ஒருமித்த கருத்து அடிப்படையில் ஜி.எஸ்.டி. குழு பரிந்துரைகளை இறுதி செய்து விட்டது: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர தகவல்! 

0

2017-18க்கான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, தீவிர ஆலோசனைகள்  மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி செய்து விட்டதாகத் தெரிவித்தார். 

தனது பங்களிப்பாக அரசு ஜி.எஸ்.டி. கவுன்சில அமைத்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் செயல்படுத்தி உள்ளது என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. விகித கட்டமைப்பின் பரந்த வரையறைகள், தொகுப்பு திட்டத்துக்கான உச்சவரம்பு விலக்கு மற்றும் அளவுருக்கள், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலின் போது மாநிலங்களுக்கு இழப்பீட்டுக்கான விவரங்கள், ஜி.எஸ்.டி,. ஐ.ஜி.எஸ்.டி. மற்றும் இழப்பீட்டு சட்டத்திற்கான வரைவு மாதிரி ஆய்வு, மற்றும் ஜிஎஸ்டிக்கான நிர்வாக நுணுக்கம் உள்ளிட்ட ஜி.எஸ்.டி. தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 9 கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. 

ஜி.எஸ்.டி.க்கான தகவல் வொழில்நுட்ப முறை தயாரிக்கப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தப் புதிய வரி முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2017 ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினரைச் சென்றடையும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். அரசியலமைப்பு (நூற்றியொன்றாவது திருத்த) சட்டம் 2016 நிறைவேற்றப்பட்ட பின்னர், சுதந்திரத்திற்கு பிந்தைய பெரிய வரிச் சீர்திருத்தமாக உள்ள ஜி.எஸ்.டி.க்கான தயாரிப்பு பணிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலங்கள் மற்றும் சுங்க மற்றும் கலால் வரி மத்திய வாரிய அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்கள் மாதிரி ஜி.எஸ்.டி. சட்டம், விதிகள் மற்றும் இதர் விஷயங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்க பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கூட்டுறவு தத்துவத்தின் உணர்வில் எந்தச் சமரசமும் இன்றி, திட்டமிட்டபடி ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான இலக்கை எட்டுவதற்காக மத்திய சுங்கம் மற்றும் கலால வரிகள் வாரியத்தின் மூலம் அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் ஜெட்லி தெரிவித்தார். ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்படுவதால், வரி வலை பரவலாக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதன் மூலம் கூடுதல் வரி கிடைக்கும் என்றும் அவர் கூறினார். சுங்கம் மற்றும் சேவை வரிகள் விரைவில் ஜி.எஸ்.டி. மூலம் மாற்றி அமைக்கப்பட இருப்பதால், இந்த பட்ஜெட்டில் அவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றூம் நிதிஅமைச்சர் ஜெட்லி தெரிவித்தார்.