காற்று மாசை கட்டுபடுத்த செயற்கைக் கோள் உருவாக்கிய 17 வயது திருச்சி மாணவி!

1

லட்சியம் உடையோருக்கு வானமே எல்லை என்பதை நிரூபித்துக்காட்டி உள்ளார் திருச்சியை சேர்ந்த 17 வயது மாணவி வில்லட் ஓவியா.

தற்பொழுது பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து முடிவுக்காக காத்திருக்கும் ஓவியா, வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களை கண்டறியும் செயற்கை கோளை கண்டுபிடித்துள்ளார். அந்த செயற்ககோளுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் கடந்த வருடம் தற்கொலை செய்துக்கொண்ட அனிதாவின் பெயரைச் சூட்டியுள்ளார்.

அனிதா செயற்கை கோள்
அனிதா செயற்கை கோள்

உலகிலயே மிகச் சிறிய செயற்கைகோள் இது, அதாவது 500 மில்லி கிராம் மட்டுமே. இந்த செயற்கைக் கோள் வரும் மே 6ஆம் தேதி மெக்சிகோவில் இருந்து செலுத்தப்பட உள்ளது. இது வளிமண்டலத்தில் காற்று மாசு மற்றும் புவி வெப்பம் அடைதலின் அளவை கண்டறியும். இதன் மூலம் உலக வெப்பமயமாதலை நம்மால் முடிந்த அளவு குறைக்க முடியும்.

“காற்று மாசு படுதலை பற்றி ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த எண்ணமும், மின் பொறியியல் மற்றும் மின்னணு மேல் இருந்த ஆர்வமும் என்னை அனிதா செயற்கைக்கோளை உருவாக்க தூண்டியது,”

என்கிறார் வில்லட் ஓவியா டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்.

அக்னிஷ்வர் ஜெயப்ரகாஷ்
அக்னிஷ்வர் ஜெயப்ரகாஷ்

ஒரு அறிவியல் விழாவின்போது நீர்ப்பாசன முறை பற்றிய ஓர் கண்டிபிடிப்பை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல கலாம் முன்னே வழங்கியுள்ளார். அப்பொழுது இருந்து சுற்றுச் சூழலை பாதுக்காக்கும் ஆர்வம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறார் ஓவியா.

தற்பொழுது நீட் தேர்வுக்காக தயாராகி வரும் ஓவியா மூன்று வருடத்திற்கு முன் துவங்கப்பட்ட வளர்ந்து வரும் விஞ்ஞானிகளுக்கான டிவி நிகழ்ச்சி ’ஏழாம் அறிவு’-ல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலமே இந்த செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார் ஓவியா.

மூன்று வருடத்திற்கு பின் இன்று விண்வெளியை தொடத் தயாராக உள்ளது இவரது கண்டுபுடிப்பு. இந்த கண்டுபிடிப்பு இக்னைட்-இந்தியா மற்றும் அக்னி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் ’ஏழாம் அறிவு’ நிகழ்ச்சியின் முதுகெலும்பான அக்னிஷ்வர் ஜெயப்ரகாஷ் ஸ்பான்சர் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸின் கீழ் பணிப்புரிந்து அவர்களின் உதவியோடு வடிவமைப்பு, கொள்முதல் கூறுகள், உள்கட்டமைத்தல் மற்றும் சேட்டிலைட்டிற்கான நெறிமுறைகளின் ஊட்டங்களை தயாரித்துள்ளார்.

“இந்த செயற்கைக் கோளில் வெப்பநிலை, அழுத்தம், காற்று தரம் மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட வாயுக்களின் செறிவு போன்ற பல்வேறு அளவுருக்கள் அளவிடக்கூடிய சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது,” என தெரிவிக்கிறார் ஓவியா.

இத்துடன் திசைகாட்டி மற்றும் கோண வேகத்தை அளவிடுவதற்கான நிலைப்படுத்தல், குரோமீட்டர் மற்றும் ஜி பி எஸ், உயரத்தை அளவிடுவதற்கு காற்றழுத்தமானி மற்றும் இயக்கத்தை ஒளிபரப்ப ஒரு கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் கண்டறியப்படும் தரவுகள் செயற்கைக்கோள் மூலம் மெக்ஸிகோவில் இருக்கும் Aztra ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஹீலியம் பலூனில் செலுத்தி அனுப்படும் இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்கு சென்ற உடன் வெடித்து செயற்கைகோளை வெளியில் விடும். பாராசூட் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் 8,000 மீட்டர் தாண்டி கடல் மட்டத்தை அடைந்த பின் செயற்கோள் மீட்டு எடுக்கப்படும்.

"காற்று மாசுபாட்டை சமாளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு இந்தத் தரவுகள் பயன்படும்,” என குறிப்பிடுகிறார் ஓவியா.

இவரது கண்டுபிடிப்பிற்காக ஓவியாவை அழைத்து நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டயன். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin