சரக்கு மற்றும் சேவை வரி குறித்த 7 தவறான கருத்துக்கள் பற்றிய விளக்கம்! 

0

மத்திய அரசின் வருவாய் செயலர் டாக்டர். ஹஸ்முக் ஆதியா, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) குறித்து நிலவி வரும் தவறான கருத்துகள் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) குறித்த தவறான கருத்துகள் மற்றும் உண்மைகள்.

தவறான கருத்து 1: அனைத்து இன்வாய்ஸ்களும் (விலைப்பட்டி) கணினி அல்லது இணையதளம் மூலம் உருவாக்க வேண்டும்

உண்மை 1: இன்வாய்ஸ்களை கைகளில் எழுதலாம்.

தவறான கருத்து 2: ஜி.எஸ்.டி-யின் கீழ் நான் தொழில் செய்ய எனக்கு எப்போதும் இணையதளம் வேண்டும்.

உண்மை 2: ஜி.எஸ்.டி-யில் மாத கணக்கு சமர்ப்பித்தலுக்கு மட்டுமே இணையதளம் வேண்டும்.

தவறான கருத்து 3: தொழில் செய்ய, என்னிடம் தற்காலிக அடையாள எண் மட்டுமே உள்ளது ஆனால் நிரந்தர எண்ணுக்காக காத்திருக்கிறேன்.

உண்மை 3: தற்காலிக அடையாள எண்ணே உங்களின் இறுதி ஜி.எஸ்.டி.ஐ.என் எண் ஆகும்.

தவறான கருத்து 4: என்னுடைய முந்தைய வரத்தகத்திற்கு விலக்கு உண்டு. அதனால் இப்போது தொழில் தொடங்க நான் புதிதாக பதிவு செய்யவேண்டும்.

உண்மை 4: நீங்கள் தொடர்ந்து தொழில் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

தவறான கருத்து 5 : மாதத்திற்கு மூன்று முறை கணக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

உண்மை 5: ஒரு முறை கணக்கு சமர்பித்தால் போதும். இதில் மூன்று பகுதிகள் உண்டு. முதல் பகுதியை வணிகர் சமர்ப்பிக்க வேண்டும். மீதுமுள்ள இரண்டு பகுதிகளும் கணினி தானாகவே பதிவு செய்துகொள்ளும்.

தவறான கருத்து 6: சிறு வணிகர்களும் இன்வாய்ஸ் வாரியாக கணக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

உண்மை 6: சில்லறை விற்பனை தொழிலில் உள்ளவர்கள் மட்டும் மொத்த விற்பனை குறித்த தொகுப்பை பதிவு செய்யவேண்டும்.

தவறான கருத்து 7: புதிய ஜி.எஸ்.டி வரி முந்தைய மதிப்பு கூட்டு வரியை விட கூடுதல் ஆகும்.

உண்மை 7: புதிய ஜி.எஸ்.டி வரி கூடுதல் ஆக தெரியலாம். ஏனெனில் முன்பு இருந்த கலால் வரி மற்றும் பிற வரிகள் வெளிப்டையாக தெரியாமல் இருந்தது. இது தற்போது, அவை ஜி.எஸ்.டியில் உள்ளடக்கப்பட்டதால், ஜி.எஸ்.டி வரி அதிகமாக தெரிகிறது.