தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் சுலப நடைமுறைகள் வேண்டும்: கோவை சிறு, குறு நிறுவனங்கள் கோரிக்கை

0

சிறு, குறு மற்றும் நடுத்தர (MSME) நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர நிர்வாக அமைப்பு வேண்டும் என கோவையின் சிறு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. சமீபத்தில், கோவை கொடிசியாவில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும், மாநில மற்றும் மத்திய அரசு மானியங்கள் வழங்க வேண்டும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கு கொள்ள மார்க்கெட்டிங் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது கொடிசியா.

ஜி.எஸ்.டி வரி அமல் செய்யப்பட்ட பிறகு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மூலப்பொருட்களின் விலை 35 % கூடியிருக்கிறது என வணிக நிறுவனர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இதில் அரசு தலையீடு செய்து, ஜி.எஸ்.டிக்கு முன்னர் இருந்த விலையையே மூலப்பொருட்களுக்கு நிர்ணையிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

முன் வைக்கப்பட்ட மற்ற கோரிக்கைகள் : -

தேசிய சிறு தொழிற்சாலைகளின் கார்ப்பரேஷன் ஒட்டுமொத்தமாக மூலப்பொருட்களை கொள்முதல் செய்து,  மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு போட்டி விலையில் விற்பனை செய்ய வேண்டும். தேசிய சிறு தொழிற்சாலைகளின் கார்ப்பரேஷன் ஏற்கனவே மூலப் பொருட்களை சப்ளை செய்கிறது. எனவே, தேசிய சிறு தொழிற்சாலைகளின் கார்ப்பரேஷன் வங்கிகளோடும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களோடும் இணைந்து முத்தரபு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளலாம். கிரெடிட் காரண்டி நிதி திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்கள் சப்ளை செய்யலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

பாதுகாப்பு கொள்முதல் கொள்கை குறித்து - ஏற்கனவே இருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களினால் தொடங்கப்பட்ட ஒரு புது சிறப்பு கூட்டமைப்பே இந்தியாவின் ஆஃப்செட் பங்குதாரதாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்- இந்தியாவின் ஆஃப்செட் பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கு ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ப்ரயாரிட்டி துறை லெண்டிங் தரத்திற்கு இந்த அமைப்பும் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இருக்கும் சிறப்பு ஆஃப்செட் சலுகைகளை எல்லாம் இந்த சிறப்பு கூட்டமைப்பிற்கும் அளிக்க தகுதி இருப்பதாக கருதப்பட வேண்டும்.

இந்தியாவில் வளர்ந்து வரும் இரண்டாம்-அடுக்கு நிறுவனங்களில் கோவை முதன்மையானது. தென் இந்தியாவின் முக்கியமான தொழிற்சாலைகளின் கூடமாகவும் இது இருக்கிறது. நிறைய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் இருப்பதனால் கோவை ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளின் தேவைகளின் சரிபாதியை நிறைவு செய்வதால் ‘பம்ப் நகரம்’ என்றும் கோவை அழைக்கப்படுகிறது. நகைகள், வெட் கிரைண்டர்கள், கோழியினங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றை பெரிய அளவில் ஏற்றுமதி செய்வதும் கோயம்புத்தூர் தான்.