பயணத்தில் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள கைக்கொடுக்கும் 'Bon Soul'

0

விரல்களுக்கு நுனியில் அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்ற கொள்கையை வைத்து வாழ்க்கையை மேலும் எளிமையாக்குவதே பான் சோலின் மையம். ஆன்லைன் இணையம் மூலம், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களை பற்றின பட்டியலாக மட்டுமல்லாமல், பயன்படுத்துவோர்களுக்கு அடுத்து எப்போது செல்ல வேண்டும், புது அழகு சிகிச்சை என்னென்னன செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கும் விதமாகவும் 'பான் சோல்' Bon Soul வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பான் சோலின் நிறுவனர் அலேக்யா நாதேந்த்லா தன்னுடைய பயணத்தை பற்றி நம்மோடு பகிர்ந்துக்கொண்டார்.

பான் சோல் பற்றின பாதை எப்படியிருந்தது. இப்படியொரு முயற்சியை தொடங்க உங்களுக்கு தூண்டுதலாக இருந்த விஷயம் என்ன?

அலேக்யா நாதேந்த்லா- என் அப்பாவுடன் அவருடைய தொழிலில் உதவியாகவும், பார்த்துக்கொள்ளும் விதமாகவும் அப்போது பணிபுரிந்தேன். ஆனால், அவரோடு பணிபுரிவதால் அதிகமாக பயணம் செய்யவேண்டிய நிலையிருக்கும். உடலை சரியாக வைத்துக்கொள்ளும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது என்னுடைய வழக்கம். விதவிதமான உடற்பயிற்சி வகுப்பு மற்றும் பயிற்சிகளுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட. அடிக்கடி பயணங்களால் என்னால் மாதத்திற்கு வெறும் 4 அல்லது 5  வகுப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ள முடிந்தது. செல்லும் எல்லா இடங்களுக்கும் ஒரு நாளைக்கான தேவையான பயிற்சிகளை கைகளுக்குள் வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசித்தேன். ஒரு மாதத்திற்கான வகுப்பு கட்டணத்தை கட்டி செல்லமுடியாமல் அதை வீண் செய்வதற்கு பதிலாக இப்படி செய்யலாம் என்று யோசித்தேன்.

உடற்பயிற்சி வகுப்புகள் என்றதும், ஒரு முழுமையான மற்றும் விரிவான முறையில் வகுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அப்போது பிறந்தது தான் 'பான் சோல்'. உடற்பயிற்சி மையங்கள் என்ற விதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பின், யோசனை விரிவாகி முழுமையான ஆரோக்கியம் மற்றும் கவனிப்பு என்ற நிலையை எட்டியது. அதன் பின், ஸ்பா மற்றும் சலூன்களும் இணைக்கப்பட்டது.

பான் சோல் என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

அலேக்யா நாதேந்த்லா- நான் முதலில் புக்மைக்ளாஸ் டாட் காம் என்று தான் பெயரிட திட்டமிட்டிருந்தேன். முழுமையான உடல்நலம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் ஒன்று சேர்க்கும் போது, வெறும் புக்மைக்ளாஸ் மட்டும் சரியாக இருக்காது என்றும் நினைத்தேன். தவிர, டாட் காம் டொமைனில் எங்களுடைய இணையத்தளம் இருக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாகவே இருந்தேன். பம்பாயிலிருந்து கிட்டத்தட்ட 500 பெயர்கள் பரீசிலக்கப்பட்டு கடைசியாக நாங்கள் தேர்ந்தெடுத்தது தான் பான் சோல். முழுமையான ஆரோக்கியம் மற்றும் உடல் சார்ந்த விஷயங்களை கச்சிதமாக வழங்குவது மூலம், ஆத்மாக்களும் மனங்களும் மகிழ்ச்சியடைகின்றது. பான் சோல் என்பது மகிழ்ச்சியான ஆத்மா என்ற சேவைகளின் மையத்தை குறிக்கும் விதமாக பெயரை பொருத்தினோம்.

உங்கள் படிப்பை பற்றி?

அலேக்யா நாதேந்த்லா- சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தேன். அப்போது வித்தியாசமான விளக்கு, ஃபேன் போன்ற இண்டீரியர் சம்பந்தமான விஷயங்கள் கொண்ட ஸ்மார்ட் ஹவுசிங் பிரபலமாகி இருந்த சமயம் அது. ஸ்மார்ட் ஹவுசிங் துறையில் முழுவீச்சில் இறங்குவதற்கு முன்பே, நியூயார்க் நியூ ஸ்கூல் ஆஃப் டிஸைன் என்ற கல்லூரியில் பொறியியல் டிஸைன் படிப்பை முடித்து, மியாமியில் 10 மாதங்கள் வரை பணிபுரிந்தேன். பின், என் தந்தையின் தொழிலில் சேர்ந்தது மட்டுமல்லாமல், தற்போது ஹைதராபாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் பள்ளியில் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறேன்.

உணவகங்களுடைய பட்டியலை கொண்ட ஜோமேட்டோ போல ஸ்பா மற்றும் சலூன்களுக்கான பட்டியல் போல பான் சோல் அமையுமா?

அலேக்யா நாதேந்த்லா- ஜோமேட்டோ போன்ற மற்றுமொரு இணையத்தளமாக இருக்க எனக்கு விருப்பமில்லை. ஜோமேட்டோ போன்று இருக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த இணையதளத்தை விட ஒருபடி  கீழ் தான் இருக்க முடியும். அவர்களை போன்றே மற்றொரு நிறுவனத்தை அவர்களாலே உருவாக்க முடியும். மேலும் சில ஊழியர்களை அதற்கு நியமித்தாலே போதும். (சிரிக்கிறார்)

ஜோமாட்டோ தரத்திற்கான ஒரு இணையதளமாகவே நான் பார்க்கிறேன். அதை போல என்ற ஒப்பீடு வைக்கும் போது அதைவிட அடுத்த இடமாக தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஸ்பாகளுக்கான ஜோமாட்டோ தரத்திலான ஒரு தளமாக இது கண்டிப்பாக இருக்கும்.

தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் உங்களுடைய நிறுவனம் பின்னாளில் எவ்வாறு விரிவுப்படுத்தப்படும்?

அலேக்யா நாதேந்த்லா-பெங்களுரு மற்றும் சென்னை நகரங்களில் விரிவுபடுத்துதலுக்கான முயற்சிகள் நடந்துக்கொண்டு வருகின்றது. தவிர, மும்பை, தில்லி போன்ற நகரங்களிலும் பான் சோல் தடம் பதிக்கும். ஸ்பா மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மையங்களையும் இந்த நகரங்களில் எடுத்துவருவதிலும் எங்கள் கவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிளிக்கில் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையங்களை காண இணையத்தள முகவரி.

ஆக்கம் எஸ்.ஐஜாஸ்| தமிழில் நித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உடற்பயிற்சியை சுவாரசியமானதாக மாற்றும் ஹாபிக்ஸ்

ஊரோடு உடற்பயிற்சி செய்ய, இரும்பு மனிதனாக: "ஃபிட்சோ"

ஹாலிவுட் முதல் இந்தியா வரை ரமோனாவின் உடற்பயிற்சி மந்திரம்!