டிஜிட்டலில் வடிவில் செய்தித் தாள்களை மக்களிடம் கொண்டு செல்லும் 20 வயது ’PaperBoy’

1

தொழில்நுட்பம் புரட்சி செய்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில், இணையம் மூலம் குறைந்த செலவில் அல்லது எந்த செலவுமின்றி பலவற்றை அணுக முடிகிறது. இதில் முக்கியமாக நாட்டுநடப்பை அறிந்து கொள்ளுவது. இணையத்தளம் மூலம் எங்கிருந்தும் நம்மால் செய்திகளை படிக்கமுடிகிறது. இதை இன்னும் சுலபமாக்க அனைத்து செய்திதாள்கள் மற்றும் பத்திரிக்கைகளை ஒரே இடத்தில் அளிக்கிறது ’PaperBoy’ ஆப். மேலும் இந்த ஆப் ஆன்லைன் பதிப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தடங்கல் இன்றி படிக்க உதவும்.

ஜோன்னா வெங்கட கார்த்திக் ராஜா - நிறுவுனர்
ஜோன்னா வெங்கட கார்த்திக் ராஜா - நிறுவுனர்

PaperBoy தோற்றத்திற்கான காரணம்

இருவது வயதான ஜோன்னா வெங்கட கார்த்திக் ராஜாவிற்கு 15 மாதம் முன்புதான் இந்த யோசனை புலப்பட்டது. அவருக்கு படிப்பது எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பயணம் செய்வது பிடிக்கும். அனால் பயணத்தின் போது அவரால் செய்தித்தாள்களை படிக்க முடிவதில்லை. பயணத்தில் இருக்கும் நேரத்தில் படிக்க பயன்படுத்தவே இந்த ஆப்-ஐ வடிவமைத்துள்ளார்.

“தற்போது இருக்கும் சூழலில் பயணம் செய்யும் நேரம் மட்டுமே செய்தித்தாள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. என் நண்பர்கள் பள்ளி கல்லூரி செல்லும் அவசரத்தில் செய்தித்தாள் படிப்பது இல்லை. இதனால் நாட்டு நடப்பு ஏதும் அவர்களுக்கு தெரிவது இல்லை. எனவே டிஜிட்டல் பதிப்பில் இருந்தால் படிப்பீர்களா என்று கேட்டேன். அவர்கள் ஆர்வம் காட்ட, அதன் பின் தோன்றியதே இந்த PaperBoy என தன் தூண்டுதலை பற்றி கூறுகிறார் கார்த்திக் ராஜா.

செய்தித்தாள்களை டிஜிட்டல் ஆக்குவது

பெங்களூரின் CMS- ஜெயின் பல்கலைக்கழத்தில் இறுதி ஆண்டு படித்த கார்த்திக்கிற்கு படிப்பு முடித்தவுடன் ஏதோ ஒரு வேலையில் அமர்வது சாதாரணமான ஒன்றாக இருந்தது. தொழில்முனைவோராகும் எண்ணம் எந்த வயதிலும் வரலாம். தன் தந்தையை பார்த்து அவருக்கும் தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

“ஆனால் என்னுடைய மிகப் பெரிய பயமாக இருந்தது என்னை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்பதுதான்,”

என நினைவு கூறுகிறார் கார்த்திக். ஆனால் அந்த பயம் அவரை முன்னேறுவதிலிருந்து தடுக்கவில்லை. டிஜிட்டல் மீடியாவை தாண்டி அச்சு ஊடகங்களை விரும்பும் மக்களை தன் இலக்காகக் கொண்டு ஆப் ஒன்றை உருவாக்க தொடங்கினார் கார்த்திக். தான் உருவாக்கியுள்ள ஆப் மற்றும் வலைத்தளம் உலகில் எந்த மூலையில் இருந்துக்கொண்டும் எல்லா வகையான செய்தித்தாள்களையும் பத்திரிகைகளையும் அனுகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாப் அப் விளம்பரங்கள் அல்லது குறுக்கீடுகள் ஏதும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவசமாக தினசரி தாளை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளலாம். தற்போது ஈ-பேப்பருக்கான கட்டணம் PaperBoy-க்கு இல்லை.

அனைவருக்கும் ஏற்ற ஒன்று

தற்போது பிராந்திய செய்தித்தாள்கள் மீதே PaperBoy கவனம் செலுத்துகிறது. பிராந்திய மொழி செய்தித்தாள்கள் மீது ஆர்வம் கொண்டவர்களும், ஏற்கனவே ஈ-பேப்பர் படிக்கும் நெட்டிசன்களே தங்கள் இலக்கு என கூறுகிறார் கார்த்திக்.

“ஆனால் ஆப்-ஐ உருவாக்கிய பிறகு 19 வயது சிறுவன் உருவாக்கிய இந்த ஆப்-இல் ஊடகங்களை இணைக்க வைப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. 7 மாதம் வரை எந்த தாளும் எங்களுடன் இணையவில்லை. இறுதியாக எங்களுடன் இணைந்த முதல் செய்தித்தாள் Eesanje,” என்கிறார் கார்த்திக்

PaperBoy-ன் மிக பெரிய வெற்றி Reader’s Digest தாளை தங்களுடன் இணைத்தது தான். இதுவரை 300 செய்தித்தாள்கள் இவர்களுடன் இணைந்துள்ளனர். அதோடு PaperBoy குழுவும் 50 ஆக உயர்ந்துள்ளது.

ஆரம்ப எண்கள்

முதல் காலாண்டில் ஒரு மில்லியன் தினசரி பயனாளர்களைக் கொண்டு வருவதே தங்கள் இலக்காக கொண்டுள்ளுனர். தற்பொழுது அவர்கள் ஆறு லட்ச பயனாளர்களை கொண்டது மட்டும்மல்லாமல் லாபம் பார்க்கவும் தொடங்கிவிட்டனர்.

“விளம்பரத்தின் மூலம் சம்பாதிக்கிறோம். ஆனால் ஏற்கனவே கூறியது போல் விளம்பரம், படிப்பவர்களை எந்த விதத்திலும் இடையூறு செய்யாது. எல்லா அச்சு செய்திதாள்களிலும் விளம்பரம் இருப்பது போல் ஈ-பேபரிலும் செய்யலாம்,” என விளக்குகிறார் கார்த்திக்.

தற்போது தனித்துவமான ஒரு லட்ச பயனாளர்கள் எங்கள் ஆப்-ற்கு தினசரி வருகின்றனர். அவர்கள் தினமும் சராசரி எட்டு நிமிடம் எங்கள் ஆப்-ல் செலவிடுகின்றனர். ஏறக்குறைய தினமும் 11 ஆயிரம் மக்கள் PaperBoy-ஐ டவுன்லோட் செய்கின்றனர். சொந்த முதலீட்டை போட்டுள்ள கார்த்திக் தற்பொழுது எந்த முதலீட்டையும் எதிர்பார்க்க வில்லை.

“சந்தையில் இது போன்ற ஆப்-கள் இருந்தாலும் PaperBoy ஒரு செய்தித்தாள் மற்றும் பத்திரிகை ஒருங்கிணைப்பாளர். இது மக்களுக்கு நிகழ்-நேர அனுபவத்தை அளிக்கும்.”

தங்கள் வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக உலகளவில் யூஏஈ, யூகே, சிங்கப்பூர், US ஆகிய நாடுகளுக்கு விரிவுப்படுத்த உள்ளனர்.

உங்கள் காலை செய்தித்தாளை வழங்கிய பிறகு...

கார்த்திக் வேலை மற்றும் கல்லூரிக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறார். மாலை வேளையில் தன் வியாபாரத்தை பற்றி தன் தந்தையுடன் கலந்துரையாடுகிறார்.

“ஞாயிற்றுக்கிழமைகளை என் குடும்பத்திற்கு மட்டுமே செலவிடுவேன் அல்லது எனக்குப் பிடித்த பறக்கும் வேலையைச் செய்வேன். நான் தற்போது மாணவர் பைலட் உரிமம் பெற்றுள்ளேன்,” என முடிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா