'இவ்வுலகம் காட்சியின் ஊடாக இயங்குகிறது, என் மகள்கள் எனக்கு அதை காண்பிக்கிறார்கள்: கிருத்திகா ரெட்டி

0

அவர் ஒரு உற்சாகமான நபர். எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்கிறாரோ அப்போதெல்லாம் அவரது குழுவிற்கு கில்லிங் இட்-க்கான சார்க் இமோஜிகளை அனுப்பிவிடுவார். எவ்வளவு கூலான ஐடியா இது? தனது மூளையில் உதிக்கும் எதையும் பகிர்ந்து கொள்ளத் தயங்காத கிருத்திகா ரெட்டி, ஃபேஸ்புக்கின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர். 42 வயதான கிருத்திகா, 2011ம் ஆண்டுக்கான ஃபார்ட்யூன் இந்தியா இதழில் ‘இந்தியாவின் முதல் 50 மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த உலகமே காட்சி ஊடாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர் அவர். தனிப்பட்ட சந்திப்புகளோ தொழில் நிமித்த சந்திப்போ எதுவாக இருந்தாலும் படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், சொல்லப்போனால் முப்பரிமாண முறையில் கூட நாம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம்.

கிருத்திகா தன் மகள்கள் அஷ்னா மற்றும் அரியாவுடன்
கிருத்திகா தன் மகள்கள் அஷ்னா மற்றும் அரியாவுடன்

ஆனால் இந்தப் புரிதல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கின் தலைமையகத்தில் நடந்த நிர்வாக கூட்டங்களில் இருந்து வந்தது இல்லை, அவர் வீட்டிலிருந்து கற்றுக் கொண்டது. “இந்த உலகம் காட்சியின் ஊடாக இயங்கிக் கொண்டிருக்கிறது, என் மகள்கள் அவற்றை எனக்கு காண்பிக்கிறார்கள்” என்கிறார் கிருத்திகா. படத்தயாரிப்பு பற்றி அவர் தன்னுடைய மூத்த மகளிடம் இருந்து கற்றுக்கொண்டார், இதன் பயனாக அவர் தன்னுடைய குழுவின் பணியை ஒரு 007 ரக வீடியோ மூலம் காண்பித்தார். அவர் தன்னுடைய குழந்தைகளுக்கு அனுப்பிய தகவலில் XOXO என்று முடிக்க, இதற்கான அர்த்தம் புரிந்துள்ளதே என்பதை நினைத்து அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

“இன்றைய தினத்தில் 4 பில்லியன் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பார்க்கப்படுகிறது, அவற்றில் 75 சதவீதம் செல்போன் மூலம் பார்க்கப்படுகிறது” என்கிறார் அவர்.

என்னுடைய குழந்தைகள் இந்த உலகம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை எனக்கு கற்றுக்கொடுக்கிறார்கள், அதை புரிந்து கொள்ளவும் உதவுகிறார்கள். அவர்கள் என்னைப் பல வழிகளிலும் ஊக்கப்படுத்துகின்றனர்.

யுவர்ஸ்டோரியிடம் கிருத்திகா பேசிய போது “மக்கள் ஃபேஸ்புக் மூலம் இணையவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் வருகின்றனர், அவர்களுக்கு பல வழிகளில் தொடர்பு ஏற்படுகிறது. இதில் ஒருவருக்கு ஒருவர், ஒருவர் பலரிடம், பலர் பலரிடம் எனத் தகவல் பகிர்வு விரிகிறது. இதனாலேயே எங்கள் குடும்ப செயலியை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அது ஃபேஸ்புக் மட்டுமல்ல, இன்ஸ்ட்டாகிராம், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப். இது வரை 152 மில்லியன் மக்களை நாங்கள் ஏற்கனவே இணைத்துள்ளோம், இன்னும் பல பில்லியன் பேர்களை இணைக்க உள்ளோம், அது உண்மையில் வியப்பை ஏற்படுத்துகிறது”. இந்த நிலையை அடைய கிருத்திகா எப்போதும் தன்னுடைய கண் மற்றும் காதை கற்றலுக்கு ஏற்றவாறு கூர்மை தீட்டியே வைத்திருப்பார், அதில் ஒரு படி முன்னே சென்று இளம் தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள் என்றும் யோசிப்பார்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் நிர்வாக மேற்படிப்பும், சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் கணினிப்பொறியியலில் எம்எஸ் படித்திருந்த போதும் கிருத்திகாவின் கற்றலுக்கான ஆர்வம் நின்று விடவில்லை. “என் குழந்தைகள் பெற்றோருக்கான அர்த்தம் என்ன என்று நான் நினைத்திருந்ததை தகர்த்தெரிந்தனர். தொழில், வாழ்க்கைத் துணை மற்றும் என் வாழ்வில் உள்ள அனைத்து ரோல்களுக்கும் நான் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தினார்கள்”.

'அண்ட்'-ன் சக்தி

நாக்பூரில் பிறந்த கிருத்திகா, கடின உழைப்பின் மதிப்பை உணர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். தன் தந்தைக்கு அரசாங்க உத்தியோகம் என்பதால் தண்டேலி மற்றும் நேண்டட் என்று தொடக்க காலத்தில் இடம் மாறுதல்களை சந்தித்தார்.

பொறியியல் இளநிலை படிப்பை நேண்டடில் உள்ள எம்ஜிஎம் பொறியியல் கல்லூரியில் பயின்றார். அதன் பின்னர் நாக்பூரில் இருந்து கனெட்கர் டுடோரியலில் பொறியியல் மாணவர்களுக்கு மாஸ்ட்டர் சி திறனை வளர்க்க உதவி செய்தார்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் நிர்வாக மேற்படிப்பும், சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் கணினிப்பொறியியலில் எம்எஸ் –சும் படித்து முடித்த பின்னர், கிருத்திகா அமெரிக்க நிறுவனமான ஃபீனிக்ஸ் டெக்னாலஜியில் பணியாற்றினார். அதன் பின்னர் தான் ஃபேஸ்புக் அவருடைய ‘கனவை நிறைவேற்றும் பணியை’ அவருக்கு அளித்தது.

வேலைக்கு செல்லும் மற்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போலவே கிருத்திகாவுக்கும் சொந்த வாழ்வையும் அலுவலகப் பணியையும் சமன்படுத்தி செல்வது போராட்டமாக இருந்தது. இருந்த போதும் இன்று அவர் அந்த விடுகதைக்கு புதிய பரிமாணத்தில் விடையை கண்டுள்ளார்.

‘மற்றும்’ என்ற சக்தியின் அரவணைப்பும், ‘அல்லது’-க்கு எதிரான போராட்டமும்

மும்பையில் அண்மையில் இங்க்டாக்ஸ் மேடையில் பேசிய போது, அவர் எப்படி இந்த நிலையை அடைந்தார் என்று நினைவுகூர்ந்தார். என் இளைய மகள் அரியா பிறந்த உடன் நான் என்னுடைய வேலையை விட வேண்டிய நிலை ஏற்பட்டது (6 மாத பேறு கால விடுப்பு முடிந்துவிட்ட நிலையில்) ஏனெனில் வேலைக்கு பயணிக்க வேண்டி இருந்தது. அதைவிட முக்கியமானது நான் என் குழந்தைக்கு ஓராண்டு பாலூட்ட வேண்டியதும் கட்டாயம். நான் சில நாட்கள் வலியை அனுபவித்தேன். “நான் பின்னடைந்து வருவதை உணர்ந்தேன், வேலையைத் தொடரும் லட்சியப்பாதை மற்றும் சொந்த குறிக்கோளுக்கும் இடையே இருக்கும் விருப்பத் தேர்வு பற்றி பலரும் பேசிய தருணம் எனக்கும் ஏற்பட்டதை நினைத்து வியந்தேன்”.

கிருத்திகா ரெட்டி
கிருத்திகா ரெட்டி
ஆனால் இந்த பின்னடைவு, தனக்கு புதிய சிந்தனைகளை உருவாக்கியதாகக் கூறுகிறார் அவர், “என்னால் இரண்டையும் செய்ய முடியும் என்பதை நான் உணர்ந்தேன்”.

வேலைக்காக பயணிக்கும் போது நான் என் குழந்தையை என்னுடன் எடுத்துச் சென்றேன். என் சக பணியாளர்கள் ஒரு நல்ல குழுந்தைகள் காப்பகத்தை தேர்வு செய்து உதவினார்கள். சந்திப்புகளுக்கு இடையில் தன் குழந்தைக்கு பாலூட்டவும் அவர் நேரம் ஒதுக்கினார். ‘அல்லது’ என்ற எல்லைக் கோட்டை உதறிவிட கற்றுக் கொண்ட அவர், ‘மற்றும்’ என்ற பாதையை கண்டுபிடித்தார்.

கிருத்திகா இந்த தத்துவத்தை தன் வாழ்வின் மற்ற நேரங்களிலும் கூட செயல்படுத்துகிறார். அவருடைய நெருக்கடியான அட்டவணையில், சமூகப் பணி செய்ய அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. “ஆனால் நாங்கள் தன்னார்வலர்களாக இருப்பதற்கான வழியை கண்டுபிடித்தோம், என் குழந்தைகள் எனக்கு சூப் தயாரிக்க உதவுவார்கள், ஆங்கிலத்தை இரண்டாம் மொழிப்பாடமாக கற்றுக் கொண்டோம், செடிகள் வளர்ப்பு உள்ளிட்ட பலவற்றை செய்தோம்”.

வளர்ச்சிக்கான ஊடுருவல்

கிருத்திகாவின் புதிய கருத்தியல் சிறந்த பெற்றோராக இருக்கவும் உதவுகிறது. “வாட்ஸ் அப்பில் அம்மாக்களுக்காக ஒரு குழு இருக்கும் போது ஏன் பெற்றோர்களுக்காக ஒரு வாட்ஸ் அப் குழு இருக்கக் கூடாது? பெற்றோர்களுக்கான ஒரு வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்த நான் பலருடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினேன். என் கணவர் எப்போதுமே எனக்கு 50/50 பார்ட்னராக இருப்பார், அதற்கு மேல் இல்லை” என்கிறார் அவர்.

கற்றவை, கல்லாதவை மற்றும் வேறு துறை சார்ந்த கற்றலுக்கான சுழற்சியில் மாற்றங்கள் இருப்பதை கிருத்திகா உணர்ந்தார். 

“மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், மாற்றம் நல்லது. உத்வேகத்தை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும், அதில் சில எதிர்பார்த்தவையும் சில எதிர்பார்க்காதவையும் இருக்கும்”.

இவருடைய வாழ்நாள் முழுவதுக்குமான கற்றல் கலாச்சாரம், வகுப்பறைகளுக்கு அல்லது நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததா? "ஃபேஸ்புக்கில் நாங்கள் ஹேக்கிங் கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம். நாங்கள் சர்வதேச அளவில் ஹேக் அமர்வுகள் வைத்துள்ளோம் இதனால் உண்மையில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது” என்கிறார் அவர். வகுப்பறைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும், அதே போன்று மாணவர்கள் கேள்வி கேட்கவும், துறுவியறியவும் அனுமதிக்க வேண்டும்.

என்னுடைய எம்சி2 (உணர்ச்சிவசமான அறிவாற்றல்/விளைவுகள்) என் குழந்தைகளிடம் இருந்து வந்தது, என்கிறார் அவர். அவர்களிடம் இருந்தே வளர்ச்சிக்கான ஊடுருவலை கற்றுக் கொண்டு தன் வாழ்க்கைக்கான வெற்றிப் பாதையை அமைத்துள்ளார் கிருத்திகா.

Stories by Gajalakshmi Mahalingam