50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்! 

0

இந்தியா மற்றும் யு.கே சார்ந்த புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட நிதியான ’பாண்டக்’ (Pontaq), யு.கே இன்னவேஷன் பண்ட் 3 (UIIF 3) எனும் புதிய நிதியை துவக்கியுள்ளது. யு.கேவை மையமாகக் கொண்டு செயல்படக்கூடிய 50 மில்லியன் யூரோ கொண்ட இந்த நிதியை, லண்டனில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் துவக்கி வைத்தார்.

பாண்டக் இந்தியா நிதி துவக்க விழா 
பாண்டக் இந்தியா நிதி துவக்க விழா 

நிகழ்ச்சியில் பேசிய ரவி சங்கர் பிரசாத், 

“ டிஜிட்டல் வளர்ச்சியிம் அடுத்த யுகத்திற்கான பாய்ச்சல் மற்றும், இண்டெர்நெட் ஆப் திங்ஸ், பிக் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற வளரும் தொழில்நுப்டங்களின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் இந்தியா இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவில் இண்டெர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் இணைக்கப்பட்ட பொருட்கள் நுட்பம் கொண்ட சாதனங்கள் 2020 ல் 2.7 பில்லியனாக அதிகரிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாண்டக்கின் புதிய நிதியானது, யு.கேவை மையமாகக் கொண்ட வர்த்தக வாய்ப்புகளில் முதலீடு செய்யும்., நிதி நுட்பம் ( ஃபின் டெக்), ஸ்மார்ட் சிட்டிஸ் டெக் மற்றும் வளரும் நுட்பங்களான ஐ.ஓ.டி, விர்ச்சுவல் ரியாலிட்ட், ஆக்மெண்டட் ரியாலிட்டி, பிளாக்செயின் உள்ளிட்ட நுட்பங்களை மையமாக கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும். இந்தியா இதன் முதன்மை சந்தையாக இருக்கும். யு.கே மற்றும் மேற்கத்திய சந்தையில் விரிவாக்கம் செய்ய விரும்பும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்தும்.

”இந்தியா மற்றும் யு.கே இடையே வலுவான தொழில்நுட்ப பரிவர்த்தை நிகழ இந்த நிதி வழி செய்யும். செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், பிளாக்செயின், டேட்டா அனலிடிக்ஸ் போன்ற நுட்பங்களின் பயன்பாடு காரணமாக தொழில்துறை 4.0 இந்தியா மற்றும் யு.கே இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. பிரெக்ஸிட் சிக்கலுக்கு பிறகு சரியான நேரத்தில் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது,” என பாண்டக் தலைவர் டாக்டர்.மோகன் கவுல் கூறினார்.

“முதல் சுற்று நிதியான 50 மில்லியன் யூரோ கொண்ட இந்த நிதி, இந்தியா மற்றும் யு.கே இடையே வலுவான தொழில்நுட்ப பரிமாற்றம் ஏற்பட வழி செய்து, இரண்டு பொருளாதாரங்களுக்கும் உதவும்,” என்று பாண்டக் பாட்னர் பிரேம் பார்த்தசாரதி கூறினார்.

பாண்டக் நிதி, ஹரியானா மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைய்ழுத்திட்டிருப்பதுடன், யெஸ் பாங்க், ஃபிண்டெக் சர்கில், மற்றும் எஸ்.டி.பி.ஐ சென்னையில் அமைக்க உள்ள ஃபிண்டெக் சி.இ.ஒ ஆகிய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2015 முதல், பாண்டக் 9 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய, டி.ஐ.இ சென்னை (TiE Chennai ) தலைவர் வி,சங்கர், 

"நாளைய தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட ஸ்டார்ட் அப்கள் உருவாக்கத்தில் பாண்டக்கின் புதிய நிதி ஒரு மைல்கல்லாகும். இந்திய திறமைகள் யு.கே சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் இந்த நிதி, எஸ்.ஏ.ஏ.எஸ் ஸ்டார்ட் அப்கள் வெற்றி பெற்றது போல, சிறந்த ஸ்டார்ட் அப்கள் விரைவாக உலக தரமான ஸ்டார்ட் அப்களாக உருவாக உதவும்,’ என்று குறிப்பிடார்.

ஃபின்டெக் செண்டர் ஆப் எக்சலென்ஸ்-ஐ சென்னையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த நிதியுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் யு.கேவில் உள்ள அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்களை நிதி கொண்டுள்ளது. ஃபின்டெக் சர்கில் சி.இ.ஓ சுசானே சிஷ்டி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் முன்னாள் குலோபல் சி.எம்.ஓ சஞ்சீப் சவுத்ரி, நோக்கியா அயர்லாந்து முன்னாள்தலைவர் சைமன் பிரவுன், ஆலோசகர் சர்ஜன் பேராசிரியர். ஜி.கே.மாகாதேவ், டி.இ.ஐ மற்றும் தொழில்முனைவோர் சந்து நாயர் ஆகியோர் இதில் அடக்கம்.

பாண்டக்

லண்டனை தலைமையகமாகக் கொண்ட பாண்டக், தொழில்நுட்பத்தில் யு.கே- இந்தியா சார்ந்த புதுமை முயற்சிகளில் முதலீடு செய்து வருகிறது. ஃபிண்டெக், ஸ்மார்ட் சிட்டி, வளரும் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் கவனம் செலுத்தி வருகிறது. www.pontaq.vc

டி.ஐ.இ சென்னை (TiE Chennai) சென்னை மற்றும் தமிழகத்தில் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும். மாநிலத்தின் மிகப்பெரிய தொழில்முனைவு வலைப்பின்னல் நிகழ்ச்சியான TiECON Chennai நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

தமிழில்; சைபர்சிம்மன்