ஒரு சீரிய பைக்கரும் ஒரு பொறியாளரும் கைகோர்த்து தொடங்கியுள்ள சாலை பாதுகாப்பு தளம்!

ஒரு சீரிய பைக்கரும் ஒரு பொறியாளரும் கைகோர்த்து தொடங்கும் சனத்தொகை சாதனம் சாலை பாதுகாப்பாக !!

0

ஜெயந்த் ஜெகதீஷ், துணை செயலாளர் (தொழில் மேம்பாடு) எல்ஸீஸ் இண்டெலிஜன்ட் பிரைவேட் லிமிடெட் பொறுத்தவரை, இந்தியாவில் தான் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இதனால், ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு நபர் உயிரிழக்கிறார். "பிரதமர் நரேந்திர மோடி, தன் தேசத்திற்காக வானொலியில் உரை ஆற்றியபோது, சாலை அவசரப் பாதுகாப்பிற்காக ஒரு தேசிய அவசரகால கட்டமைப்பு உருவாக்க வேண்டும்", என்று எடுத்துரைத்தார்.

கடந்த ஒன்றரை வருடமாக, ஜெயந்த் இப்பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பில் தற்செயலாக இயங்கி வருகிறார். "இந்தியர்கள் உதவிக்கு அழைக்கும் விதத்திலும், சாலை விபத்து அவசரக் காலத்தில் இந்தியர்கள் எடுக்கும் உடனடி நடவடிக்கையிலும் ஒரு புரட்சி ஏற்படுத்துவதே எங்களுடைய நோக்கம்," என்று கூறுகிறார்.

சனத்தொகை மூலம் சாலை பாதுகாப்பு

"ரக்ஷா சேஃபட்ரைவ்" (Raksha SafeDrive) என்ற தயாரிப்பின் மூலம், எல்ஸிஸ் சனத்தொகை தகவல் தொழில்நுட்பம் மற்றும் க்ளவுட் நுட்பப் பொருட்களின் முலம், ஒரு ஒருங்கிணைந்த சாலை விபத்து பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை தளம் உருவாக்குவதில் திடமாக இருக்கிறது. இந்த சாதனத்தின் ஆற்றல் ஏராளம்; தானியங்கி விபத்து கண்டறிதல், இரண்டு-வழி அழைப்பு இணைப்பு, ஜி.பி.எஸ். கண்காணிப்பு, இயந்திரம் சுகாதார கண்காணிப்பு மற்றும் ஸ்மார்ட் பீதி பொத்தான் போன்ற வசதிகள் உள்ளது.

தொடக்கம் மற்றும் அடிப்படை அணி 

தொழில்நுட்பத்தின் மூலம் சாலை பாதுகாப்பை சமாளிக்கும் எண்ணம், பிரசாத் பிள்ளைக்கு 2013- ஆம் ஆண்டில் சாலை விபத்தலிருந்து மயிரிழையில் தப்பிக்கும் போது பிறந்தது. "பெரும்பாலான இந்திய ஒட்டுனர்கள், சாலைகளில் இது போன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு வாரமும் சந்திக்கின்றனர். இந்நேரத்தில் மற்ற பயணிகளை சபித்து விட்டு செல்கிறோம். விபத்து தயார் நிலை மற்றும் மேலாண்மை நம் நாட்டில் அமைப்பில்லாமல் இல்லை. ஆனால், எங்களுடைய நோக்கந்தின்படி தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் சாலை பாதுகாப்புக்காக உபயோகிக்க வேண்டும் என்பதே,"என்று பிரசாத் சொல்கிறார்.

ஜெயந்த் மற்றும் பிரசாத்

மற்றொரு புறம், ஜெயந்த் ஒரு சீரிய ஒட்டுனர். மேலும், தனி மோட்டார் சைக்கிளில், 5000 - கி.மீ. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமாரி வரை பயணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும், ஒரு பொதுவான நண்பர் மூலம் சந்திக்கும் போது சாலை பாதுகாப்பு தங்களது பொதுவான உணர்வாக இருந்ததால் இணைந்தார்கள். "சுற்றுலா மற்றும் ஆய்வு மகிழ்ச்சி ஊட்டுகிறது, சாலை வழி பயணங்கள், மக்களை உற்சாகப்படுத்துகிறது. ஆனால், இதை அதிகமாக மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. இந்த ரக்ஷா சேஃப்ட்ரைவ் இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது", என்று மேலும் அவர் கூறுகிறார்.

ரக்ஷா சேஃப்ட்ரைவ் செய்வது என்ன?

ரக்ஷா சேஃப்ட்ரைவ் என்பது தானாக விபத்தைக் கண்டிபிடித்து. அவசர பாதுகாப்பு உதவியை ஏற்பாடு செய்யும் திறன் கொண்டது என்று ஜெயந்த் கூறினார். பல்வேறு தொழில் நுட்பங்கள் வைத்து, ஒரு அறிவுற்ற சாலை விபத்து மேலாண்மை தளத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், எச்சரிக்கை கொடுப்பதிலும், ஒட்டுனரின் நடத்தையை கண்காணித்து விபத்துக்கான இயல்புகளை கண்டறியவும் முடியும்.

ரக்ஷா சேஃப்ட்ரைவ் சந்தாவின் மூலம் வருவாயை அமைத்துள்ளது. ஒரு நேர சாதனம் செலவு மற்றும் விபத்து கண்காணிப்பு மற்றும் மக்கள் அவசரப் பாதுகாப்பான மாதாந்திர/வருடாந்திர கட்டணம் தான் இவர்களுக்கு வருவாயை ஈட்டித்தருகிறது.

சவால்கள் மற்றும் எதிர்காலம்

ரக்ஷா சேஃப்ட்ரைவ் என்பது சனத்தொகை, தொலைத் தொடப்பு மற்றும் க்ளவுட் தொழில்நுட்பங்களின் மூலம் ஒரு சிக்கலான மின்னணு தயாரிப்பாக உருவாக்கப்பட்டது. மென்பொருள் தயாரிப்பு போல் இல்லாமல், தொடர் சோதனையும், ஆக்கமும் இந்த தயாரிப்புக்கு செய்கிறோம். இதில் தொடர்ச்சியாக ஆளும், நேரமும் செலவு செய்ய வேண்டும். இதை தயாரிப்பதற்கு எங்கள் அணி இரண்டு வருடம் செலவழித்திருகிறது.

"தற்போது, நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிருவனரின் முதலீடு மூலம் நடத்தி கொண்டு வருகிறோம். சந்தை திட்டங்களைச் செயல்படுத்த பல்வேறு முதலீடு வகைகளைப் பரிசோத்து வருகிறோம்", என்று ஜெயந்த் கூறுகிறார்.

ஒரு பயனுள்ள தொழில்நுட்பம் அமைப்பதன் மூலம், எங்கள் அணி இந்தியாவில் சிறந்த சாலை மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு தளத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறோம். சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறைப்பு போன்றவற்றை இந்தியாவில் செயல்படுத்த, ஒரு சாலை பாதுகாப்பு கூட்டமைப்பு அமைத்திருக்கிறோம். சாலை பாதுகாப்பாக வாகன உற்பத்தியாளர்கள், அவசர பராமரிப்பு அமைப்புகள், சாலையோர உதவி வழங்குநர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முன்வந்து எங்களோடு இணைகின்றன.

" ரக்ஷா சேஃப்ட்ரைவ் என்பதை தனிப்பட்ட வாடிக்கையாளராகவும், ஆபரேட்டர்களாவும் எங்களது சேவையை அணுகலாம். www.raksha.me என்னும் இணையதளத்தில் எங்கள் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்", என்று ஜெயந்த் கூறினார்.