சென்னை ஸ்டார்ட்-அப் PipeCandy 1.1 மில்லியன் டாலர் விதை நிதியை உயர்த்தியது!

0

IDG வென்சர்ஸ், ஆக்சிலர் வென்சர்ஸ், எமெர்ஜெண்ட் வென்சர்ஸ், இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் (Indian Angel Network) மற்றும் ஒரு சில ஸ்டார்ட் நிறுவனர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த இண்டெலிஜெண்ட் சேல்ஸ் ப்ராஸ்பெக்டிங் தளமான பைப்கேண்டி (PipeCandy) 1.1 மில்லியன் டாலர்கள் விதை நிதியை ஃபண்டிங்காக பெற்றுள்ளது. 

இந்நிறுவனம் இதற்கு முன்பே 2016-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியிடப்படாத ஒரு தொகையை உயர்த்தியுள்ளது. பைப்கேண்டி நிதித்தொகையைப் பயன்படுத்தி தனது அனலிடிக்கல் மாடலில் கவனம் செலுத்தி விற்பனை பிரதிநிதிகள் சிரமமின்றி சிறந்த வழிமுறைகளை பின்பற்ற உதவும் டூல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

பைப்கேண்டி, ஃபிப்ரவரி மாதம் 2016-ம் ஆண்டு அஷ்வின் ராமசாமி மற்றும் முரளி விவேகானந்தன் ஆகிய இரு இணை நிறுவனர்களைக் கொண்டு டேட்டா சயின்ஸ் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி B2B விற்பனை பிரதிநிதிகள் தங்களுக்கு ஏற்றவாறான சரியான வாய்ப்புகளை கண்டறிய உதவுகிறது.

மேலும் அவர்களது துறை சார்ந்த நுணுக்கங்களுக்கு ஏற்றவாறு வாய்ப்புகளை பிரித்துக்கொள்ளவும் உதவுகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் இருந்தாலும் அனைத்து செயல்பாடுகளும் சென்னையில் உள்ளது.

PipeCandy பின்னணி

மூன்று நாடுகளில் ஆட்டோமோடிவ் மென்பொருள் விற்பனை, சப்ளை செயின் ஆலோசனை, செயலி உருவாக்குதல் ஆகியவற்றில் எட்டு வருடங்களாக ஈடுபட்டு வந்த அஷ்வின் ContractIQ என்கிற செயலி டெவலப்மெண்ட் ஏஜென்சிக்கான B2B தளத்தை 2012-ம் ஆண்டு சென்னையில் நிறுவினார். ப்ராஜெக்ட் அளவில் அதிக வருவாய் ஈட்டிய ஒரு ப்ராடக்ட் என்ஜினீரிங் ஏஜென்சியை இரண்டு வருடங்கள் நடத்தினார் முரளி. 

நான்கு வருடங்களுக்கும் மேலாக 20 ப்ராஜெக்ட்களுக்கும் மேல் இணைந்து பணிபுரிந்த அஷ்வின் மற்றும் முரளி இருவரும் முதல் சந்திப்பிலேயே, 

“விற்பனை என்பது டேட்டா பிரச்சனையைச் சார்ந்தது. டேட்டாவை சரிசெய்துவிட்டால் நம்பகத்தன்மையை சரிசெய்ததாகவே பொருள்படும்.” என்று திடமாக நம்பினார்கள். இதனால் பைப்கேண்டியை தொடங்க முடிவெடுத்தனர்.

அஷ்வினுடன் படித்த ஸ்ரீகாந்த் ஜெகந்நாதன் இவ்விருவருடன் இணைந்துகொண்டார். இவர் Fortune 500 நிறுவனங்களில் சிறந்த 10 நிறுவனங்களுக்கு ப்ராடக்ட் டெவலப் செய்துள்ளார். இந்த ப்ராடக்ட்கள் டேட்டா சயின்ஸ் டெக்னிக்குகளை பயன்படுத்தி நுகர்வோர் நடத்தையை புரிந்துகொள்ள உதவக்கூடியது.

வணிகம் மற்றும் வணிக மாதிரி

ரீட்டெயில், இகாமர்ஸ், மொபைல் SaaS போன்ற துறைகளின் குறிப்பிட்ட துறைசார்ந்த நுணுக்குங்களை விற்பனை பிரதிநிதிகள் கண்டறிய பைப்கேண்டி உதவுகிறது. பொது தரவு மூலமான யெல்லோ பேஜஸ், நிறுவனத்தின் வலைதளங்கள், ஃபிர்மோக்ராஃபிக் மற்றும் வணிகத்தின் முக்கிய முடிவெடுப்பவர்களின் தொடர்பு டேட்டா போன்றவற்றை வழங்குபவர்களுடன் பார்ட்னர்ஷிப் ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

நிறுவன அளவிலான டேட்டாக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். மக்கள் தொடர்புடைய டேட்டாக்கள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். பைப்கேண்டியின் பவுன்ஸ் ரேட் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் டேட்டா நம்பகமானது என்பது நிரூபனமாகிறது. ஒரு சம்பவம் குறித்து அஷ்வின் விவரிக்கையில்,

”போலியான பொருட்களுக்கு மத்தியில் ரீடெய்லர்களுக்கு அசலான ஆடம்பர பொருட்களை அடையாளம் காட்ட உதவுகிறது சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப். இந்த ஸ்டார்ட் அப் ஒரு குறிப்பிட்ட வகை ஆடம்பர பொருளை விற்கும் ரீடெய்லர்களையும் ஸ்டோர்களையும் கண்டறிய பைப்கேண்டியை பயன்படுத்தியது.”

இந்நிறுவனம் அறிவுத்திறனையும் (Intelligence) நுண்ணறிவையும் (Insight) விற்பனை செய்கிறது. ஒருவர் வாங்கும் ப்ராஸ்பெக்ட் ரெகார்ட்ஸ் எண்ணிக்கையைப் பொறுத்தும் ஒவ்வொரு ரெக்கார்டின் இண்டெலிஜெண்ட் ஆட்ரிப்யூட்ஸ் எண்ணிக்கையைப் பொறுத்தும் கட்டணம் வசூலிக்கப்படும். 

உதாரணத்திற்கு ஒருவர் இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறித்த டேட்டாவைத் தேடும்போது பைப்கேண்டி அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட நிறுவனம் எத்தனை ஸ்டாக் கீப்பிங் யூனிட்ஸ் (SKUs) விற்கிறார்கள் அல்லது நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கு எத்தனை விதமான போக்குவரத்து வாய்ப்புகள் உள்ளன உள்ளிட்ட நுண்ணறிவை அளிக்கும்போது, அப்படிப்பட்ட ஒவ்வொரு டேட்டா பாயிண்ட்டும் ஒரு அட்ரிப்யூட்டாக கணக்கிடப்பட்டு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் (காண்டாக்ட் டேட்டாவின் கட்டணத்திற்கும் கூடுதலாக).

உலகளவில் உள்ள 40 மில்லியன் நிறுவனங்களில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட முடிவெடுப்பவர்களை கண்காணித்துள்ளதாக தெரிவிக்கிறது பைப்கேண்டி. குறிப்பாக ரீடெயில், இ-காமர்ஸ், மொபைல் மற்றும் SaaS வெர்டிகல்ஸ் போன்றவற்றைச் சார்ந்த வணிகத்தில் பைப்கேண்டி அனாலிட்டிகல் மாதிரிகளை உருவாக்கியுள்ளது. இது விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்ட துறையில் மிகச்சரியாக பொருந்தும் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி முன்னேற உதவும்.

அஷ்வின் விவரிக்கையில், ஒரு பாயிண்ட் ஆஃப் சேல் மென்பொருள் நிறுவனம் பல்வேறு வகையில் செயல்படும் ரீடெய்லர்களை கண்டறிந்து அவர்கள் விற்கும் SKUs எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிட முடியும். எனவே பாரம்பரிய சேல்ஸ் இண்டெலிஜென்ஸ் நிறுவனம் போலல்லாமல் பைப்கேண்டி குறிப்பிட்ட துறையில் தனித்துவமான நிறுவனங்களைக் கண்டறிய உதவுகிறது. இதனால் பதில் விகிதம் அதிகரிக்கும். 

வாடிக்கையாளர்கள், சந்தை மற்றும் குழு 

பைப்கேண்டி செயல்படும் சந்தை 2021-ல் 12 பில்லியன் டாலர்களைக் கொண்ட சந்தையாக இருக்கும். இன்ஃபெர் (Infer), லேட்டிஸ் என்ஜின்ஸ் (Lattice Engines), சென் ப்ராஸ்பெக்ட் (Zen Prospect) போன்ற நிறுவனங்கள் இவர்களது போட்டியாளர்களாகும். இந்நிறுவனங்கள் பெயர், இமெயில் ஐடி, ஃபோன் நம்பர் போன்ற ‘கமாடிட்டி டேட்டா’க்களில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் பைப்கேண்டி விற்பனை பிரதிநிதிகளுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட துறை சார்ந்த அட்ரிப்யூட்களில் கவனம் செலுத்துகிறது. ஃப்ரெஷ்டெஸ்க் (Freshdesk), சார்ஜ்பி (Chargebee), சார்கெட் (Zarget), Shyp மற்றும் Agiliron போன்ற US சார்ந்த இ-காமர்ஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை பைப்கேண்டியின் வாடிக்கையாளர்கள். பைப்கேண்டியின் வாடிக்கையாளர்கள் பைப்கேண்டியின் அனாலிட்டிகல் மாதிரியில் கண்டறியப்படும். ப்ராஸ்பெக்ட்களை அணுகி சேவை குறித்த பிரச்சாரம் செய்கையில் வாடிக்கையாளார்களுக்கு கிட்டத்தட்ட 20 சதவீத பதில் விகிதம் கிடைக்கிறது.

ஆங்கிலம் பேசுபவர்கள் நிறைந்த சந்தை குறிப்பாக அமெரிக்காவில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. ஜுன் 2017-ல் 100 கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது. ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகியவை வேகமாக முதிர்வடைவதாக தெரிவித்தார் IDG வென்சர்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் மேனன். அவர் கூறுகையில், 

“உலகளவில் இது அதிகம் ஊடுருவப்படாத பகுதி. மூன்று சதவீத நிறுவனங்கள் மட்டுமே நெறிப்படுத்தப்பட்ட முறையில் அணுகுவதற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.”

25 நபர்களைக் கொண்டது இவர்களது குழு. டேட்டா குழுவில் 10 நபர்களும், தொழில்நுட்ப குழுவில் ஐந்து நபர்களும், ப்ராடக்டில் ஒருவரும், மார்கெட்டிங்கில் ஒருவரும், ஒவ்வொன்றிலும் HR மற்றும் நிதிக்கு ஒருவரும் மற்றும் மூன்று நிறுவனர்களும் உள்ளனர். 2017-ல் குறைந்தது மூன்று புதிய வெர்டிகல்களுக்கு இண்டெலிஜெண்ட் இன்சைட்டை அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

ஆங்கில கட்டுரையாளர் : அலோக் சோனி