகப்பெரிய சொத்தான வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. பாதுகாப்பாகவும், முறையாகவும், சட்டபூர்வமாகவும் மனிதாபிமான ரீதியாகவும் புலம்பெயர்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

புலம்பெயர்ந்து செல்லும் நாடுகளிலும் திரும்பி வரும்போது உள்நாட்டிலும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தொழில் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், சான்று அளிப்பதற்கும் புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் திறன் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு 2016 ஜூலை 2 ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்துக்கும், திறன் வளர்ப்பு தொழில் முனைவு அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சர்வதேச அளவில் திறன் வளர்ப்பு மையங்களை தேசிய திறன் வளர்ப்புக் கழகம் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று புதுதில்லியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக பிரவேசி பாரதிய கேந்திரா அல்லது சர்வதேச இந்திய மையத்தை புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து அதனை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக அர்ப்பணித்து வைத்தார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் பதித்த முத்திரை அவர்கள் சந்திக்கும் சிரமம் முதலியவற்றை எடுத்துக்காட்டவும், அவர்களின் சாதனைகளை எடுத்துரைக்கவும் இந்த மையம் உதவுகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்களிலேயே புகழ்பெற்ற மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதையும், புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் வகையிலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விழாவை நாடு கொண்டாடுகிறது.

ஆன்கில கட்டுரையாளர்: பிரகித் பரமேஸ்வரன்

Related Stories

Stories by YS TEAM TAMIL