ஊரோடு உடற்பயிற்சி செய்ய, இரும்பு மனிதனாக: "ஃபிட்சோ"

0

ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, இவை இரண்டும் தான், குறைந்த செலவில் நாம் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள். நல்ல காலணி, பாதுகாப்பு கவசங்கள், ஒரு சைக்கிள், இவைதான் இதற்குத் தேவை. ஆனால் ஒருவர் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யாது போவதற்கு காரணம் அவர்களுக்கான உந்துதல் இல்லை என்பதே. நம்மை போன்றவர்களை, தீர்மானமான குறிக்கோள் கொண்டவர்கள் நம் பக்கத்தில் பெறுவது என்பது, கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும். எனவே அப்படி ஒரு சூழலை உருவாக்கி, தேவைப்பட்டவர்களுக்கு வல்லுனர்களின் அறிவுரை அளிக்க உருவானதே "ஃபிட்சோ" (Fitso).

ஃபிட்நஸ் சோசியல் என்பதன் சுருக்கமே "பிட்சோ". இது தங்களை போன்று சைக்கிள் ஓட்டுவோர், ஓட்டப்பயிற்சி செய்வோர், உடற்பயிற்சி செய்வோர் என தங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களை கண்டறிய உதவுகிறது. இதன் நோக்கம்; குழு நடவடிக்கைகள் மூலம் ஆரோகியமான ஒரு வாழ்க்கை முறையை முன்வைப்பதே. இந்த செயலி மூலம், பயனாளர்கள் தங்கள் பகுதியில் நிகழும் குழு நடவடிக்கைகள் பற்றி அறிந்து, அதில் பங்கேற்கவும் முடியும். அதற்கு "ஜாயின்" என்ற பொத்தானை தட்டினால் போதும்.

தங்களை போன்று உடற்பயிற்சி செய்வோரை கண்டறிவது மட்டுமின்றி, உடற்பயிற்சி கற்றுக்கொடுப்போர், அவர்கள் தகுதி, சாதனைகள், அவர்கள் கட்டணம், யோகா கற்றுக்கொடுப்போர், உணவு முறை பயிற்சியாளர், மசாஜ் அளிப்போர் என அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் சேவைகளை பெற அவர்களிடம் நேரநியமனம் பெற இயலும்.

features
features

நடவடிக்கைகள்

பயனாளர், இந்த செயலி மூலம், சைக்கிள் தொடர்பான குழு நடவடிக்கைகள் பற்றி அறிவதோடு, அவற்றின் நேரம், இடம், கடின அளவு என்ன என அனைத்தையும் அறிந்து, பின் அவற்றில் பங்கு பெறலாம். இதற்கு ஜாயின் பொத்தான் உள்ளது.

நிகழ்வுகள்

இதே போன்று தங்கள் நகரத்தில் வரவிருக்கும் உடற்பயிற்சி தொடர்பான நிகழ்வுகள், நடக்கும் இடம், அதற்கான கட்டணம், எவ்வகை நிகழ்வு என அனைத்தையும் அறிய இயலும்.

பயிற்சியாளர்

மேலும் இந்த செயலி மூலம், பயிற்சியாளர்களை தொடர்பு கொண்டு, நமக்கென பிரத்தியேக வகுப்புகள் பெற இயலும். மாரத்தான், இரும்பு மனிதன், ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது எனஅனைத்து பயிற்சிகளும் பெற இயலும்.

செயலியின் உள் பதிவுகள்

இந்த செயலியில், உடற்பயிற்சி பற்றி, உணவு முறை பற்றி, ஓட்டப்பயிற்சி பற்றி அத்துறை வல்லுனர்கள் எழுதும் பதிவுகள் இடம்பெறுகின்றன. அதை படிப்பதோடு, சந்தேகங்களை, பதிவின் ஆசிரியரிடம், குறுங்தகவல் மூலம் கேட்கவும் இயலும்.

கதை இதுவரை

"ஃபிட்சோ"வின் நிறுவனர்கள் குழுவில், சௌரப் அகர்வால், நமன் ஷர்மா, மற்றும் ராகுல் சுரேகா உள்ளனர். இவர்கள் மூவரும் ஐஐடி டெல்லியில் பயின்றவர்கள். நமன், "சோமேடோ" நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், தற்போது இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை தலைவராக உள்ளார். ராகுல், "எப்மீ" மற்றும் "அர்பன்க்ளாப்" நிறுவனங்களில் பணிபுரிந்த பின்பு, தற்போது இந்நிறுவனத்தின் சந்தைபடுத்துதல் துறை தலைவராக உள்ளார். சௌரப், இதற்கு முன்பு "ஃபிளிப்கார்ட்" நிறுவனத்தில் வணிக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து, பின், சாகச விளையாட்டுகளில் தனக்கிருந்த ஆர்வத்தை பின்தொடர விரும்பி அப்பணியை உதறினார்.

பின் 2014ஆம் ஆண்டு முழு இரும்பு மனிதன் நிகழ்வையும் ஆகஸ்ட் மாதம் முடித்தார், (இரும்பு மனிதன் பற்றி மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும்) அடுத்ததாக எவரெஸ்ட் மீது ஏற ஏப்ரல் 2015 முடிவெடுத்தார். ஆனால் நேபால் பூகம்பம் காரணமாக, அது இயலாது போனது. பின் "லா அல்ட்ரா"என்ற 111 கிலோமீட்டர், ஓட்டத்தை, ஓடி முடித்தார். அது உலகின் மிகக்கடினமான, அல்ட்ரா மாரத்தானாகும்.

இதற்கு பின், இது பற்றிய தனது அனுபவத்தை மற்றவர்களோடு பகிர அவர் நினைத்தார். தற்போது வணிக வளர்ச்சி மற்றும் ஃபிட்சோ வின் நிதித்துறையை கவனித்து கொள்கிறார்.

FITSO team
FITSO team

இவர்கள் அனைவரும் இணைந்து முதலில் "ஜோகோ" என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதன் மூலம் குழு நிகழ்வுகளை ஊக்குவிக்க முடிவுசெய்தனர். ஆனால் சிறிது வாரங்களுக்கு பிறகு, ஜோகோ என்பதை "ஃபிட்சோ" என பெயர் மாற்றம் செய்தனர்.

ஜோகோ என்பது போர்சுகிசியா வார்த்தை. அதற்கு விளையாட்டு என்று அர்த்தம். எனவே கூகிள் ப்ளே ஸ்டோர், எங்கள் செயலியை ஒரு வகையென கருதி, அதனடியில் அனைத்து கைபேசி விளையாட்டு செயலிகளை வரிசைப்படுத்தியது. இதன் காரணமாக, எங்கள் செயலி வாடிக்கையாளரை சென்றடைவது கடினமாக அமைந்தது. அதனால் ஜோகோ என்ற பெயரை "ஃபிட்சோ" என மாற்றினோம்.

மூன்று நிறுவனர்களை தாண்டி, அஜிதேஷ் அபிஷேக், மற்றும் கௌஷல் மிஷ்ரா என இருவர் இவர்கள் அணியில் உள்ளனர். தற்போது பகுப்பாய்வை கவனிக்கும் அஜிதேஷ் இதற்கு முன்பு கேஎம்பிஜி யில், ஆலோசகராக இருந்தார். கௌஷல், தற்போது செயலியின் வடிவமைப்பை கவனித்துக்கொள்கிறார்.

தற்போது ஃபிட்சோ, வெவ்வேறு வழிகளில், வரவு பெற வழிமுறை வைத்துள்ளனர். பயிற்சியாளர்கள், தங்களுக்கு வகுப்புகள் பெறவும், அவர்களை பற்றி மற்றவர்கள் அறியவும் இவர்கள் ஒரு தளமாக இயங்குகின்றனர். தற்போது இலவசமாக இருந்தாலும், விரைவில், தங்கள் மூலம் பயிற்சியாளர் பெறும் பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலிக்க உள்ளனர். மேலும் தங்கள் செயலியில் மற்றவர் விளம்பரம் செய்து கொள்ளவும் கட்டணம் வசூலிக்க உள்ளனர்.

துறையின் எதிர்காலம் :

தற்போது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான துறை நன்கு வளர்ச்சி கண்டு வருகின்றது. தற்போது அவற்றை பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளது. தங்கள் உடற்பயிற்சியினை பற்றி தெரிந்து கொள்ளவும், அளவிடவும் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. "மை ஃபிட்நெஸ் பால்" மற்றும் "ஹெல்திபை மீ" ஆகிய இரண்டும் நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை அறிய உதவும் பிரபல செயலிகள் ஆகும். ஓட்டப்பயிற்சி பக்கம் வந்தால், கவ்ரவ் ஜஸ்வால் மற்றும் குல் பனாக்கின் "ஃபர்ஸ்ட் ரன்" செயலி, மாரத்தான் ஓடுபவர்கள் பயிற்சி செய்ய உதவுகிறது.

தற்போது வரை தங்கள் சேமிப்பில் இருந்து செலவு செய்து ஃபிட்சோவில் முதலீடு செய்த நிறுவனர்கள், இதற்கு அடுத்ததாக, வெளியில் இருந்து முதலீடு திரட்ட முடிவு செய்துள்ளனர். மேலும் இதற்கு அடுத்த கட்ட மேம்பாடாக செயலியில் கட்டணம் வசூலிப்பதற்கான வாய்ப்பையும் இணைக்க உள்ளனர். இதனால் பயிற்சியாளர்கள் மற்றும் செயலி பயனாளர்கள் பயன் பெறுவர். எதிர்கால திட்டமாக சௌரப் கூறுவது, "தற்போது சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓட்டப்பயிற்சி இரண்டை மட்டும் குழு நடவடிக்கைகளில் வைத்துள்ளோம். இனி வரும் காலங்களில், அனைத்து விதமான பயிற்சிகளையும் இணைக்க உள்ளோம்" என்கிறார்.

யுவர் ஸ்டோரியின் நிலைப்பாடு:

ஃபிட்சோ நன்கு சிந்தித்து , வடிவமைக்கப்பட்டு, உள்ளடக்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு செயலி ஆகும். அதன் பெயருக்கு ஏற்ப இது உடற்பயிற்சி செய்வோரை அத்துறை வல்லுனர்களோடு இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. மேலும் செயலியின் உள்ளே உள்ள "லீடர் போர்டு" என்ற வசதி மற்றவரோடு போட்டியிடவும், செயலியை மீண்டும் மீண்டும் உபயோகிக்கவும் தூண்டுகிறது.

மேலும் இந்த செயலி கடின அளவுகளுக்கு ஏற்ப, குழு நடவடிக்கைகளை வகைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் எவ்விதமான குழு நடவடிக்கைக்கு தான் செல்லவிருக்கிறோம் என்பதை அறிய இயலும். அத்தோடு செயலியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு வசதியை இங்கு பரிந்துரைத்தது யுவர் ஸ்டோரி.

  • அது பயனாளர் உபயோகத்திற்கு ஏற்ப அவரது குழு நடவடிக்கைக்கு ஏற்ப காலணிகள் முதல், ஊட்டசத்து பொருட்கள் வரை அவர்களுக்கு ஃபிட்சோ பரிந்துரை செய்வதன் மூலம் வருமானமும் ஈட்ட இயலும். இதை பரிசீலிப்பதாக சௌரப் கூறியுள்ளார்.

இந்த செயலியின் பின் நன்கு அனுபவம் வாய்ந்த குழு உள்ளதால், இதன் வளர்ச்சியை விரைவில் நாம் கவனிக்க இயலும்.

பிட்சோ வலைத்தளம், செயலி

ஆக்கம் : Harshith Mallya

தமிழில் : Gowtham Dhavamani