சரக்கு மற்றும் சேவை வரி (GST) பற்றிய அனைத்து தகவல்களையும் அளிக்கும் இலவச ஆப் அறிமுகம்! 

1

சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி என்று சொல்லப்படும் வரி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, மதிப்புக்கூட்டு வரி, சேவைவரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஒரே மாதிரியான வரி முறையை பின்பற்றவே ஜிஎஸ்டி வரி அரசால் கொண்டு வரப்படுகிறது. 

ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப்பற்றிய செய்திகளும், தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும், ஜிஎஸ்டி வரியால் தங்களுக்கு வரக்கூடியவற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த இ-லேர்னிங் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி தகவல்களை இலவச ஆப் மூலம் தர அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி சம்மந்தமான எல்லா விஷயங்களையும், வரி விகிதங்களையும், ஒவ்வொருவருக்கான வரியை கணக்கிடும் கால்குலேட்டர் வசதியுடன் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவைவரி பற்றிய புரிதல் கிடைக்க அது பற்றிய கட்டுரைகளும் அதில் இடம்பெறும். 

Origin Learning என்ற கற்றல் தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனம், குரு கிருபா இன்ஸ்டிடூட் ஆப் மேனேஜ்மெண்ட் (வரி ஆலோசக வல்லுனர்கள்) உடன் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுளளனர். குரு கிருபா இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி மையமாகும். 

GST Konnet ஆப் முக்கிய அம்சங்கள்

கோர்சஸ் - ஜிஎஸ்டி பற்றிய அடிப்படை அறிவை பெற கற்றல் வசதியுடன் வகுப்புகள்

ஜிஎஸ்டி கால்குலேட்டர் - பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை கணக்கிடும்.

இணக்கம் - ஜிஎச்டி சட்டம் பற்றிய புரிதல் மற்றும் அதில் பதிவு செய்யும் முறைகள்

செய்தி மற்றும் கட்டுரைகள் - ஜிஎஸ்டி பற்றி வல்லுனர்கள் தேர்ந்தெடுத்து அளிக்கும் செய்தி மற்றும் கட்டுரைகள்

சிறு துளிகள் - விடீயோ பதிவுகள் மற்றும் ஜிஎஸ்டி பற்றிய தேவையான அறிவுரைகள்

இந்த ஆப் தற்போது பலருக்கும் உதவும் வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பட்டையக்கணக்காளர்கள் மற்றும் வரி வல்லுனர்களின் உதவியோடு தகவல்கள் அளிக்கப்படுவதால் இதில் நம்பகத்தன்மை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். 

GST Konnect ஆண்ட்ராய்டில் பதிவிறக்கம் |GST Konnect ஐஓஎஸ்-ல் பதிவிறக்கம்