தெரிந்த இந்திய நடிகைகள் - தெரியாத மறுபக்கம்!

0

மக்கள் திரண்டு வந்து தங்கள் படத்தை பார்க்கவைப்பதும் பணத்தை அள்ளி இறைக்கவைப்பதும் பாலிவுட் கனவுகன்னிகளுக்கு கடினமல்ல. ஆனால், சில இந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிப்பது பாலிவுட்டின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையேல், இந்த நடிகைகள் வெவ்வேறு துறைகளில் தங்கள் தனித்திறமையால் பேரும், புகழும், பணமும் சம்பாதித்திருப்பார்கள். 10 நடிகைகளின் நடிப்புத்திறன் மட்டுமல்லாத மற்ற துறைசார்ந்த சிறப்பம்சங்களை பார்ப்போம்.

1. தீபிகா படுகோன்

உலக பேட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனைப் போலவே அவரது மகளான தீபிகா படுகோனும் பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கினார். பேட்மிட்டனில் மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார். ஆனால் விளையாட்டு துறையை தொடராமல் சினிமாவை தேர்ந்தெடுத்ததால், நம்முன் ஒரு பிரபலமான நடிகையாக நிற்கிறார்.

2. ஜூஹி சாவ்லா

ஜூஹி சாவ்லாவின் நடிப்புத்திறமை குறித்து நாம் அறிவோம். ஆனால் ஏதேனும் ஒரு பாடலை அவர் ஹம்மிங் செய்வார் என்று நினைத்திருப்போமா? ஆம். அவரது நடிப்பைத்தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பாரம்பரிய இசையை பயின்றுள்ளார். 2011-ல் பஞ்சாபி படத்தில் பின்னனி பாடகியாகவும் உருவெடுத்துள்ளார்.

3. இஷா ஷர்வானி

இஷா ஷர்வானியின் அறிமுக படமான கிச்னாவை யாராவது ஒரு ஐந்து நிமிடங்கள் பார்த்தால் போதும், அவர் நடக்கமுடியாதவர் என்கிற முடிவிற்குதான் வருவார்கள். அவர் படுப்பதுபோல் அமைந்திருக்கும் காட்சிகளில்கூட அவரின் முதுகு வளைந்து காணப்படும். அவ்வளவு தத்ரூபமாக நடித்திருந்தார். பல ஆண்டுகால கடின பயிற்சியினால் பல்வேறு நாட்டியக் கலைகளை கற்று தேர்ந்ததனால் வந்த நளினம் அது. அவர் தற்கால மற்றும் ஏரியல் நடனக்கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

4. சோனம் கபூர்

சோனம் கபூர் சினிமாவில் கால் தடம் பதித்து நம் கண்களுக்கு விருந்தளித்தாலும், அவரது கால் தடம் பெருமிதத்துடன் பாராளுமன்றத்தை நோக்கி பதிந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஆசியாவிலுள்ள யுனைடெட் வேர்ல்ட் கல்லூரியில் சர்வதேச இளங்கலை முடித்தபின் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.

5. ஜெனிலியா டிசூசா

ஜெனிலியாவின் பல திறமைகளில் ஒன்றுதான் நடிப்பு. மும்பை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை கல்வி பயிலும்போது விளையாட்டுப் போட்டிகளின் மேல் ஆர்வம் மேலோங்கியது. அவரது திறமைக் காரணமாக மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார். கால்பந்து போட்டியில் தேசிய அளவில் முன்னேறியவர்களில் இவரும் ஒருவர்.

6. நர்கீஸ் ஃபக்ரீ

ராப் நடனத்தின் பிறப்பிடமான க்வீனஸ் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் நர்கீஸ் ஃபக்ரீ. ஸ்டைல் ராப்பிங்கில் அவருக்கு ஆர்வம் அதிகமானது. ஹ்ரிதிக்கின் பேங் பேங் சேலஞ்ஞில் பங்கேற்றார். 50 செண்ட் என்று அழைக்கப்படும் கர்டிஸ் ஜாக்சனுடன் அறிமுகமானார். இரண்டு ராப் நடனக் கலைஞருக்கும் இடையில் ராப் நடனம் குறித்த பரபரப்பான விவாதங்கள் நடந்திருக்கலாம் என்று நம்புவோம்.

7. ப்ரீத்தி சிந்தா

மனித உளவியல் பாடத்தில் ஆழ்ந்த அறிவுடையவர் ப்ரீத்தி சிந்தா. மனிதனின் மனம், எண்ணங்கள் இவற்றை அறிவதை நோக்கமாக கொண்ட ப்ரீத்தி சிந்தா, க்ரிமினல் சைக்காலஜியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் இளநிலை பட்டம் பெற்றிருக்கிறார்.

8. பரினீதி சோப்ரா

பரினீதி சினிமா துறைக்குள் நுழைந்தது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. ஏனென்றால் இவர் நிதித்துறையில் ஆர்வம் கொண்டவர். இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டர் பிஸினஸ் ஸ்கூலில் வணிகம், நிதி, பொருளாதாரம் ஆகிய மூன்று துறைகளில் பட்டம் பெற்றுள்ளார். முதலீட்டு வங்கியாளராக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

9. மினிஷா லம்பா

மக்களின் வாழ்க்கை குறித்தும் பயணங்கள் குறித்தும் பதிவுசெய்யும் பத்திரிக்கையாளராக இவர் இருந்திருப்பார். ஷவுர்யா என்ற படத்தில் வரும் கதாபாத்திரம் போல ஒரு ஜர்னலிஸ்டாக இருப்பதுதான் இவரது கனவு. மினிஷா புகழ்பெற்ற மிரண்டா ஹவுஸில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.

10. அமீஷா படேல்

சினிமாவின் அறிமுக நடிகர்கள் பலர் இந்தத் துறையில் நுழைவதற்கு முன்பே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அமீஷா டஃட்ஸ் யூனிவர்சிட்டி ஆப் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தங்க பதக்கம் பெற்றார். கண்ட்வாலா செக்யூரிடிஸ் லிட் எனும் மும்பையைச் சேர்ந்த முதலீட்டு வங்கியில் இவர் பொருளாதார ஆய்வாளராக இருந்தார்.

இவர்கள் அனைவரது நிஜ வாழ்க்கையும் சினிமா கதாபாத்திரங்கள் போலவே அர்த்தமுள்ளதாக அமையும் என்று நம்புவோம். சினிமாத்துறையிலும் தங்களது தனித்திறமையிலும் அவர்கள் சிறந்து விளங்கட்டும்.

ஆக்கம் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற பன்முகத்திறமை கொண்ட திரை நட்சத்திரங்கள் பற்றிய கட்டுரைகள்:

நிஜ வாழ்விலும் மக்களின் மனம் கவர்ந்த ஹீரோயின் 'மஞ்சு வாரியார்'

'கேன்சர் நோய்க்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது'- மனிஷா கொய்ராலா!

Related Stories

Stories by YS TEAM TAMIL