இந்தியாவின் முதல் கூட்டுநிதி திரட்டலில் உருவான 'இ-சைக்கிள்'- கோவை தொழில்முனைவரின் வெற்றி முயற்சி!

3

இந்தியாவின் கூட்டுநிதி திரட்டல் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் சைக்கிள் 'ஸ்பெரோ' அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு நட்பான மாசில்லாத இந்த எலக்ட்ரிக் சைக்கிளை, கோவையைச் சேர்ந்த 38 வயது மணிகண்டன் உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டு கடின உழைப்பின் பலனாக உருபெற்றுள்ள இந்த சைக்கிள் மூன்று வித மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மணிகண்டன் தனது கனவை நினைவாக்க நிதி திரட்டல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, இறுதியாக கூட்டுநிதி தளத்தின் மூலம் தன் கண்டுபிடிப்புக்குத் தேவையான நிதியை திரட்டினார். இதற்கு நிதி அளித்துள்ளோர் இந்த பைக்கை அவர்களது வலைதளத்தின் மூலம் பதிவு செய்து சுலபமாக வாங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. 

மணிகண்டன் தனது கண்டுபிடிப்பு சைக்கிளுடன்
மணிகண்டன் தனது கண்டுபிடிப்பு சைக்கிளுடன்

இந்தியா டைம்ஸ் தளத்தின் செய்திகள் படி, ஸ்பெரோ ஒரு எலக்ட்ரானிக் சுற்றுச்சூழலுக்கு நட்பான ஒரு சைக்கிள். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 30 கிமி தூரம் வரை ஓட்டமுடியும். விலை அதிகம் உள்ள மற்ற மாடல்கள் சுமார் 60-100 கிமி தூரம் வரை ஒருமுறை சார்ஜில் ஓடும் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளில் 5 கியர்கள் உள்ளன. 10 நொடிகளில் 0-25 கிமி வேகத்தில் செல்லமுடியும். இந்த இ-சைக்கிளின் சிறப்பு அம்சமே; ஒருவர் இதை பெடல் செய்ய செய்ய அது தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். இதன் பேட்டரிகள் சாம்சங் மற்றும் மோட்டார் கொரியாவிலிருந்து வரவழைக்கப்பட்டாலும் சைக்கிளின் மற்ற பெரும்பாலான பகுதிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உள்நாடு மற்றும் வெளிநாட்டின் சிறந்த ஒரு கலவையை இது தருகிறது.

ஸ்பெரோ, 48V, Li-ion பேட்டரியில் இயங்குகிறது. இது ஒரு வருட வாரன்டியுடன் வருகிறது. 4 மணி நேரத்தில் 20%-80-% சார்ஜ் ஆகிவிடும். இவைகளோடு இந்த அழகான சைக்கிளில், டிஜிட்டல் வேக கட்டுபாட்டுத் திரை, பேட்டரி இன்டிகேட்டரும் உள்ளது. இன்த பைக் கூட்டுநிதி திரட்டல் மூலம் 30 லட்ச ரூபாயை இலக்காக வைத்திருந்தது. விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரப்போகும் இந்த இ-பைக் இன் விலை ரூ.29900 முதல் ரூ.50000 வரை இருக்கும். இந்த விலை வரும் காலத்தில் விற்கப்படப்போகும் விலையை விட 40% குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India