இந்தியப் பெண்களுக்கான கார்ப்பரேட் ஆடை முறை!  

1

உங்கள் கனவு வேலை உங்களுக்கு கைகூடிவிட்டால், அடுத்தபடியாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது ‘கார்ப்பரேட் ட்ரெஸ்ஸிங்’. தொழிலுக்கு ஏற்றவாறு ஆடைகளை தேர்ந்தெடுப்பது நீங்கள் நினைப்பது போல சவாலானதல்ல. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கான ஆடைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், நவநாககரீகமாகவும், மிடுக்கான தோற்றமளிக்கவும் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

உங்கள் கனவு வேலையில் சேரும் முன் அதற்கு ஏற்ப ஆடை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம், அதற்கான சில யோசனைகள் இதோ:

1. உங்கள் பணி இடத்தில் பழமைவாதிகள் உள்ளனரா என்பதை கண்டறியுங்கள்

பணிச்சூழலக்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வது எப்போதும் மிகவும் அவசியம். பணியிடத்தில் சக பணியாளர்கள் தினந்தோறும் முழு சூட்கள், கூரிய கட் ப்ளேஸர்கள் மற்றும் முறையான ஆடைகள் அணிந்திருந்தால் நீங்களும் சூட்டையே தேர்வு செய்வது நல்லது.

இந்தியாவில் உள்ள சட்டம் மற்றும் முதலீட்டு வங்கிகள் கார்ப்பரேட் ட்ரெஸ்ஸிங்கை மிகப்பெரிய பாரம்பரியத்தோடு அணுகுகின்றனர், மற்ற இடங்களில் பழமையான அல்லது சாதாரண ஆடை முறையே பின்பற்றப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனத்தில் அவர்கள் வகிக்கும் பொறுப்பு அல்லது வாரத்தில் குறிப்பிட்ட நாளுக்கு மட்டும் ஒரு ஆடை முறை என அவை வித்தியாசப்படுகின்றன.

எனவே உங்கள் பணியிட சூழலை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்!

2. கார்ப்பரேட் நிறுவனத்தின் அச்சுஅசலாக இல்லாமல் உங்கள் தனி ஸ்டைலை கடைபிடியுங்கள்

வேலைக்கு சேர்ந்த அந்த நிமிடம் முதல் நீங்கள் பலரை சந்திக்க நேரிடும், அதிலும் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைஅலங்காரம் செய்திருந்தால் நீங்கள் அந்த கூட்டத்தில் தொலைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கலாச்சாரம் உங்களை பயமுறுத்தும், இதிலிருந்து விடுபட நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்.

பணியிடத்தில் நீங்கள் உங்கள் ஆடை நாகரீகத்தை தொடர சில நுட்பமான வழிகள் உள்ளன, எனவே அவற்றை கண்டுபிடியுங்கள்!

3. உங்களுடைய உடையில் நீங்கள் சௌகர்யமாக உணர்ந்தால் நம்பிக்கை தானாக வரும்

நம்பிக்கைக்கு மிக முக்கியம் சௌகரியம், எனவே அதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். உங்களுடைய கார்ப்பரேட் ஆடைகள் உங்களுக்கு சௌகரியமானதாக இல்லை என்றால், இப்படிப் பட்ட பணிச் சூழல் தேவையா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ‘முட்டாள்தனம் இல்லாத’ மாற்று வழிகளை கண்டுபிடியுங்கள், பணியாற்றும் ஒன்பது மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஆடையைப் பற்றி யோசிக்க வைக்காமல் இருக்கும் தொழிலை தேர்வு செய்யுங்கள்.

4. ஒரு தந்திரமான நாளில் உங்கள் வழியில் உத்வேக ஆடை அணியுங்கள்

கருப்பு, வெள்ளை, நேவி மற்றும் சாம்பல் நிறங்களை எப்போதும் உங்களது சிறந்த நண்பனாக வைத்துக் கொள்ளுங்கள், புதிய முயற்சிகளை செய்யும் போது இந்த நிற ஆடைகளை அணிந்தால் தவறாக எதுவும் நடக்காது. அந்த மாதிரியான நாட்களில் இது போன்ற பாதுகாப்பான தேர்வை செய்யுங்கள் இதனால் நீங்கள் மற்ற விஷயங்ளைப் பற்றி கவலைப்பட்டாலும் உங்கள் ஆடைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நன்கு தைக்கப்பட்ட கருப்பு பேன்ட், கருப்பு ப்ளேசர் மற்றும் வெள்ளை ஆக்ஸ்ஃபோர்ட்டு சட்டை உங்களை மோசமான நாளில் கூட சிறந்தவராக எடுத்துக் காட்டும்.

குறிக்கோளுடன் செயல்படுவது சிறந்தது, அதே போன்று உங்களது கனவை அடையும் பாதையை நோக்கி உங்களை அழைத்துச் செல்வது அதை விட சிறந்தது. அதனால் நீங்கள் ஏன் உங்களது ஆடைகள் நம்பிக்கைக்கும், வெற்றிக்கும் அச்சாரமிடுவது தடுக்க வேண்டும். கோகோ சேனல் சொன்னது போல ‘அவலட்சமான ஆடை அணிந்தால், மக்கள் அந்த உடையை நினைவில் வைத்திருப்பர். முன்மாதிரியான உடை அணிந்தால் மக்கள் அந்த பெண்மணியை நினைவில் வைத்திருப்பார்கள்.’

கட்டுரை: நித்தி அகர்வால் | தமிழில் :கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

நேர்காணலுக்கு செல்லும்போது சிறப்பான உடையலங்காரம் அவசியம்

பிசினஸ் கார்டுகளில் அவசியம் இடம்பெற வேண்டியவை!