டெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது!

0

ஆப் உருவாக்கும் ஸ்டார்ட் ஆப் நிறுவனமான ’ஹசுரா’ நெக்சஸ் வென்சர்ஸ் நிறுவனமிடம் இருந்து 1.6 டாலர் மில்லியன் நிதி திரட்டியுள்ளது.

2016-ல் தொடங்கிய இந்நிறுவனம் கடந்த வாரம் 1.6 டாலர் மில்லியன் விதை நிதி திரட்டியுள்ளதாக அறிவித்தது. சான் பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரில் இயங்கும் ஹசுரா ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் GREE வென்சர்ஸ் நிதி அளித்துள்ளது.

இந்த நிதி தொகை ஆப் டெவலப்பர்களுக்கு குபர்நெட்ஸ் தொழில்நுட்பத்தை வழங்க பயன்படுத்தப்படும். குபர்நெட்ஸ், கூகுள் உருவாக்கிய பயன்பாடுகளை நிறுவுதல், அளவிடுதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றைத் திறக்கும் ஒரு திறந்த மூல முறைமையைக் குறிக்கிறது, இப்போது கிலௌட் நேடிவ் கம்ப்யூட்டிங் பவுண்டேஷன் பராமரிக்கிறது.

இந்த தொகை தயாரிப்பை அதிகமாக்க பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கிறார் ஹஸுரா இணை நிறுவனர் மற்றும் சிஓஓ, ராஜோஷி கோஷ். தங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் டெவலப்பர் உறவு அணிகள் வலுபடுத்த இது உதவுவதாகவும் தெரிவிக்கிறார்.

“ஆப்-கள் உலகத்தை வென்றுள்ளன என்ற தவறான கருத்துக்கணிப்பில் நாங்கள் இருந்தோம். ஆனால் இங்கு பல பிரிவுகளில் தீர்க்கப்படாத பல்வேறு பல சிக்கல்கள் உள்ளன; குறைந்த தொழில்நுட்ப அறிவு இருப்பவர்கள் கூட ஓர் ஆப்-ஐ உருவாக்க வேண்டும்,”

என்கிறார் ஹசுரா நிறுவனத்தின் துணை நிறுவனர் தன்மை கோபால். கார்ட்னர் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான ரஜோஷி கோஷ் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலரான தன்மே கோபால் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இந்த நிறுவனம் டெவெலப்பர்கள் ஆப் உருவாக்க மற்றும் அளவிட ஓர் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் APIs உள்ளதால் 3 நிமிடத்தில் செயல்படும் ஆப்-ஐ உருவாக்க முடியும். 

இந்நிறுவனத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே படிக்கலாம்: ஆப் உருவாக்க பயிற்சி: மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பை எளிதாகிய ஹசுரா 

மேலும் இவர்கள் SDKs பயன்படுத்துவதால் உடனடி அல்லது தனிப்பயன் API கள் உருவாக்க சுலபமாக உள்ளது

“அனைத்து பொருட்களும் உள்ள நீங்களாகவே செய்ய கூடிய கிட் (DIY) இருபதற்கு சமம். நீங்கள் தேவையானவற்றை தேவையான இடத்தில் பொருத்தி உருவாக்கினால் போதும்,” என்கிறார் ரஜோஷி.

உயர் செயல்திறன் தரவு

ஹசுரா உயர் செயல்திறன் தரவு அடுக்கை வழங்கும் ஓர் தளமாகும். ஹூசுரா பல்வேறு கிளவுட் விற்பனையாளர்களிடமிருந்து டெவெலப்பர்களுக்கான ஒரு கட்டளையிலும் குபர்நெட்ஸ் கிளஸ்டர்களையும் வழங்குகிறது; மேலும் ஒரு கிளவுட் உறிமையார்களிடம் இருந்து மற்றொரு பயன்பாட்டுக்கு தானாகவே அனுமதிக்கிறத.

“ஆப் உருவாக்குதலை குபர்நெட்ஸ் இன்னும் சுலபமாகும் என நெக்சஸ் நம்புகிறது,” என்கிறார் நெக்சஸ் வெண்சர் பார்ட்னர் சமீர் பிரிஜ் வெர்மா.

மேலும் பேசிய அவர், உலகின் மிக பெரிய குபர்நெட் க்ளஸ்டரை ஹசுரா குழு இயக்கி வருகிறது மற்றும் டெவலப்பர்களுக்கான தேவையான கருவிகளை உருவாக்கிய முதல் நிறுவனம் ஹசுரா என தெரிவிக்கிறார். ஹசுரா மூலம் டெவலப்பர்கள் குபர்நெட் பற்றி தெரியாமலே சில நிமிடங்களில் சிறிய மற்றும் எளிமையான ஆப்-ஐ சில நொடிகளில் உருவாக்கலாம்.

இவர்கள் குழு 2015-ல் பீட்டா பதிப்பை வெளியிட்டது, அதனை தொடர்ந்து 2016ல் இரண்டு பிரிவுகளாக வருவாய் மாதிரியை இயக்கியது ஹசுரா.